கனவு வீட்டை அமைப்பதற்கான வீட்டுக் கடன்களை வழங்க HNB மற்றும் Homelands Skyline கூட்டாண்மையைப் புதுப்பிக்கின்றன

Share

Share

Share

Share

நகர்ப்புற வாழ்க்கைக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, எதிர்கால கனவு வீட்டு உரிமையாளர்களுக்கு பலவிதமான நன்மைகள் மற்றும் முன்னுரிமை விலைகளை வழங்க, சொத்து மேம்பாட்டாளர் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான Homelands Skyline உடனான தனது நீண்டகால கூட்டாண்மையை புதுப்பித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த மேம்பாட்டு நடவடிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இது 2024 இறுதி வரை அதன் விரிவான அடுக்குமாடி கட்டட கோப்புரை முழுவதும் பொருந்தும். HNB Towersஇல் கூட்டாண்மையைப் புதுப்பிக்கும் நிகழ்வில் HNB பிரதிப் பொது முகாமையாளர் – Retail Banking Group சஞ்ஜேய் விஜேமான்ன மற்றும் Home Lands குழுமத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் நலின் ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“உலகளாவிய தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், இலங்கையில் ரியல் எஸ்டேட் துறைக்கான கண்ணோட்டம் 2023 ஆம் ஆண்டிற்கு சாதகமாகவே உள்ளது. இந்தத் தொழில் பல சவால்களைச் சமாளிப்பதில் உறுதியுடன் உள்ளது, மேலும் ரியல் எஸ்டேட் ஆர்வலர்கள் மற்றும் வருங்கால வீட்டு உரிமையாளர்களுக்கு ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தொடர்ந்து செழித்து வருகிறது. எனவே, சந்தையில் சிறந்த தேர்வுகளுடன் எங்கள் பரஸ்பர வாடிக்கையாளர் தளத்தை வழங்க Homelands Skyline உடனான எங்கள் நீண்டகால கூட்டாண்மையை புதுப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என HNBஇன் உதவிப் பொது முகாமையாளர் – தனிப்பட்ட நிதிச் சேவைகள், காஞ்சன கருணாகம தெரிவித்தார்.

டெவலப்பருடனான முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ், HNB வீட்டுக் கடன்கள் இப்போது அவர்களின் தற்போதைய திட்டங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும், இதில் Canterbury Lexus – கஹதுடுவவில் உள்ள Golf Resort அடுக்குமாடி குடியிருப்புகள், கஹதுடுவவில் உள்ள Canterbury Golf Villas, மாலபேயில் உள்ள Elixia 3C’s, Santorini Resort அடுக்குமாடி குடியிருப்புகள், அதுருகிரியவில் Greendale Retirement and Residencies, அதுருகிரியவில் Cressida மற்றும் வாத்துவாவில் அவர்களின் வரவிருக்கும் திட்டம் ஆகியன அடங்கும்.

அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்குவதன் மூலம், HNB அவர்களின் கையிலுள்ள பணத்திற்கு ஏற்றவாறு வசதியான மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் வசதிகளை வழங்கும். வங்கி அதன் அர்ப்பணிப்பு முகவர்கள் மூலம் வீட்டிற்கே வந்து Mortgage ஆலோசனை சேவைகளை வழங்குகிறது, அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வசதிக்குத் தேவையான அனைத்து சட்ட ஆவணங்களுடன் உதவுவார்கள்.

மேற்கூறிய சலுகைகளுக்கு அமைய, அனைத்து வீட்டுக் கடன்களும் குறைந்தபட்சம் ஒரு வருட கால அவகாசத்துடன் வழங்கப்படும், HNB இன் அதிநவீன Back-End செயல்முறைகளால் நெறிப்படுத்தப்பட்ட விண்ணப்ப நடைமுறைகள் குறிப்பிடத்தக்க 3 நாள் கடன் ஒப்புதல் காலத்தை உறுதிசெய்யும். தங்கள் கடன் விண்ணப்பங்களுக்கு விரைவான பதிலை நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் சிறந்தது.

“Homelands Skyline எப்போதுமே வருங்கால வீட்டு உரிமையாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு சிறந்த குடியிருப்பு விருப்பங்களை வழங்குவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, HNB உடனான எங்கள் தொடர்ச்சியான ஒத்துழைப்பு இந்த சந்தையில் அவர்களின் சிறந்த ஆதரவு மற்றும் வசதிகளுக்கு ஒரு சான்றாகும். இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கையின் வீடமைப்புத் துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் நாங்கள் ஒன்றிணைந்து வீடமைப்புத் தீர்வுகளை வழங்குவோம் என்று நம்புகிறோம்.” என Home Lands குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான நளின் ஹேரத் தெரிவித்தார்.

மேலும், இந்த மேம்பாட்டு நடவடிக்கையின் கீழ் கருதப்படும் வீட்டுக் கடன்களுக்கான மாதாந்த வட்டியை டெவலப்பர் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை செலுத்துவார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

JAAF මෙරට ඇඟලුම් ක්ෂේත්‍රයේ රැකියා...
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam”...
Renowned Global Experts to Inspire...
Sri Lanka Apparel achieves 5%...
Softlogic Life to introduce AI...
සිය කටහඬ භාවිත කරමින් TikTok...
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha...
‘වත්මන් පොල් අර්බුදය විසඳීම සඳහා...
සිය කටහඬ භාවිත කරමින් TikTok...
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha...
‘වත්මන් පොල් අර්බුදය විසඳීම සඳහා...
நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...