50 ஆண்டுகால கால்பந்துப் பயணம், 140 ஆண்டுகால புத்துணர்ச்சி: 2026 FIFA உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ மென்பானமாக Coca-Cola மீண்டும் கைகோர்ப்பு

Share

Share

Share

Share

ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்துத் தொடர் 2026′ மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், இத்தொடரின் உத்தியோகபூர்வ மென்பானமாக (Official Soft Drink) Coca-Cola மீண்டும் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் ஃபிஃபா உடன் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாகவும், 12 உலகக் கிண்ணத் தொடர்களாகவும் நீடிக்கும் தனது நீண்டகாலப் கூட்டாண்மையை Coca-Cola நிறுவனம் மேலும் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நாடுகளின் கூட்டுப் பங்களிப்பில் 48 அணிகள் போட்டியிடும் இந்த ஆண்டு ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரானது, வரலாற்றிலேயே மிகப்பெரிய உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடராகக் கருதப்படுகிறது. இந்தத் தொடரை முன்னிட்டு Coca-Cola நிறுவனம் “Feel it all” என்ற உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இது வெறும் விளையாட்டை மட்டும் கொண்டாடாமல், போட்டியின் ஒவ்வொரு கணத்தையும் – அதன் எதிர்பார்ப்பு, விறுவிறுப்பு, காணொளி உதவி நடுவர் மறுபரிசீலனையின் (VAR) போது ஏற்படும் பதற்றம் மற்றும் கடைசி நிமிட வெற்றி இலக்கின் போது வெளிப்படும் எல்லையற்ற மகிழ்ச்சி என அனைத்தையும் – உணர்வுப்பூர்வமாக வாழும் ரசிகர்களைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை ரசிகர்களைப் பொறுத்தவரை, இம்முறை ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டிகள் வட அமெரிக்காவில் நடைபெறுவதால், விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத போட்டிகளை அதிகாலை வேளைகளிலேயே பார்க்க முடியும். இதனால், இலங்கையில் உள்ள கால்பந்து ரசிகர்கள் நள்ளிரவு தாண்டியும், அதிகாலை வேளையிலும் வீடுகள், கடைகள் மற்றும் பணியிடங்களில் திரைகளுக்கு முன்னால் ஒன்றுகூடி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களுடன் இணைந்து இந்த கால்பந்து திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

உலகிற்குப் புத்துணர்ச்சியூட்டும் தனது 140 ஆண்டுகாலப் பெருமைமிக்க பாரம்பரியத்தை Coca-Cola நிறுவனம் கொண்டாடும் இந்த 2026 ஆம் ஆண்டில், ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடர் மைல்கல் அதற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை Coca-Cola நிறுவனம் அண்மையில் இலங்கையிலும் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்தியத் தலைவர் மரியோ பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “கால்பந்தாட்டத்தின் இந்த மிகப்பெரிய கொண்டாட்டம் உலகெங்கிலும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் சொந்தமானது. இதில் பங்கேற்பதற்காக நள்ளிரவையும் பொருட்படுத்தாது விழித்திருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கை ரசிகர்களும் அடங்குவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, ரசிகர்களின் இத்தகைய பகிரப்பட்ட உணர்வுப்பூர்வமான தருணங்களில் Coca-Cola எப்போதும் உடனிருந்துள்ளது. அந்த வகையில், இந்த 2026ஆம் ஆண்டிலும் அவர்களோடு இணைந்திருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.

உலகளாவிய ரீதியில், Coca-Cola நிறுவனம் இந்த உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு பல சுவாரஸ்யமான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அதில், 30 நாடுகளைச் சேர்ந்த 75 நகரங்களுக்கு பயணிக்கும் வரலாற்றின் மிகப்பெரிய ‘ஃபிஃபா உலகக் கிண்ணக் கிண்ண உலா’ (Trophy Tour) மற்றும் உலகின் முன்னணி கால்பந்து வீரர்களின் அரிய ஸ்டிக்கர்களைச் சேகரிக்கும் வகையில் ‘Panini featuring’ நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ள விசேட கூட்டாண்மை ஆகியன முதன்மையானவை.

AI மூலம் விளம்பரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும்...
50 ஆண்டுகால கால்பந்துப் பயணம், 140...
LANKATILES Launches Sri Lanka’s First...
500 ட்ரோன்களின் கண்கவர் காட்சியுடன் பிரம்மாண்டமாகத்...
LANKATILES ශ්‍රී ලංකාවේ පළමු සූර්ය...
ඩ්‍රෝන 500ක ආකර්ෂණීය සංදර්ශනයක් සමඟින්...
Huawei සමාගම, AHEAD වැඩසටහන ආරම්භ...
UN Global Compact Network Sri...
ඩ්‍රෝන 500ක ආකර්ෂණීය සංදර්ශනයක් සමඟින්...
Huawei සමාගම, AHEAD වැඩසටහන ආරම්භ...
UN Global Compact Network Sri...
Sophos Named a Champion in...