ஜனசக்தி லைஃப், அதன் மொத்த எழுதப்பட்ட பிரீமியங்களில் 42% வளர்ச்சியுடன் ரூ.2.6 பில்லியனை பதிவு செய்து சந்தை மூலதனத்தில் 70% அதிகரிப்புடன் முன்னேறுகின்றது

Share

Share

Share

Share

காப்புறுதித் துறையில் முன்னணி நாமமும் JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தக நாமமுமான ஜனசக்தி லைஃப், 2026 நிதியாண்டை வலுவான செயல்திறனுடன் ஆரம்பித்துள்ளது. முடிவடைந்த மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் முக்கிய நிதி மற்றும் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் வலுவான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளன. நிறுவனம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க 42% வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், ரூ.2.6 பில்லியன் மொத்த எழுதப்பட்ட பிரீமியங்களைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்ச்சியான சந்தைத் தேவை, வலுப்படுத்தப்பட்ட விநியோக வலையமைப்பின் திறன் மற்றும் ஜனசக்தியின் காப்புறுதி தீர்வுகளின் மீதான வாடிக்கையாளர்களின் நிலையான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.

மதிப்பாய்வுக்குட்பட்ட காலத்தின் முடிவில், நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு முன்னைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.17 பில்லியனிலிருந்து ரூ.29 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது, பங்குதாரர்களுக்கு முக்கிய மதிப்பை உருவாக்கியதன் பின்னணியில், முதலீட்டாளர்களின் உயர் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இதனுடன், பங்கு விலை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.73.6 இலிருந்து 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.127.7 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், சந்தை மூலதன மதிப்பு பங்குதாரர் பங்கு முதலின் 1.72 மடங்காக பதிவாகியுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கை மேலும் வலுப்பெற்று, மொத்த சொத்துக்கள் ரூ.41 பில்லியனாக உயர்ந்துள்ளன. இது உறுதியான நிதி அடித்தளத்தையும் நீண்டகால வளர்ச்சியை நிலைநிறுத்தும் திறனையும் மேலும் விரிவுபடுத்துகிறது.

இக் காலாண்டில் புதிய வணிக வளர்ச்சி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்திய உத்திகள் மற்றும் வினைத்திறனான விநியோக வலையமைப்பு இதற்கு முக்கிய காரணிகளாக அமைந்தன. அதே வேளை, உரிமைகோரல்கள் மற்றும் பிரதிபலன்களிற்காக ரூ.985.8 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 26% உயர்வை பிரதிபலிக்கிறது. இதன் மூலம், காப்புறுதிதாரர்களுக்கான பொறுப்புகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் நிறைவேற்றும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைவர் அன்னிகா சேனாநாயக்க, “இக் காலாண்டின் செயல்திறன், ஒரு வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட காப்புறுதி வணிகத்தை உருவாக்கும் திட்டமிட்ட அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும். பிரீமியம் வருமானத்தில் ஏற்பட்ட 42% வளர்ச்சியானது, நெறிமுறையான நடைமுறைப்படுத்தல், வலுப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் காப்புறுதிதாரர்களுக்கு மதிப்பை வழங்கும் எங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.” என்று குறிப்பிட்டார்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே குறிப்பிடுகையில், “2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பெறுபேறுகள், எங்களின் மூலோபாய வழிகாட்டுதல் மற்றும் செயலாக்கத் திறன்களின் வலிமையை வெளிப்படுத்துகின்றன. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறை மற்றும் மேம்படுத்தப்பட்ட விநியோக செயல்திறன் காரணமாக, புதிய வணிக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்கிறோம். அதே நேரத்தில், விவேகமான இடர் தெரிவு மற்றும் செயல்பாட்டுத் திறன் மூலம் இலாபத்தன்மையையும் நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். இதன் மூலம், எங்கள் வளர்ச்சி நிலைத்தன்மையுடனும் விரிவுபடுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துகின்றோம். 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் முதலீட்டாளர் நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது, இது சந்தை மூலதனத்தில் ஏற்பட்டுள்ள 70% அதிகரிப்பின் ஊடாக பிரதிபலிக்கிறது. மேலும், வளர்ச்சி வேகம் தொழில்துறை சராசரியை விட அதிகமாக உள்ளது.” என்றார்.

இக் காலாண்டின் செயல்திறன், நிலையான விரிவாக்கம், நிதிசார் விவேகம் மற்றும் நீண்டகால பங்குதாரர் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி முன்னேறி வருவதை உறுதிப்படுத்துகிறது. மேலும், இலங்கையின் மாற்றமடைந்து வரும் காப்புறுதி துறையில் தனது நிலைப்பாட்டையும் நிறுவனம் மேலும் வலுப்படுத்தி வருகிறது.

ஜனசக்தி லைஃப் பற்றி

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி – https://www.janashakthi.com/

BYD ඉතිහාසයේ ප්‍රථම වරට මෝටර්...
TikTok හරහා මැණික් ගැන ලෝකෙටම...
எல்.பி.எல் 2026: உள்ளூர், சர்வதேச நட்சத்திர...
Samsung Sri Lanka Celebrates the...
Father’s Day Special: Meet the...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
පසුගිය වසරේදී ආයතනවලින් 71%කට අවම...