இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன மற்றும் இலகுவான டிஜிட்டல் நிதிச் சேவை அனுபவத்தை வழங்கும் நோக்கில், LB Finance நிறுவனம் தனது வலையமைப்பு (Network) கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்தியுள்ளது. தனது தலைமை காரியாலயம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிளைகளையும் உள்ளடக்கிய இந்த நவீனமயமாக்கல் திட்டத்திற்காக, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei உடன் LB Finance கைகோர்த்துள்ளது. சேவைகளின் நம்பகத்தன்மை, வேகம் மற்றும் தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதே இக்கூட்டு முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த LB Finance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரோஷன் உடகே, “எமது இந்த டிஜிட்டல் சேவை நவீனமயமாக்கல் மூலம், பழைய வலையமைப்பு கட்டமைப்புகளால் வாடிக்கையாளர்கள் எதிர்கொண்ட சிரமங்களுக்கு தீர்வுகள் கிடைப்பதுடன், டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்காக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது. இந்த உட்கட்டமைப்பு தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் மிகவும் வேகமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்க LB Finance நிறுவனத்திற்கு வழிவகுக்கிறது. அத்துடன், cloud அடிப்படையிலான செயலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் இயங்கும் கருவிகள் போன்ற நவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கும் இது அடித்தளமாக அமைகிறது.” என்று குறிப்பிட்டார்.
இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தலைமை காரியாலயத்திற்கும், கிளைகளுக்கும் இடையிலான இணைப்புத்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வயர்லெஸ் வலையமைப்பு வசதிகள், முக்கிய வலையமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் முக்கியமான தரவுகளைப் பாதுகாப்பதற்கான காப்புப் பிரதி அமைப்புகள் (Backup Systems) ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் எவ்வித தடையுமின்றி, பாதுகாப்பான முறையில் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் நம்பகமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், எவ்வித தடையுமின்றி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், நிதித் தரவுகளின் பாதுகாப்பு குறித்து முழுமையான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் முடியும்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜாங் ஜின்ஸே (Zhang Jinze),” இந்தத் திட்டத்திற்காக LB Finance நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இரு நிறுவனங்களினதும் கூட்டு முயற்சியின் மூலம், மிக வேகமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்கும், AI மற்றும் cloud போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வலையமைப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி நிறுவனங்களுக்கு இத்தகைய நவீன மற்றும் நம்பகமான உட்கட்டமைப்புகள் இன்றியமையாததாகும். உள்ளூர் தலைமைத்துவமும், உலகளாவிய தொழில்நுட்ப நிபுணத்துவமும் ஒன்றிணைவதன் மூலம் எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும், செயல்திறனை அதிகரிக்க முடியும் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.” என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது’ என்றார்.
அண்மையில் நடைபெற்ற ‘MWC பார்சிலோனா 2026’ உலகளாவிய மாநாட்டில் Huawei நிறுவனத்தால் அறிமுகப்படுத்திய Banking AI, Foundation Model Solutions, SuperPoD, AI Data Platform மற்றும் Xinghe AI Network போன்ற அதிநவீன தொழில்நுட்பத் தீர்வுகளுடன் LB Finance நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் மிகச்சரியாகப் பொருந்துகிறது. இம்மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் திறமையான மற்றும் தடையற்ற வங்கிச் சேவை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





