Prime Group கம்பஹாவில் தனது புதிய கிளையைத் திறந்து, ரியல் எஸ்டேட் தீர்வுகளை சமூகங்களுக்கு மேலும் அண்மைப்படுத்துகிறது

Share

Share

Share

Share

Prime Group, இலங்கையின் பல விருதுகளைப் பெற்ற மற்றும் நம்பிக்கைக்குரிய ரியல் எஸ்டேட் வர்த்தக நாமம், தனது எட்டாவது கிளையை கம்பஹா, இலக்கம் 06, மங்கள வீதியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் தனது நாடளாவிய பிரசன்னத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், ஒரு முக்கிய மைல்கல்லையும் எட்டியுள்ளது. நாட்டின் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றான கம்பஹாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சேவை மையம், நாடு முழுவதிலுமான Prime Group இன் பிரசன்னத்தை வலுப்படுத்துவதுடன், நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு ரியல் எஸ்டேட் தீர்வுகளை மேலும் அருகாமையில் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் காலை 8:30 மணி முதல் கம்பஹா கிளைக்கு வருகை தந்து, தங்களது அனைத்து ரியல் எஸ்டேட் தேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மூலோபாய ரீதியாக மிகப் பொருத்தமான இடத்தில் அமைந்துள்ள கம்பஹா கிளை, நவீன மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, இலகுவான அணுகல், சௌகரியம் மற்றும் சிறந்த சேவை என்பவற்றை வழங்கும் Prime Group இன் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிப்பதுடன், நவீன ரியல் எஸ்டேட் துறையில் நாட்டின் உண்மையான முன்னோடியாக தனது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Prime Group இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரன்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “கம்பஹாவில் நமது பிரசன்னம் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எமது ஆரம்ப காலத்திலிருந்து நிறுவனத்தின் முதலாவது காணித் திட்டம் அமைந்த இடமும் இதுவாகும். இங்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கிளை ஒன்றை திறந்துள்ளமையினூடாக, குழுமத்தின் நீண்டகால வளர்ச்சி மூலோபாயத்தை நோக்கிய ஒரு தீர்க்கமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பாதையை ஒட்டி மிகச்சிறந்த முறையில் அமைந்துள்ள கம்பஹா, மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு வணிக மற்றும் போக்குவரத்து மையமாக உருவெடுத்துள்ளது. இந்த முக்கியமான பிராந்தியத்தில் எங்களது பிரசன்னத்தை வலுப்படுத்துவதானது, நோக்கம் கொண்ட விரிவாக்கம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை மற்றும் நாம் சேவை செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குவதில் Prime நிறுவனத்திற்குள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.” என்றார்.

கம்பஹாவில் தனது 30 ஆண்டுகாலப் பயணத்தில் Prime Group, மாவட்டத்தினுள் தனது பிரசன்னத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதுடன், நம்பகமான ரியல் எஸ்டேட் தீர்வுகளை தொடர்ச்சியாக வழங்கி, பிராந்தியத்திற்கான அடையாளமிக்க பல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. 2025 டிசம்பரில் பிரைம் குழுமத்தின் களுத்துறை கிளை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கம்பஹா கிளை திறக்கப்பட்டுள்ளமையானது, பிராந்திய வளர்ச்சியில் நிறுவனம் கட்டியெழுப்பியுள்ள அந்த நீண்டகால மரபின் ஒரு அங்கமாக திகழ்கிறது.

முன்னர் கம்பஹாவில் ஒரு நேரடிக் கிளை நிறுவப்பட்டிருக்காவிட்டாலும், தனது சேவைகளுக்கான தொடர்ச்சியான அணுகலையும் வாடிக்கையாளர் ஆதரவையும் உறுதி செய்வதன் மூலம் கம்பஹா மாவட்டத்திற்கு சேவை செய்ய Prime Group எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தது. கடந்த காலங்களில், கம்பஹாவில் 3,000 க்கும் மேற்பட்ட காணி அபிவிருத்தித் திட்டங்களையும், 12 வீடமைப்பு மற்றும் தொடர்மாடி அபிவிருத்தித் திட்டங்களையும் Prime Group வெற்றிகரமாகக் கையளித்து, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் வலுவான அடித்தளத்தை கட்டியெழுப்பியுள்ளது. வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான பலதரப்பட்ட ரியல் எஸ்டேட் அபிவிருத்திகள் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன. ‘Yolo’, ‘Venezia’ மற்றும் ‘J’adore’ போன்ற புத்தாக்கமான திட்டங்களுடன், ‘The Palace’, ‘The Life’, ‘Prime Evoke’ போன்ற குடியிருப்பு வாழ்க்கைமுறை அபிவிருத்திகளும், முதன்மையான காணி அபிவிருத்தித் திட்டங்களும் இணைந்து, விதிவிலக்கான வாழ்க்கை அனுபவங்களை வழங்குவதற்கான Prime இன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. மாவட்டத்தில் தனது பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை இடமாற்றத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ‘Prime Kadawatha’ திட்டத்தையும் Prime Group அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையற்ற போக்குவரத்தை வழங்கும் இது, கடவத்தையில் உள்ள ஒரே உயர்மாடி தொடர்மாடித் திட்டமாகும். வாடிக்கையாளர்களுக்கு நவீன, எதிர்காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை தீர்வுகளை வழங்கும் சிந்தனைமிக்க அபிவிருத்திகளை வழங்குவதில் குழுமத்தின் திறனை இது வெளிப்படுத்துகிறது.

Prime Group தனது 30 வருட காலச் சிறப்பைக்கொண்டாடும் வேளையில், மூலோபாய விரிவாக்கம், புத்தாக்கம் மற்றும் எதிர்காலத்தை இலக்காகக் கொண்ட அபிவிருத்திகள் மூலமாக தனது நீண்டகால மரபைத் தொடர்ந்தும் கட்டியெழுப்பி வருகிறது. Port City Colombo போன்ற அடையாளமிக்க முதலீடுகள், இலங்கை ரியல் எஸ்டேட் துறையை சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்லும் மற்றும் நாட்டின் எல்லைகளைத் தாண்டி தனது பிரசன்னத்தை விரிவுபடுத்தும் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன.

Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Sri Lanka to Host Leading...
ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சியை வலுப்படுத்தும்...
City of Dreams Celebrates One...
Huawei’s Advanced Antenna Technology Delivers...
Prime Group Brings Real Estate...
City of Dreams Celebrates One...
Huawei’s Advanced Antenna Technology Delivers...
Prime Group Brings Real Estate...
Atlas PlayPalz joins national ECD...