எதிர்காலத்திற்கென தனது டிஜிட்டல் தொழில்நுட்ப பலத்தை மேம்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம்

Share

Share

Share

Share

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், தனது முழு வணிக வலையமைப்பையும் உள்ளடக்கும் வகையில், தரவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை மேற்கொள்வதற்கு அண்மையில் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்தது. “Reimagining the Future: Sunshine’s Digital Evolution Journey” என்ற தலைப்பின் கீழ் இந்த அறிமுகம் நடைபெற்றது. மேலும் புத்திசாதூரியமாக தீர்மானித்தல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் நிறுவனத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் குழுமத்தின் எதிர்காலத் தயார்நிலையை உறுதிப்படுத்துவதில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு குழுமத்தின் சிரேஷ்ட தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். இதன்போது, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வலுப்பெற்ற மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்குத் தயாரான நிறுவனமாக மாறுவதற்கான சன்ஷைன் நிறுவனத்தின் இலக்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மனித வளம், செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பம் என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய முக்கிய 3 துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றம் செயல்படுத்தப்படுகிறது. தினசரி முடிவெடுக்கும் செயல்முறைக்கு தரவுகளை தீவிரமாகப் பயன்படுத்துதல், அத்துடன் நீண்டகால வணிக மதிப்பை உருவாக்கத் தேவையான திறன்களைக் கட்டமைத்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்யாம் சதாசிவம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்காலம் என்பது அதிக நிதி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல; மாறாக, வேகமாகக் கற்றுக் கொள்ளும், நெகிழ்வுடன் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை வடிவமைத்துக் கொள்ளும், மேலும் சிறந்த முடிவுகளை எடுக்கும் நிறுவனங்களுக்கே சொந்தமானது. எங்களின் நோக்கம், தரவுகளின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுக்கும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வளமான, மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்குத் தயாரான நிறுவனமாக மாறுவதாகும். அதன்போது, தரவு மற்றும் தகவல்கள் மூலம் சரியான முடிவுகளை எடுக்கவும், தொழில்நுட்பத்தின் வழியாக எங்கள் பணிகளை எளிதாக்கவும் முடியும். அத்துடன் உயர்ந்த மதிப்பை உருவாக்க எங்கள் குழுவினர் ஊக்குவிக்கப்படுவார்கள். எமது மக்கள் உட்பட, செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒரு பொதுவான நோக்கத்திற்காக சீரமைப்பதன் மூலமே இந்த வெற்றியை அடைய முடியும்.” என தெரிவித்தார்.

இந்த மாற்றச் செயல்முறையின் முக்கிய அம்சங்கள் இரண்டு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, தரவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான நிறுவனத்தின் தயார்நிலையை முன்னெடுப்பதற்காக Beyond: Putting Data to Work என்ற நிறுவனத்துடனும், குழுமத்தின் நிறுவன தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் ERP மாற்றத் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்துவதற்காக Ernst & Young Sri Lanka நிறுவனத்துடனும் சன்ஷைன் குழுமம் கைகோர்த்துள்ளது. இந்த அணுகுமுறைகள் மூலம், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட, நெகிழ்வான தரவு மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட செயல்பாட்டு அமைப்பு ஒன்றை குழுமம் முழுவதும் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. அதில், தரவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தலைமைத்துவத்தை சரியாகப் பயன்படுத்தி உயர்ந்த வணிக முடிவுகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து Beyond: Putting Data to Work நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Paul Alexander அவர்கள் விளக்கினார். மேலும், டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்தி நீண்டகால போட்டித்திறன் நன்மையை எவ்வாறு கட்டமைப்பது என்பது குறித்து Ernst & Young Sri Lanka நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஷானக டி சில்வா அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

“டிஜிட்டல் மாற்றம் என்பது தொழில்நுட்ப அறிமுகத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. சிறந்த முடிவெடுத்தல் மற்றும் உயர்ந்த வணிக விளைவுகளைச் சாத்தியமாக்கும் திறன்கள், நிறுவனக் கலாச்சாரம் மற்றும் செயல்முறைகளை உருவாக்குவதே அதன் உண்மையான நோக்கமாகும். இதன் மூலம் தரவுகளை மேலும் பயனுள்ள வகையில் இணைக்கவும், எங்கள் பணிகளை எளிமைப்படுத்தவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த எங்கள் குழுக்களுக்கு நடைமுறை வாய்ப்புகளை உருவாக்கவும் முடிகிறது” என குழுமத்தின் முதன்மை மாற்ற அதிகாரி இன்ஃபியாஸ் அலி தெரிவித்தார்.

தரவுகளை முக்கியமான தகவல்களாகவும், அந்தத் தகவல்களை சரியான முடிவுகளாகவும், அந்த முடிவுகளை நடைமுறைச் செயல்களாகவும் மாற்றுவதன் மூலம், இந்த மாற்றம் நிறைந்த பயணத்தின் கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள குழுமத்தின் தலைமையினர் இங்கு ஊக்குவிக்கப்பட்டனர். இதன் அடுத்த கட்டமாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களை அடையாளம் காணும் பொருட்டு Beyond நிறுவனத்தால் குழுமம் முழுவதும் நிறுவனத் தயார்நிலை குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளது. தரவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கான நடைமுறை செயல் திட்டத்தை வகுக்க இது உதவியாக இருக்கும்.

இந்த மாற்றச் செயல்முறையின் மூலம், எதிர்காலத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான திறன்கள், தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் அணுகுமுறை சார்ந்த முன்னேற்றத்திற்காக சன்ஷைன் ஹோல்டிங்ஸ் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்கிறது. மேலும், தனது வாடிக்கையாளர்கள், வணிகப் பங்குதாரர்கள், பங்குதாரர்கள் மற்றும் சமூகத்திற்கு உயர்ந்த மதிப்பை வழங்குவதற்கும் இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Samsung Sri Lanka Opens Pre-orders...
The Royal College Union, jointly...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් අනාගතය වෙනුවෙන් සිය...
ஜெப்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...
எல்.பி.எல் 2026: சம்பியன் பட்டத்துக்கான பிளே-ஆஃப்...
2026 LPL ශූරතාවය සොයා යන...
ප්‍රයිම් සමූහය සිය නවතම ශාඛාව...
எதிர்காலத்திற்கென தனது டிஜிட்டல் தொழில்நுட்ப பலத்தை...
2026 LPL ශූරතාවය සොයා යන...
ප්‍රයිම් සමූහය සිය නවතම ශාඛාව...
எதிர்காலத்திற்கென தனது டிஜிட்டல் தொழில்நுட்ப பலத்தை...
GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...