ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை முன்னிலைப்படுத்தி ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் ‘City of Dreams Sri Lanka’

Share

Share

Share

Share

தெற்காசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாக 2025 ஆம் ஆண்டு கொழும்பில் மிக விமர்சையாகத் ஆரம்பிக்கப்பட்ட City of Dreams Sri Lanka, நாட்டின் சுற்றுலாத் துறையில் ஒரு பெரும் படியை முன்னோக்கி வைத்து அண்மையில் தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை முதலீடான இது, இவ்வாறான அமைப்பில் இலங்கையின் முதலாவது ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாகவும் திகழ்கிறது. இலங்கை சுற்றுலாத் துறையில் ஒரு பாரிய மாற்றத்திற்கு வித்திட்டுத் ஆரம்பிக்கப்பட்ட City of Dreams Sri Lanka, தனது ஓராண்டுப் பயணத்தில் பல தனித்துவமான சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே ஆடம்பர விருந்தோம்பல், உலகத்தரம் வாய்ந்த உணவு வகைகள், பொழுதுபோக்கு, உயர்தர வாழ்க்கை முறை அனுபவங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வணிக மாநாடுகள் மற்றும் கண்காட்சி (MICE) வசதிகள் ஆகிய அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் அனுபவிக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதன்காரணமாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டுவர முடிந்துள்ளது.

இந்த நிலையில், ஓராண்டு கால வெற்றிப் பயணத்தைக் குறித்துக் கருத்து தெரிவித்த City of Dreams Sri Lanka-வின் துணைத் தலைவரும், பொது முகாமையாளருமான திரு. மைக்கேல் ஹபாஷி, “எமது அணியின் அர்ப்பணிப்பு, விருந்தினர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை மற்றும் எங்களது பங்காளிகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் சாத்தியமான ஒரு சிறந்த கொண்டாட்டமாக இந்த முதலாம் ஆண்டு நிறைவைச் சுட்டிக்காட்ட முடியும். பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பலை முன்னிலைப்படுத்திய சுற்றுலா தளமாக இலங்கையை சர்வதேச மட்டத்தில் சிறப்படையச் செய்வதற்கு நாங்கள் வழங்கும் பங்களிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஓராண்டு நிறைவைக் குறிக்கும் இந்த தருணத்தில், எங்கள் விருந்தினர்களுக்காகப் புதிய அனுபவங்கள், சர்வதேச மட்டத்திலான நிகழ்வுகள் மற்றும் புதுமைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, உறுதியுடன் முன்னோக்கிச் செல்ல நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.” எனக் கூறினார்.

இதனிடையே, City of Dreams Sri Lanka-வின் ஓராண்டை சிறப்பைக் குறிக்கும் வகையில், சர்வதேச அளவிலான பல்வேறு நிகழ்வுகள், சிறப்பான உணவு அனுபவங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா சேவைகளுடன் பொழுதுபோக்கு மற்றும் நவீன அனுபவங்கள் பலவற்றை விருந்தினர்களுக்குக் கொண்டு வர City of Dreams Sri Lanka நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த சேவைகளைப் பரிபூரணமாக நிறைவேற்றுவதற்காக இரண்டு ஆடம்பர ஹோட்டல்கள், பரந்த அளவிலான உணவகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் அதிநவீன விழா மண்டப வசதிகளுடன் கூடிய City of Dreams Sri Lanka, கொழும்பு நகரத்தை தெற்காசியாவின் முன்னணி சுற்றுலாத் தளமாக மாற்ற முடிந்துள்ளது.

ஒரு சுற்றுலாத் தளமாக மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வரும் City of Dreams Sri Lanka, இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் மூலம் விருந்தோம்பல், பொழுதுபோக்கு, நிகழ்வு ஏற்பாடுகள், சில்லறை விற்பனை மற்றும் அது தொடர்பான பிற துறைகளில் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடிந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு சிறப்பு வாய்ப்பாக அமைந்துள்ள இது, நாட்டின் வர்த்தக சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பலமாக இருக்கும்.

இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு போன்ற முக்கிய சர்வதேச சந்தைகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பும் ஆர்வமும் தற்போது இந்த வளாகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. ஆடம்பர தங்குமிடம், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் பெற முடிவதே இதற்குக் காரணமாகும். தங்களின் பிராந்திய ஈர்ப்பு மற்றும் சர்வதேச பங்காளித்துவங்களைப் பயன்படுத்தி, உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக கொழும்பு நகரத்தின் பெயரை மேலும் பலப்படுத்துவதே City of Dreams Sri Lanka-வின் முதன்மை நோக்கமாகும்.

நிலையான வளர்ச்சி மற்றும் பொறுப்பான செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியுள்ள City of Dreams Sri Lanka, NUWA மற்றும் Cinnamon Life ஆகிய இரு ஹோட்டல்கள் மூலமாக வளங்களைப் பொறுப்புடன் நிர்வகித்தல், ஆற்றல் திறன், கழிவுகளைக் குறைத்தல், பல்லுயிர் திட்டங்கள், சமூகப் பங்களிப்பு மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளில் கவனம் செலுத்தி, தங்களது சுற்றுச்சூழல், சமூக மற்றும் நல்ஆளுமை (ESG) அர்ப்பணிப்புகளைத் தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

தெற்காசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாக, சர்வதேச அளவிலான பொழுதுபோக்கு அனுபவங்களை அதிகமாக ஈர்த்தல், ஆடம்பர உணவு மற்றும் வாழ்க்கை முறை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், MICE (வணிக மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) மற்றும் நிகழ்வுகளை உயர்த்தல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் முதலீடு செய்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவையின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்த சேவையை வழங்குவது City of Dreams Sri Lanka–வின் நோக்கமாகும். அந்த இலக்கை முன்னோக்கி எடுத்துச் சென்று, இலங்கையை சர்வதேச அளவில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மேலும் உயர்த்த அவர்களால் முடியும்.

Little Japan Founder Dr. Ruwan...
சமர்செட் எஸ்டேட்: காலத்தால் அழியாத ஒருமைப்பாடு
திறந்தவெளி சமையலறை முதல் நவீன வடிவமைப்பு...
இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...
TikTok இல் AI உள்ளடக்கங்களை எளிதாகக்...
ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...
உலகளாவிய பொழுதுபோக்கு வரைபடத்தில் கொழும்பிற்கு புதிய...
ADRA Ceylon Elevates Ceylon Tea...
ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...
உலகளாவிய பொழுதுபோக்கு வரைபடத்தில் கொழும்பிற்கு புதிய...
ADRA Ceylon Elevates Ceylon Tea...
First Capital, மேம்படுத்தப்பட்ட நீர்கொழும்புக் கிளை...