2026 ONE LOVE ரெகே நிகழ்ச்சி ஆகஸ்ட் 7-9 திகதிகளில்

Share

Share

Share

Share

தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர்.

இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார அம்சங்கள் மற்றும் ஒற்றுமையை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை ரசிகர்களுக்கு மூன்று நாட்களும் கிடைக்கும்.

பெந்தோட்டையின் அற்புதமான கடற்கரைப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள 2026 ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு, இலங்கைக்கும் தெற்காசியப் பிராந்தியத்திற்கும் ஒரு மைல் கல்லான சர்வதேச இசை மற்றும் பண்பாட்டு அனுபவமாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பொப் மார்லி, பீட்டர் டோஷ், பனி வைலர், மற்றும் கிரிகோரி ஐசக்ஸ் போன்ற உலக இசை, சமாதானம், அன்பு, மற்றும் ஒற்றுமைக்காக ஈடில்லா பணியாற்றிய ரெக்கே இசை உலகின் முன்னோடி அழியாப் புகழ் கலைஞர்களுக்கு இந்த இசை நிகழ்வில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அன்பு, பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடுவதற்காக ஒழுங்கமைக்கப்படும் இந்த “ONE LOVE” ரெக்கே இசை நிகழ்வினூடாக, இலங்கையைச் சர்வதேச மட்ட பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையமாக உலகுக்குக் கொண்டு செல்வதை எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு சிறப்புச் சலுகை: மேடைக்கு அருகிலுள்ள VIP Red Zone இல் 3 நாட்களுக்கும் செல்லுபடியாகும் நுழைவுச் சீட்டு ஒன்றை இப்போது ரூபாய் 60,000 வீதம் பெற்றுக்கொள்ளலாம்.

சாதாரண நுழைவுச் சீட்டு ஒன்று ரூபாய் 30,000 ஆகும். முன்பதிவுச் சிறப்புச் சலுகையின் கீழ் 20% தள்ளுபடியைப் பெற்றுக்கொள்ளலாம்.
இசை நிகழ்வின் Festival Pass வாங்கும் அனைவருக்கும் 2026 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் After Party –இல் கலந்துகொள்ள இலவச வாய்ப்பு கிடைக்கும்.

டிக்கெட்டுகளை www.onelove.lk இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மின்சார வாகன சந்தையில் புதிய மைல்கல்:...
டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்துவது உலகளாவிய மொத்த...
Prime Lands ශ්‍රී ලංකාවේ YouTube...
தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை...
Softlogic Life Leads Asia as...
A Milestone Achievement: Barista Coffee...
Kohomba by Autarch brings a...
ජොන් කීල්ස් පදනම සහ City...
A Milestone Achievement: Barista Coffee...
Kohomba by Autarch brings a...
ජොන් කීල්ස් පදනම සහ City...
Mount Lavinia வில் 61ஆவது காட்சியகத்தைத்...