Prime Group இனால் பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்கு அலரி மாளிகையில் விசேட நிகழ்ச்சி முன்னெடுப்பு

Share

Share

Share

Share

நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Group, அண்மையில் அலரி மாளிகையிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் விசேட நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களினதும் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மதிப்பிற்குரிய கல்விமானும் கூட்டாண்மைத் தலைவருமான கலாநிதி கிரிஷாந்த பத்திராஜ அவர்களால் வழிநடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியானது, தொடர்பாடல், பொதுசன உறவுகள், தலைமைத்துவம் மற்றும் ஊக்கப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயப்பரப்புகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் கட்டளை அதிகாரி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விஷாந்த மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் சுமித்ர டி சில்வா உட்பட சுமார் 320 உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தத் திட்டம் வெற்றியடைவதற்கு ஜகத் விஷாந்த அவர்களின் தலைமைத்துவமும் நிறுவன ரீதியான வலுவும் கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், அது கலந்துகொண்ட அனைவரினதும் பரந்த பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

நாட்டிற்கும் சமூகத்திற்கும் நன்மையளிக்கும் திட்டங்களுக்கு Prime Group தொடர்ச்சியாக தனது ஆதரவை வழங்கி வருகின்றது. ஒரு தனியார் துறை முன்னோடி என்ற வகையில், இந்நிறுவனம் தனது ஆரம்பம் முதல் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையில் எவ்வித பாகுபாடுமின்றி, பொதுச் சேவையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகின்றது.

இந்தத் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, Prime Group தனது பணிகளை பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு அப்பாலும் விரிவுபடுத்தியுள்ளது. பொதுச் சேவையின் வினைத்திறனை வலுப்படுத்தும் நோக்கில் மாநகர முதல்வர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து ஏற்கனவே பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த ஒவ்வொரு முயற்சியும் பெருமளவு வெற்றியளித்துள்ளதுடன், தேசத்தின் பொதுச் சேவையை மேலும் மேம்படுத்துவதற்கும் மெருகூட்டுவதற்கும் இவ்வாறான திட்டங்களை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதன் ஊடாக இந்த உத்வேகத்தைத் தொடர Prime Group உறுதிபூண்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து Prime Group இன் இணைத் தவிசாளர் சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், நிறுவனத்தின் வெற்றிக்கு அச்சாணியாகத் திகழும் இலங்கைச் சமூகத்திற்கு கைமாறு செய்யும் ஒரு வழியாக, இவ்வாறான திட்டங்களுக்கு பங்களிப்பு செய்வதில் தான் மிகுந்த உறுதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஒரு நிறுவனமாக Prime மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே, சமூகத்திற்குப் பயன் அளிக்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரச சேவை ஒரு பொறிமுறையாக மிக முக்கியப் பங்காற்றுகின்றது. அதனை வலுப்படுத்தும் இவ்வாறான திட்டங்களுக்கு ஆதரவளிப்பது காலத்தின் தேவையும் அவசியமுமாகும். இந்த வகையில் பங்களிப்புச் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் ஒரு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ள Prime Group, அவர்களின் நலன்களுக்குத் தனது செயற்பாடுகளில் முதலிடம் அளித்து வருகின்றது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள Prime, காணி விற்பனை, வீடமைப்பு மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளிலும் நம்பிக்கையையும் தலைமைத்துவத்தையும் பெற்றுள்ளது .

இருப்பினும், Prime Group நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடு, வெறும் வர்த்தக ரீதியான பெறுபேறுகளால் மாத்திரம் அளவிடப்படுவதில்லை. தனது வெற்றிக்குத் துணைநிற்கும் சமூகத்திற்குத் தொடர்ச்சியாக நன்றியறிதலை வெளிப்படுத்தி வரும் இந்நிறுவனம், அர்த்தமுள்ள மற்றும் தனித்துவமான முயற்சிகளின் ஊடாக ஒரு சிறந்த கூட்டாண்மைச் சமூகப் பொறுப்புணர்வுப் பாரம்பரியத்தை உருவாக்கி வருகின்றது. எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில், நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்களின் நல்வாழ்விற்கும் தனது பலத்தையும் தொலைநோக்கையும் அர்ப்பணித்து, நிலைபேறான பெறுமதி கொண்ட திட்டங்களுக்குப் பங்களிப்பு செய்வதில் Prime Group உறுதியாக உள்ளது.

විදුලිබල ක්ෂේත්රයට සවියක් වෙමින් මෙරට...
Sri Lanka’s Largest Battery Energy...
Capital Trust Properties renews strategic...
ක්‍රීඩකයින් කෙටුම්පත් කිරීමට පෙර LPL...
தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க...
ශ්‍රී ලංකා කලාපීය ඇඟලුම් අපනයනකරුවන්ගේ...
HNB Finance වෙතින් 2025/26 මූල්‍ය...
Samsung අඛණ්ඩව වසර 7ක් පුරා...
ශ්‍රී ලංකා කලාපීය ඇඟලුම් අපනයනකරුවන්ගේ...
HNB Finance වෙතින් 2025/26 මූල්‍ය...
Samsung අඛණ්ඩව වසර 7ක් පුරා...
කොකා-කෝලා, ශ්‍රී ලංකා සමාගම වසර...