TikTok இல் AI உள்ளடக்கங்களை எளிதாகக் கண்டறிய புதிய வசதி அறிமுகம்

Share

Share

Share

Share

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை பயனர்கள் எளிதில் கண்டறிந்து புரிந்து கொள்வதற்கும், பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தைப் பெறுவதற்கும் ஏதுவாக TikTok நிறுவனம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. AI தொழில்நுட்பம் உள்ளடக்க உருவாக்கத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் புதிய கல்வி வழிகாட்டல்கள், ஸ்பேம் ((Spam) கண்டறியும் முறைகள் மற்றும் சர்வதேச கூட்டணிகளை TikTok விரிவுபடுத்தி வருகிறது.

உற்பத்தித்திறன் AI தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளுக்குப் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கினாலும், நம்பகமான படைப்பாளர்களைப் பாதிக்கும் வகையிலான ஸ்பேம்களை பெருமளவில் உருவாக்க இது தவறாகப் பயன்படுத்தப்படலாம். TikTok நிறுவனம் ஸ்பேம் கணக்குகளை நீண்டகாலமாக தடைசெய்து வருவதுடன், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 86 மில்லியனுக்கும் அதிகமான போலி கணக்குகளை நீக்கியுள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுப்பதற்காக, AI மூலம் உருவாக்கப்படும் ஸ்பேம்களைப் பதிவிடும் கணக்குகளைக் கண்டறியும் மேம்பட்ட அமைப்புகளை TikTok விரைவில் பரிசோதனை செய்யவுள்ளது. குறிப்பாக, அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள், நிதி ஆலோசனைகள் மற்றும் சுகாதாரம் சார்ந்த தகவல்கள் போன்ற பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் துறைகளில் இந்தச் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

பயனர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு கல்வியறிவு இன்றியமையாததாகும். அந்த வகையில் AI எழுத்தறிவை வலுப்படுத்துவதற்காக, TikTok நிறுவனம் ‘செய்தி மற்றும் ஊடக எழுத்தறிவு கூட்டணி’ (NAMLE) மற்றும் புகழ்பெற்ற Deepfake ஆராய்ச்சியாளரான ஹென்றி அஜ்டர் ஆகியோருடன் இணைந்து ஒரு நடைமுறை வழிகாட்டியை உருவாக்கியுள்ளது. இது பயனர்கள் AI தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்ளவும், AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அடையாளம் காணவும், AI கருவிகளைப் பொறுப்புடன் பயன்படுத்தவும் உதவும். இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் வாரங்களில் இலங்கையில் செயலிக்குள்ளான AI எழுத்தறிவு மையம் (In-app AI literacy hub) ஒன்றை TikTok அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மூலம் பயனர்கள் AI தொடர்பான தலைப்புகளைத் தேடும்போதெல்லாம் அவர்களுக்குத் தேவையான கல்வி வளங்களும், AI உள்ளடக்கங்களை அடையாளம் காண்பதற்கான நடைமுறை வழிகாட்டல்களும் வழங்கப்படும். TikTok இல் AI உடனான தங்களின் அனுபவங்கள் குறித்து பயனர்கள் தெளிவான பின்னணி, நம்பிக்கை மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என நம்புவதாக வுமைவுழம இன் உலகளாவிய பொதுக் கொள்கைக் குழுவின் AI பிரிவின் தலைவர் டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மேலும், AI எழுத்தறிவை ஊக்குவிக்கும் நம்பகமான அமைப்புகளில் TikTok தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. 2025 நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் கீழ், ‘No Filtr’ மற்றும் ‘Raspberry Pi’ போன்ற கூட்டாளர்கள் தயாரித்த கல்வி சார்ந்த உள்ளடக்கங்கள் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன. இந்தத் திட்டத்திற்காக TikTok இதுவரை 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக ஒதுக்கியுள்ளதுடன், உலகளவில் மேலும் பல சமூகங்களைச் சென்றடையும் வகையில் இந்த முதலீட்டை விரிவுபடுத்தவுள்ளது.

இலங்கையிலும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விழிப்புணர்வூட்டும் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த உள்ளடக்கங்களை உருவாக்கும் படைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. @sanjayadilanka0, @nuwankvitz, @secret_shanu மற்றும் @akila_weera போன்ற உள்ளூர் படைப்பாளர்கள் பயிற்சிகள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலம் AI கருவிகளைப் பற்றி தங்களது பார்வையாளர்களுக்குப் புரியவைத்து வருகின்றனர். இத்தகைய ஈர்க்கக்கூடிய மற்றும் உள்ளூர் சூழலுக்குப் பொருத்தமான உள்ளடக்கங்கள் மூலம், AI தொழில்நுட்பத்தை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்திப் புதிய யோசனைகளை உருவாக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள இவர்கள் இலங்கையர்களுக்கு உதவுகிறார்கள்.

அதிகப்படியான படைப்பாளர்கள் AI கருவிகளைப் பயன்படுத்தி வரும் நிலையில், உள்ளடக்கங்கள் AI மூலம் உருவாக்கப்பட்டவையா அல்லது மாற்றியமைக்கப்பட்டவையா என்பதைப் பயனர்கள் அறிந்துகொள்ளும் தொழில்நுட்பங்களை TikTok வலுப்படுத்தி வருகின்றது.

‘C2PA Content Credentials’ தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்திய முதல் வீடியோ தளம் என்ற பெருமையைத் தொடர்ந்து, தொழில்துறை அளவிலான வெளிப்படையான AI உள்ளடக்கத் தரநிலைகளை மேம்படுத்த TikTok இப்போது C2PA வழிநடத்தல் குழுவிலும் இணைந்துள்ளது. TikTok நிறுவனம் தனது சொந்த கண்ணுக்குத் தெரியாத வாட்டர்மார்க்கிங் (Invisible watermarking) தொழில்நுட்பம் மற்றும் கிரியேட்டர் லேபிள்கள் மூலம் இதுவரை 3 பில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களுக்கு அடையாள முத்திரையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அனைத்து திட்டங்களும் AI தொழில்நுட்பத்தை ஆக்கத்திறன் மற்றும் நேர்மறையான பயனர் அனுபவங்களுக்கான ஒரு கருவியாக வைத்திருப்பதற்கான TikTok இன் பரந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். Smart Split மற்றும் AI Outline போன்ற ஆக்கப்பூர்வமான AI கருவிகளை உருவாக்குவதிலும், பயனர்கள் எவ்வளவு AI உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கும் வசதிகளிலும் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றது. AI தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் சூழலில், பயனர்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் உள்ளடக்கங்களை உருவாக்கவும் கண்டறியவும் TikTok தொடர்ந்து கல்வி, வெளிப்படைத்தன்மை மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும்.

Little Japan Founder Dr. Ruwan...
சமர்செட் எஸ்டேட்: காலத்தால் அழியாத ஒருமைப்பாடு
திறந்தவெளி சமையலறை முதல் நவீன வடிவமைப்பு...
இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...
TikTok இல் AI உள்ளடக்கங்களை எளிதாகக்...
ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...
உலகளாவிய பொழுதுபோக்கு வரைபடத்தில் கொழும்பிற்கு புதிய...
ADRA Ceylon Elevates Ceylon Tea...
ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...
உலகளாவிய பொழுதுபோக்கு வரைபடத்தில் கொழும்பிற்கு புதிய...
ADRA Ceylon Elevates Ceylon Tea...
First Capital, மேம்படுத்தப்பட்ட நீர்கொழும்புக் கிளை...