2025/26 நிதியாண்டில் விதிவிலக்கான வளர்ச்சியைப் பதிவுசெய்து, வரிக்குப் பிந்தைய இலாபத்தை(PAT) இரட்டிப்பாக்கியுள்ள HNB Finance PLC

Share

Share

Share

Share

HNB Finance PLC, 2025/26 நிதியாண்டில் தனது வலுவான வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய இலாபம் (PAT), கடந்த ஆண்டை விட 120% அதிகரித்து 1.68 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இந்த அசாதாரண வளர்ச்சி, நிறுவனத்தின் நிலையான இலாபத்தன்மை, ஒழுக்கமான செயல்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

நிறுவனத்தின் வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 3.9 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது; இது 2024/25 நிதியாண்டில் பதிவாகிய 2.2 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க உயர்வாகும். நிறுவனத்தின் முதன்மை வணிகப் பிரிவுகளின் தொடர்ச்சியான விரிவாக்கம் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதன் விளைவாக, நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 61% அதிகரித்து 94.4 பில்லியன் ரூபாயாகவும், நிகர சொத்து மதிப்பு 22% உயர்ந்து 9.3 பில்லியன் ரூபாயாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

நிறுவனத்தின் கடன் வழங்கும் பிரிவு 70% வளர்ச்சி பெற்று 76.3 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது சந்தையில் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள வலுவான வரவேற்பையும், வாடிக்கையாளர்களின் ஆழமான ஈடுபாட்டையும் காட்டுகிறது. இதில், லீசிங் பிரிவு 98% வளர்ச்சியுடன் 51 பில்லியன் ரூபாயாகவும், தங்கக் கடன் பிரிவு 80% அதிகரித்து 16 பில்லியன் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. எளிமையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய நிதி தீர்வுகள் மூலம் பரந்த வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் நிறுவனத்தின் திறனை இது வெளிப்படுத்துகிறது.

HNB Finance PLC தனது வருவாய் விகிதங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. கடன் திட்டங்களின் வளர்ச்சியால் ஏற்பட்ட வலுவான வருவாயின் காரணமாக, சொத்து மீதான வருவாய் (ROA) 1.37% இலிருந்து 2.2% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பங்கு மூலதனம் மீதான வருவாய் (ROE) 11.54% இலிருந்து 19.96% ஆக உயர்ந்துள்ளது.

இந்தச் செயல்திறன் குறித்து, HNB Finance PLC நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் திஸாநாயக்க கூறுகையில், “2025/26 நிதியாண்டு எங்கள் நிறுவனத்திற்கு முக்கியமான ஆண்டாகும். இலாபத்தன்மை, சொத்துக்கள் மற்றும் கடன் வழங்குதல் ஆகிய துறைகளில் வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளோம். இது எங்களது மூலோபாய திட்டங்களின் வெற்றி, ஒழுங்குமுறை செயல்பாடுகள் மற்றும் எங்களின் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இலங்கையின் வங்கி அல்லாத நிதி நிறுவனத் துறையில் எங்கள் நிலையை மேலும் வலுப்படுத்துவதோடு, பொறுப்பான வளர்ச்சி, வலுவான நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்திற்கு மதிப்பு சேர்க்கும் நிதி தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறுகையில்: “இந்த ஆண்டின் செயல்திறன், எங்கள் முக்கிய வணிகப் பிரிவுகளான லீசிங், தங்கக் கடன்கள் மற்றும் பிற கடன் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தெளிவாகக் காட்டுகிறது. நிதி தீர்வுகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், பொறுப்பான வளர்ச்சி, வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடு மற்றும் செயல்திறன் ஒழுங்கு ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்துகிறோம். எதிர்காலத்தில், இடர் முகாமைத்துவம், சிறந்த சேவை வழங்கல் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நீண்டகால மதிப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதே எங்கள் முன்னுரிமையாகும்,” என்றார்.

HNB Finance PLC நிறுவனத்தின் 2025/26 முழு நிதியாண்டு சாதனை, அந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் காணப்பட்ட வலுவான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. நிறுவனம் தனது வரலாற்றில் முதல்முறையாக, ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 1 பில்லியன் ரூபாய் வரிக்கு பிந்தைய இலாபத்தை (PAT) கடந்துள்ளது. இந்த முழு ஆண்டு நிதி முடிவுகள், போட்டி நிறைந்த நிதிச் சேவை சூழலிலும் நிறுவனத்தின் வலுவான நிலையையும் நிலையான வளர்ச்சி திறனையும் உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் நீண்டகால பலத்தின்...
DIMO-வின் உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களுக்காக, லீசிங்...
2025/26 நிதியாண்டில் விதிவிலக்கான வளர்ச்சியைப் பதிவுசெய்து,...
Testing E-paper
Tesla Model Y කාර් රථයට...
புதிய வாகன மாடல்களுக்கான விரிவான லீசிங்...
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818...
Tesla Model Y කාර් රථයට...
புதிய வாகன மாடல்களுக்கான விரிவான லீசிங்...
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818...
Prime Group இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று...