நவலோக்க உயர்கல்வி நிறுவனம் (NCHS) ஸ்திரத்தன்மை, எதிர்கால சிறப்புடன் தனது பத்தாவது ஆண்டில் நுழைந்துள்ளது

Share

Share

Share

Share

இலங்கையின் உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லைப் பதித்த நவலோக்க உயர்கல்வி நிறுவனம், கல்விச் சேவைகளுக்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனது பத்தாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கிறது. 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நவலோக்க உயர்கல்வி நிறுவனம், அவுஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இலங்கையில் மாணவர்களின் நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் தெளிவான எதிர்காலத்திற்காக உயர் கல்வியை வழங்குவதற்கான பாரிய பணியில் ஈடுபட்டுள்ளது.

நவலோக்க உயர்கல்வி நிறுவகத்தின் கல்விப் பணி மற்றும் புத்தாக்கம், ஸ்வின்பர்னுடனான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கல்வித் துறையில் உள்ள பாரிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இலங்கையின் உயர்கல்வித் துறையை தரம் வாய்ந்த புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதில் ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நவலோக்க உயர்கல்வி நிறுவனத்தின் கல்விப் பணி மற்றும் புத்தாக்கமும் ஆஸ்திரேலிய உயர்கல்வி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு தசாப்த கால அனுபவத்துடன் நவலோக்க உயர்கல்வி நிறுவனம் எதிர்காலத்தில் இலங்கையின் உயர்கல்வியில் உந்து சக்தியாக மாற திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் எதிர்காலக் கல்வியின் துணைவேந்தர் ப்ரோன்டே நெய்லேண்ட், “ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கும் நவலோக்க உயர்கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான நீண்டகால உறவு இரு நிறுவனங்களுக்கும் மிகவும் முக்கியமானது மற்றும் பயனுள்ளது என்று நான் நம்புகிறேன். மேலும், இலங்கையை மையமாகக் கொண்ட கல்விச் சேவைகளை வழங்கி 2024ஆம் ஆண்டுக்குள் பத்து வருடங்களை நிறைவுசெய்துள்ளோவோம் என்பதால், எதிர்காலத்தில் அதிக தொடர்புகளைப் பேணுவதே எமது நோக்கமாகும்.” என தெரிவித்தார்.

இலங்கையை ஆசியாவின் கல்வி நிலையமாக மாற்றும் நோக்கில் ஆரம்பம் முதலே செயற்பட்டு வரும் நவலோக்க உயர்கல்வி நிறுவனம், அந்த இலக்கை அடைவதற்காக உலகின் வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் கல்வித் துறையின் தரத்தை உயர்கல்வித்துறைக்கு அறிமுகப்படுத்த இலங்கையில் நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல உலக அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களுக்கான அணுகல் எளிதாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நவலோக்க உயர்கல்வி நிறுவகத்தின் கண்டி கிளை திறக்கப்பட்டதன் மூலம், கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் பெருமளவிலான மாணவர்கள் சர்வதேச மட்ட உயர்கல்வியைப் பெறும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.

லைசியம் சர்வதேச பாடசாலையின் மாணவியான துல்யானா சுலுதாகொட தற்போது நவலோக்க உயர்கல்வி நிறுவனத்தில் பட்டதாரியாக கல்வி பயின்று வருகின்ற நிலையில் இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “நான் நவலோக்க உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன், ஏனெனில் இங்கு நடத்தப்படும் படிப்புகள் எதிர்காலத்திற்குத் தேவையானவையாக உள்ளன. எனது மேற்படிப்பை அமெரிக்காவில் மேற்கொள்வது எனது கனவாக இருந்தது. எனவே, அடுத்த ஆண்டு கோடை காலத்திற்கான அமெரிக்காவின் வடக்கு அலபாமா பல்கலைக்கழகத்தில் சேர ஆவலுடன் உள்ளேன். நவலோக்க உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் படிப்புகளின் நெகிழ்வுத்தன்மையும், மாணவர்களுக்கு நிறுவனம் வழங்கும் ஆதரவும் ஆகும். நான் தற்போது ஒரு தேசிய அளவிலான தடகள வீராங்கனையாக இருப்பதால் இதை குறிப்பாக குறிப்பிடுகிறேன், எனவே எனது படிப்பு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை சமநிலைப்படுத்த எனக்கு உறுதுணையாக இருந்த நவலோக்க உயர்கல்வி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்தார். நவலோக உயர்கல்வி நிறுவனம் கல்வி மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு வழங்கிய ஆதரவையும் அவரது கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நவலோக்க உயர்கல்வி நிறுவனம் இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இந்நாட்டின் உயர்கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக மேலும் பல விடயங்கள் நன்கொடையாக வழங்கப்படும். இதுவரையிலான பயணத்தைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, சவால்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சி மற்றும் உறுதியுடன் சிறந்து விளங்கும் பண்புகளை நாம் காணலாம். நவலோக்க உயர்கல்வி நிறுவனம் இலங்கையின் உயர்கல்வியின் தரத்தில் புதிய அளவுகோல்களை அமைத்து எதிர்கால உலகிற்கு நவீன தலைவர்களை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC...
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20...
GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...