தனது கன்னிப் பயணத்தை மேற்கொண்ட Cordelia Cruisesஐ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரவேற்ற Advantis

Share

Share

Share

Share

  • Advantis மற்றும் Cordelia Cruises ஆகியன நாடு முழுவதும் கப்பல் பயண நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக கைகோர்த்துள்ளன
  • MS Empress 1,600 பயணிகளுடன் இலங்கை வந்து சேர்ந்தது
  • முதல் 4 மாதங்களில் மட்டும் 80,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
  • Cordelia கப்பல் பயணத்திற்காக இலங்கையில் பொது விற்பனை முகவராகவும் துறைமுக முகவராகவும் Advantis, நியமிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சொகுசு சுற்றுலாப் பயணிகளுக்கான கப்பலை அறிமுகப்படுத்தும் முகமாக, Hayleys குழுமத்தின் போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் பிரிவான Advantis, Cordelia Cruises இன் MS Empressஐ இன்று வரவேற்றது.

இந்தியாவின் உயர்மட்ட கப்பல் வரிசைகளில் ஒன்றான Cordelia Cruises உடனான புதிய கூட்டாண்மையைப் பயன்படுத்தி, Advantis குழுவினர் சென்னையில் இருந்து வந்த 1,600 சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றனர். இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய மேள கலைஞர்களின் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

“Cordelia Cruisesஐ வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு மற்றும் இந்த புதிய சொகுசுக் கப்பல் முற்றிலும் சுற்றுலாப் பயணிகளுக்கானது. சுற்றுலாத் துறைக்கான கணிசமான வணிக வாய்ப்புகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் எமது முயற்சிகளில் இது குறிப்பிடத்தக்க மைல்கல் என்றே குறிப்பிட வேண்டும், அதே போல் எங்கள் நாட்டிலுள்ள வளத்தைப் பயன்படுத்தி, கப்பல் பயணங்களுக்கான உலகளாவிய முக்கிய இடமாகவும் இலங்கை அமைந்துள்ளது.” என ஹேலிஸ் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே தெரிவித்தார்.

Advantis மற்றும் Cordelia Cruises ஆகியன அவர்களின் நிபுணத்துவம் மற்றும் வளங்களை ஒருங்கிணைத்து, அவர்களது பகிரப்பட்ட நோக்கம் இலங்கையின் முழுத் திறனையும் வெளிக்கொணர்வதும், விதிவிலக்கான அனுபவங்களைத் தேடும் சொகுசுப் பயணிகளுக்கான சிறந்த இடமாக நாட்டை நிலைநிறுத்துவதும் ஆகும்.

தெற்காசியா முழுவதிலும் உள்ள விவேகமான பயணிகளுக்கான முதன்மையான இடங்களாக இலங்கை மற்றும் இந்தியா இரண்டையும் நிலைநிறுத்துவதற்கான முதல் படியாக Advantis உடனான எங்களது கூட்டாண்மை அமைந்தது. இந்த தனித்துவமான மற்றும் மாறுபட்ட சுற்றுலா இடங்களை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய எல்லைகளை பட்டியலிடுவதையும், இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியைத் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என Cordelia Cruises தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Jurgen Bailom தெரிவித்தார்.

MS Empress ஆனது 796 கேபின்களை ஐந்து தனித்தனி பிரிவுகளில் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதிநவீன வசதிகளுடன் கூடியவை, அவை 1,600 பயணிகளுக்கு இணையற்ற சொகுசு மற்றும் வசதியை வழங்குகிறது. பயணிகளுக்கு நாட்டைச் சுற்றி மறக்க முடியாத பயணத்திற்கு களம் அமைத்துக் கொண்டு, இக்கப்பல் 2023 ஜூன் 5 அன்று சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது.

Advantis நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ருவன் வைத்தியரத்ன இந்த கூட்டாண்மை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு தீவான, இலங்கை பல நூற்றாண்டுகளாக கடல் வர்த்தகம் மற்றும் பயணத்தை ஈர்த்துள்ளது. எவ்வாறாயினும், நவீன யுகத்தில், நமது தேசம் இன்னும் அதன் இயற்கையான நன்மைகளை நமது திறனுக்கு ஏற்றவாறு பயன்படுத்தவில்லை. Cordelia Cruises உடனான எங்கள் கூட்டணியின் மூலம், இலங்கையின் வளமான பாரம்பரியம், பிரமிக்க வைக்கும் இயற்கை அழகு மற்றும் உற்சாகமான கலாச்சார பன்முகத்தன்மையை ஆராய்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பை பயணிகளுக்கு வழங்குவதன் மூலம், நாடு முழுவதும் முதன்முறையாக கப்பல் பயணத்தை எளிதாக்க முடிந்தது. அடுத்த நான்கு மாதங்களில் மட்டும் குறைந்தது 80,000 உல்லாசப் பயணிகளை ஈர்ப்பதற்காக Cordelia குழுவுடன் நெருங்கி பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” என தெரிவித்தார்.

குழுமத்தின் பயணம் மற்றும் விமானப் பிரிவு பொது விற்பனை முகவராக Advantis பணியாற்றும் என்பதோடு Advantis குழுமத்தின் துணை நிறுவனமான Clarion Shipping இலங்கையில் Cordelia கப்பல்களுக்கான துறைமுக முகவராக செயற்படும்.

பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு, மியன்மார், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட Advantis இலங்கையின் மிகவும் பல்வகைப்பட்ட போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் சேவை வழங்குநராகும். Blue-chip பன்னாட்டு நிறுவனமான Hayleys PLCஇன் ஆதரவுடன், போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் துறையில் Advantis முன்னணியில் உள்ளது. ஒருங்கிணைந்த ஏற்றி இறக்கல், திட்டங்கள் மற்றும் பொறியியல், கடல் மற்றும் ஆற்றல், சர்வதேச சரக்கு நிர்வகிப்பு மற்றும் பயணம் மற்றும் விமான போக்குவரத்து ஆகியவற்றையும் அது மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.

GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...
MIHCM Asia showcases latest HR...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...
MIHCM Asia showcases latest HR...
TikTok Releases Q2 2024 Community...