PUCSL-இன் செலவு அடிப்படையிலான Power Wheeling கட்டணம் குறித்து இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் பாராட்டு தெரிவிக்கிறது

Share

Share

Share

Share

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) முன்வைத்த Power Wheeling கட்டணம் வசூலிப்பதற்கான கோரிக்கை குறித்து இலங்கை ஒன்றிணைந்த ஆடைச்சங்கங்களின் மன்றம் (JAAF) தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. இலங்கை ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் கூறுவதாவது, எளிமையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செலவு அடிப்படையிலான இந்த கட்டணம், இலங்கையின் தொழில்கள் மிகவும் போட்டித்திறன் கொண்ட எரிசக்தி செலவைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட மிகவும் நடைமுறைக்குரிய படியாகும்.

2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டில் இது குறித்து கருத்து தெரிவித்த பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமித குமாரசிங்க அவர்கள், இந்த Power Wheeling கட்டண முறை செலவு மற்றும் நியாயமான இலாபத்தை உள்ளடக்கிய நியாயமான வசூலாக இருக்க வேண்டும் என்று கூறினார். அது நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலான தாங்கக்கூடிய செலவாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என்றும், சட்டப்பூர்வ ஏற்பாடுகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்படுவதை அது சார்ந்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Power Wheeling என்பது ஒரு தரப்பினர் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணத்திற்கு, தேசிய மின்சார அமைப்பின் வழியாக மற்றொரு நுகர்வோருக்கு எடுத்துச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முறையாகும். இது உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் மின்சாரம் வாங்கும் முறையை எளிமையாகவும் வசதியாகவும் ஆக்குவதோடு, மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுடன் நேரடியாகவே விநியோக நிபந்தனைகளுக்கு உடன்படவும் இங்கு வாய்ப்பளிக்கிறது.

குமாரசிங்க அவர்கள் மேலும் கூறியதாவது, முதலீட்டு முடிவுக்குப் பிறகு மின் உற்பத்தி திறன் அமைக்கப்படும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பே தேவையான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்க வேண்டும். இறுதியாக, நாட்டின் மொத்த மின்சாரத்தில் 15% முதல் 20% வரையிலான அளவு திறந்த சந்தை முறை மூலம் விற்பனை செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியதுடன், Power Wheeling மற்றும் சந்தை அடிப்படையிலான எரிசக்தி விற்பனை ஆகிய இரண்டு பிரிவுகளையும் ஒரே அளவில் மேம்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் கருத்து என்னவென்றால், ஒட்டுமொத்த விரிவான எரிசக்தி கொள்கையும் இங்கு சமமாக முக்கியமானது என்பதாகும். திறந்த அணுகல் மற்றும் Power Wheeling ஒழுங்குமுறைகளை விரைவுபடுத்துவதற்கு இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, அதற்கு இணையாக Battery எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், உற்பத்தியாளர்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் மிகவும் நிலையான எரிசக்தி விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படும்.

2026 இளையோர் ஒலிம்பிக் விழா இலங்கை...
சிறந்த வாகன குத்தகை தீர்வுகளை வழங்குவதற்காக...
PUCSL-இன் செலவு அடிப்படையிலான Power Wheeling...
செப்டம்பரில் ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளபோதிலும்,...
Sampath Bank Introduces One-Stop Housing...
வருடாந்திர இரத்த தான நிகழ்ச்சியை வெற்றிகரமாக...
“மனதளவில் வலிமையானவர்கள் – செல்வச் செழிப்புள்ள...
Daraz ශ්‍රී ලංකා සමාගම සිය...
வருடாந்திர இரத்த தான நிகழ்ச்சியை வெற்றிகரமாக...
“மனதளவில் வலிமையானவர்கள் – செல்வச் செழிப்புள்ள...
Daraz ශ්‍රී ලංකා සමාගම සිය...
JAAF welcomes Government’s commitment to...