2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதிச் சேவை வழங்கநரான HNB FINANCE, தனது பணியாளர் படையில் பெண்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அவர்களை மேம்படுத்தும் விதமாகவும் 2026 சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெண் ஊழியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலந்துரையாடல் அமர்வுகள் மூலம் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு நாவலையிலுள்ள HNB Finance PLC தலைமை அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இதில் நாடு முழுவதிலுமுள்ள கிளை வலையமைப்பைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு படிநிலைகளில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் பங்கேற்பாளர்கள் அமைந்திருந்தனர். தலைமை அலுவலகத்திற்கு அருகாமையிலுள்ள கிளைகளின் ஊழியர்கள் நேரடியாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதேவேளை, ஏனைய கிளைகளின் ஊழியர்கள் நேரடி ஒளிபரப்பு ஊடாக இதில் இணைந்துகொண்டனர். இதேபோல், இந்த முன்முயற்சியானது அனைத்து பங்கேற்பாளர்களுக்குமான உள்ளடக்கல் மற்றும் அணுகல் வசதியை மேம்படுத்தியது.

இந்நிகழ்வின் கௌரவ விருந்தினராக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மனநல மருத்துவத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் பியஞ்சலி டி சொய்சா கலந்துகொண்டார். அத்துடன், HNB Finance நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்களும் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். மேலும், HNB Finance நிறுவனத்தின் சுமார் 200 பெண் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் பியஞ்சலி டி சொய்சா, மன உறுதி மற்றும் ஒருவரது மன ஆரோக்கியம் அல்லது விழிப்புணர்வை மேம்படுத்துவது குறித்து ‘உறுதியான மனம்’ (The Resilient Mind) எனும் தலைப்பில் நுண்ணறிவுமிக்க அமர்வொன்றை நடத்தினார். மன உறுதியைக் கட்டியெழுப்புவதற்குத் தடையாக இருக்கும் உளவியல் ரீதியான தடைகளை அடையாளம் காணுதல், ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் அவற்றிலிருந்து மீண்டு வருதல் குறித்து இந்தப் பங்கேற்பாளர்களிடையே அவர் கலந்துரையாடினார். வாழ்வின் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தன்னைத் தானே பலப்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளை இந்த அமர்வு வழங்கியதுடன், இது பெண்களுக்குப் புதிய வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்தது.

இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து HNB Finance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் கருத்துத் தெரிவிக்கையில், “பெண்கள் சமூகத்தின் ஓர் அங்கமாவார்கள். அவர்கள் இந்தத் தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் உலகிற்குப் பல்வேறுபட்ட திறன்களைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கே உரித்தான தனித்துவமான பலங்களைக் கொண்டுள்ளனர்; இது பணியிடத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வழங்குவதற்காகப் புத்தாக்கத்தையும் புத்திசாலித்தனத்தையும் ஒன்றிணைக்கிறது. பணியிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பலதரப்பட்ட மற்றும் மாறுபட்ட பாத்திரங்களை வகிப்பதன் மூலம், தேசத்திற்கு ஒரு நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.

“எமது பல நிதி உறுதிப்பாட்டு முன்முயற்சிகள் ஊடாக, HNB Finance நிறுவனத்தில் நாம் தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு தூணாக இருந்து வருகிறோம். அதிகளவிலான பெண்கள் இன்று பணியிடங்களில் இணைகிறார்கள்; ஒரு பொறுப்புள்ள நிதிப் பங்காளர் என்ற வகையில், ஒரு முழுமையான அணுகுமுறையின் ஊடாக அவர்களின் நிதி நிலையை மேம்படுத்துவது எமது கடமையாகும். எமது பெண் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருமே, வளர்ச்சி மற்றும் செழுமையைத் தவிர வேறெதையும் எமக்குக் கொண்டு வராத மதிப்புமிக்க பங்குதாரர்களாகவே கருதப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...