சம்மேளன ஒழுங்குமுறை சீர்திருத்தம் மற்றும் நோயாளி அணுகலை மேம்படுத்தி வரும் நிலையில், சாந்த பண்டார மீண்டும் SLCPI தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

Share

Share

Share

Share

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் (SLCPI) 65ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில், சன்ஷைன் ஹெல்த்கேர் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சாந்த பண்டார 2026/27ஆம் ஆண்டுக்கான தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதாரப் பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். இவருடன் அரசாங்கப் பிரதிநிதிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், முன்னாள் தலைவர்கள், உறுப்பு நிறுவனங்கள் மற்றும் இத்துறை சார்ந்த ஏனைய பங்குதாரர்களும் கலந்துகொண்டனர்.

பண்டாரவின் இந்த மறுநியமனம், சங்கத்தின் நிர்வாகம், நெறிமுறைத் தரநிலைகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்திய சீர்திருத்தத் திட்டங்களுக்குத் தொடர்ச்சியை வழங்குகிறது. அவரது புதிய பதவிக்காலத்தில், சம்மேளனம் 2025/26 ஆம் ஆண்டில் அடைந்த முன்னேற்றங்களை நடைமுறை ஒழுங்குமுறை மேம்பாடுகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும். இது இலங்கையில் உயர்தர மருந்துகள் தட்டுப்பாடின்றி, எளிதாகவும், மலிவான விலையிலும் கிடைப்பதற்கு ஆதரவளிக்கும்.

இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI), 70க்கும் மேற்பட்ட மருந்து இறக்குமதியாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன் உறுப்பினர்கள் இலங்கையின் மொத்த தனியார் மருந்துச் சந்தையில் 90%க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளனர். மேலும், இத்துறை நேரடியாக 80,000க்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது; மறைமுகமாக சுமார் 4,00,000 பேரின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கிறது.
கடந்த ஆண்டைப் பற்றிப் உரையாற்றிய பண்டார, உள்நாட்டிலும் உலகளவிலும் நீடித்த அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இத்துறை செயல்பட்டதாகக் கூறினார். மாற்று விகித ஏற்ற இறக்கம், சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்ட தடங்கல்கள், சரக்கு போக்குவரத்து கட்டணம், காப்புறுதி, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் உயர்வு, மற்றும் நுகர்வோரின் வாங்கும் திறன் வீழ்ச்சி ஆகியன மருந்து விநியோகச் சங்கிலி மற்றும் வணிகத்தின் நம்பகத்தன்மை மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தின.

இந்த சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனமானது, (SLCPI) சுகாதார அமைச்சு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு (NMRA) மற்றும் இதர பங்குதாரர்களுடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்பட்டது. மேலும், மருந்து விலை நிர்ணயம், இறக்குமதி உரிமப் புதுப்பிப்பு மற்றும் மருந்துகளின் தடையற்ற விநியோகம் ஆகியவற்றில் சான்றுகள் அடிப்படையிலான பரிந்துரைகளையும் சமர்ப்பித்தது.

பண்டாரவின் முதல் பதவிக்காலத்தின் முக்கிய சாதனையாக, விரிவான ஆலோசனைகள், சட்ட ஆய்வுகள் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புக்குப் பிறகு, சங்கத்தின் புதிய ‘நிறுவனக் குறிப்பாணை’ (Articles of Association) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகள், சங்கத்திற்கு மிகவும் வலுவான ஒரு சட்டப்பூர்வ அடித்தளத்தை வழங்குவதுடன், அதன் நிர்வாகக் கட்டமைப்பைத் தெளிவுபடுத்துகின்றன; மேலும் உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளையும் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI), நேர்மை, வெளிப்படைத்தன்மை, நெறிமுறை சார்ந்த மருந்து விளம்பரங்கள் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், தனது ‘நடத்தை விதிகளினை’ (Code of Conduct) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. இந்த நடத்தை விதிகள், சுகாதார நிபுணர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் தொழில் கூட்டாளர்களுடனான தொடர்புகளுக்கான தரநிலைகளை நிர்ணயிப்பதுடன், இத்துறையின் மீதான பொறுப்புணர்வையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்துகின்றன.

தனது மறுநியமனம் குறித்து கருத்து தெரிவித்த சாந்த பண்டார, “கடந்த ஆண்டானது சங்கத்தின் நிறுவன ரீதியான அடித்தளங்களை வலுப்படுத்துவதாகவும், மருந்துத் துறைக்கு ஒரு நம்பகமான மற்றும் ஆக்கப்பூர்வமான குரல் இருப்பதை உறுதி செய்வதாகவும் அமைந்தது. வரவிருக்கும் ஆண்டானது நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அர்த்தமுள்ள முடிவுகளாக மாற்றுவதாக இருக்க வேண்டும். மருந்து விநியோகஸ்தர்களின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில், நோயாளிகளுக்கான மருந்து அணுகலைப் பாதுகாக்கும் ஒரு ஒழுங்குமுறை மற்றும் விலை நிர்ணயச் சூழலை உருவாக்குவதே, அரசாங்கம், சுகாதார அமைச்சு மற்றும் NMRA ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதில் எமக்குள்ள முதன்மை நோக்கமாகும்,” என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “மருந்து விநியோகச் சங்கிலி தொடர்ச்சியான அழுத்தத்திற்கு உள்ளாகும்போது, இறுதியில் மருந்து தட்டுப்பாடு, மருந்துகள் கிடைப்பது குறைதல் மற்றும் குறைந்த தெரிவுகள் ஆகியவற்றால் நோயாளிகளே பாதிக்கப்படுகின்றனர். எனவே, எங்களது இந்த வாதிடுதல் என்பது வெறும் மருந்துத் துறையின் வணிக நலன்களுக்கானது மட்டுமல்ல. மாறாக மருந்து விநியோகத்தின் தடையற்ற தன்மையைப் பாதுகாப்பதும், இலங்கையர்களுக்குப் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் தரமான மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதுமாகும்,” என கூறினார்.

அண்டை நாடுகள் மற்றும் இதேபோன்ற வளர்ந்து வரும் பிற சந்தைகளின் சிறந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒழுங்குமுறை மேம்பாடுகளுக்காக இந்தச் சங்கம் தொடர்ந்து குரல் கொடுக்கும். தகுந்த கண்காணிப்பு மற்றும் தரக் கட்டுப்பாடுகளைப் பேணும் அதேநேரத்தில் மருந்துத் துறை திறம்பட செயல்படுவதற்கும், நாட்டின் சுகாதாரத் தேவைகளைத் பூர்த்தி செய்வதற்கும் வழிவகுப்பதே இதன் நோக்கமாகும்.

இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தனது நடத்தை விதிகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். மேலும், மருந்து விளம்பரதாரர்கள் சங்கத்தை (Pharma Promoters Association) வலுப்படுத்தும்; மருத்துவப் பிரதிநிதிகள் மற்றும் மருந்துத் துறை நிபுணர்களிடையே தொழில்முறைத் திறன் மற்றும் அறிவு மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும். அத்துடன் அறிவுப் பகிர்வு, நெறிமுறை சார்ந்த விவாதங்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பிற்கான ஒரு தளத்தையும் இது முன்னோக்கிக் கொண்டு செல்லும்.

சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களை எந்தவொரு தனிப்பட்ட பங்குதாரராலும் தனித்து தீர்க்க முடியாது. இதில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம், ஒழுங்குமுறை அதிகாரிகள், சுகாதார நிபுணர்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோரிடையே நம்பிக்கையான கூட்டுறவு அவசியம். ஆதாரங்களுடன் வாதாடுவது, வெளிப்படைத்தன்மையுடன் தொடர்புகொள்வது மற்றும் நோயாளிகளை எங்களது பணியின் மையப்புள்ளியாக வைப்பது ஆகியவற்றின் மூலம், இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) ஒரு பொறுப்பான மற்றும் தீர்வு சார்ந்த பங்காளியாகத் தொடர்ந்து செயல்படும்,” என்று பண்டார கூறினார்.

பண்டாரவின் புதிய தலைமையின் கீழ், இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI), நெறிமுறையான, பாதுகாப்பான மற்றும் தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் மருந்துத் துறையை உருவாக்க தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும். இது அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான மற்றும் நிலையான ஒரு சுகாதார அமைப்பை உருவாக்கப் பங்களிக்கும்.

2026 முதல் அரையாண்டில் ரூ. 7.2...
ஆசியாவின் புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவு...
இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator...
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல்...
BYD Launches RACCO in Japan,...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z...