இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தனது அனைத்து ஊழியர்களுடனும் மேற்கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க பசுமை உறுதிமொழி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதியான அர்ப்பணிப்பை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உறுதிமொழி, 2023 இல் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ஊழியர்கள் QR குறியீடு மூலம் அதைத் திரையிட்டு பதிவிறக்கம் செய்து, முழுமையாக காகிதமற்ற செயல்முறையை உறுதி செய்தனர்.
உலக சேமிப்பு தினத்தன்று சேமிப்பு என்ற எண்ணக்கருவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் விஸ்தரிக்க, HNB தலைமை அலுவலக ஊழியர்கள் அனைவரும் நிலையான நடைமுறைகளுக்கு தங்கள் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினர். காகிதம் பயன்படுத்துவதை குறைப்பதற்கும், எரிசக்தி வீண்விரையத்தைக் குறைப்பதற்கும், நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். இந்த உறுதிமொழி மூலம், தங்கள் அன்றாட வேலைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்துள்ளனர், இது நாம் வாழும் பூமியின் நல்வாழ்வுக்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குகிறது.
இந்த உறுதிமொழி குறித்த பெறுமையான தருணம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், “எங்கள் பசுமை உறுதிமொழி வெறும் வாக்குறுதி அல்ல – இது எங்கள் சுற்றுச்சூழலுக்கு தரநிலையை மீறிச் செல்லும் எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. உலக வெப்பமயமாதல் தீவிரமடையும் போது, எதிர்கால சந்ததியினரிடமிருந்து கடனாகப் பெற்ற நேரத்தில் வாழ்கிறோம் என்பது தெளிவாகிறது, மேலும் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் முழுமையான நிலைத்தன்மைக்கான பயணத்தில் ஒரு படி மட்டுமே.” என தெரிவித்தார்.
எமது ஊழியர்களின் பசுமை உறுதிமொழி இந்தப் பயணத்தில் மிகவும் முக்கியமானது, இது நிலையான நடைமுறைகளுக்கு மட்டுமல்ல, மனநிலை மாற்றத்திற்கான எமது அர்ப்பணிப்பையும் குறிக்கிறது. இந்த உறுதிமொழி எங்கள் ஊழியர்களை வேலை மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அனைத்து அம்சத்திலும் நிலைத்தன்மையின் எல்லைகளை விரிவுபடுத்த ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம், மேலும் நிலைத்தன்மையை ஒரு பரபரப்பூட்டும் வார்த்தையிலிருந்து வாழ்க்கை முறையாக மாற்றுவோம்.
HNB இன் உறுதிமொழி அனைவருக்கும் மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் குறிப்பிடத்தக்க பயணத்தில் இன்னொரு படியாகும். 2023 செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி 49.5 பில்லியன் ரூபாய் மொத்த பசுமை நிதி கோப்புறையைக் கொண்டிருக்கும் இந்த வங்கி, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை காலநிலை நிதியம் (SLCF) மூலம் அதிகாரப்பூர்வமாக கார்பன் நடுநிலை சான்றிதழை பெற்றுள்ளது.
HNBஇன் பிரதி பொது முகாமையாளர் எல். சிரந்தி குரே இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “இந்த உறுதிமொழி, ஊழியர்கள் ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டுவந்த நிலையான முயற்சிகளை மட்டுமே மீண்டும் வலியுறுத்தியது. HNB இல் சிறந்த பணியாளர்களைக் கொண்டிருப்பதில் பெருமிதம் அடைகிறோம், அவர்கள் பசுமையான எதிர்காலத்தை நோக்கிய எங்கள் முயற்சிகளை ஆதரிக்கிறார்கள். எங்கள் ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிலைத்தன்மை முயற்சிகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு எனக்கு காலநிலைக்கு ஏற்ற நாளைக்கான பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.” என தெரிவித்தார்.