போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV Motor Show 2024’க்கு அனுசரணை வழங்கும் BYD

Share

Share

Share

Share

ஜோன் கீல்ஸ் CG Auto மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பினை மேம்படுத்த அறிமுகப்படுத்தும் புத்தாக்கத்துடன் கூடிய புதிய ஆற்றல் வாகன தீர்வு

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இலங்கையில் உள்ள மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings PLC) இனதும் துபாயைத் தலைமையகமாகக் கொண்ட CG Corp Global ஆகியவற்றின் கூட்டு தொழில்முயற்சியாக John Keells CG Auto (Pvt) Ltd (JKCG Auto) Asia Exhibition & Convention (Pvt) Ltd உடன் இணைந்து, மிகவும் எதிர்பார்த்து காந்திருந்த EV Motor Show 2024க்கான வர்த்தக நாம அனுசரணை வழங்குனராக BYD நிறுவனத்தை அறிவித்துள்ளது.

BMICHஇல் இம்மாதம் அதாவது ஜூன் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, நிலையான போக்குவரத்துக்கான இலங்கையின் எதிர்கால தூரநோக்குப் பார்வையை மறுவரையறை செய்ய உதவுவதுடன் EV தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூர் EV சந்தையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“கணிசமான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை கருத்தில் கொண்டு, எமது போக்குவரத்து சுற்றுச்சூழலில் மின்சார வாகனங்களை (EV) உள்ளடக்குவது மிகவும் அவசியம். BYD உடனான எமது கூட்டாண்மை, இலங்கையில் உலகளாவிய சுற்றுச்சூழலுக்கு உகந்த செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது விஸ்தரிக்கப்பட்ட வலையமைப்புக்களைப் பயன்படுத்தி போக்குவரத்து துறையில் புதிய நிர்ணயங்களை நடைமுறைப்படுத்த தேவையான கட்டமைப்புக்களை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மேலும், சீனாவில் உள்ள எமது முதன்மை நிறுவனத்துடனான எமது ஒத்துழைப்பு, தொடர்ச்சியான அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை உறுதி செய்யும்.” என சரித்த சுபசிங்க, President – Retail, John Keells Group குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மின்சார வாகனங்களை உள்வாங்கிக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் JKCG Auto, ஆரம்ப காலத்திலிருந்து NEV சுற்றுச்சூழலுக்கு மாறுவதற்கு எத்தனிப்பவர்களுக்கு JKCG Auto ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த கூட்டுத் தொழில் முயற்சியானது JKH உடனான வர்த்தக தொடர்புகள் மூலம் நாடு முழுவதும் தேவையான Charging கட்டமைப்புக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கும்.

“JKH உடனான இந்த கூட்டுத் தொழில் முயற்சியானது, இலங்கை பொருளாதாரத்தின் மீதான எமது அசைக்க முடியாத நம்பிக்கையின் உறுதிப்பாடாகும். எதிர்காலத்தை முன்னிறுத்திய NEV தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், நிலையான போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலமும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டுக்கான நீண்டகால தூரநோக்குப் பார்வைக்கு பங்களிப்பு வழங்குவதை நாங்கள் எமது உறுதிப்பாடாக கொண்டுள்ளோம். BYD மற்றும் EV Motor Show 2024 உடனான இந்த கூட்டாண்மை, புத்தாக்கத்துக்கான எமது ஈடுபாட்டிற்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இலங்கை முன்னணி பெறும் என்பதை நாங்கள் நம்புவதற்கும் இதுவொரு சான்றாகும்,” என CG Corp Globalஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் Nirvana K Chaudhary தெரிவித்தார்.

“EV Motor Show 2024 உடனான எமது ஈடுபாடு, இலங்கையின் மின்சார வாகன சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான எமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. நிலையான எதிர்காலத்திற்கான எமது நீண்ட கால தூரநோக்கத்தை பிரதிபலிக்கும் மேம்பட்ட புதிய ஆற்றல் வாகனங்களை காட்சிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான ஒத்துழைப்பு வழங்கும் கட்டமைப்பை உருவாக்குவதற்கான எமது முயற்சிகளில் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்,” என JKCG Auto இன் பொது முகாமையாளர் சரித் பண்டிதரத்ன தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல், JKCG, BYD மின்சார வாகனங்களுக்காக அதிநவீன சேவை மத்திய நிலையத்தை அமைக்க உத்தரவு வழங்கியுள்ளது. இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு அவசியமான சேவைகள் மற்றும் ஒத்துழைப்பை வழங்கி, அவர்களின் வாகனங்கள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்யும்.

John Keells Holdings PLC (JKH) இன் துணை நிறுவனமான John Keells CG Auto (Private) Limited (JKCG), 2023 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனத் துறைக்குள் பிரவேசித்தது. JKCG Auto, இலங்கையில் BYD பயணிகள் வாகனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் சேவைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் ஆகும். இது புதிய ஆற்றல் வாகனங்கள் (NEV) மீதான வாடிக்கையாளர் நம்பிக்கையை கட்டமைப்பதிலும், NEV களுக்கான புதிய மைல்கற்களை நிர்ணயிப்பதிலும், இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதற்கும் உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பில்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில்துறைகளில் 70இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி. இதழால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டரநேஷனல் ஶ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கைகயிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் குழு அங்கத்தவராக இருக்கும் அதேவேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட JKH தனது கூட்டாண்மை சமூக பொறுப்பினை வலுப்படுத்தும் முகமாக John Keells Foundation அறக்கட்டளை மையத்தின் ஊடாக “நாளைய தேசத்தை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளை செயற்படுத்தி வருவதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டை கணிசமாகக் குறைக்கும் முகமாக சமூக தொழில்முனைவு முயற்சியூடாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்” எனப்படும் முயற்சியையும் செயற்படுத்தி வருகிறது. இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.

 

AIஐ அடிப்படையாகக் கொண்ட நவ்லோகா மருத்துவமனை...
GSCS இன்டர்நேஷனல் மற்றும் JAAF இணைந்து,...
இந்த ஆண்டும் உலக சிறுவர் தினத்தைக்...
ජෝන් කීල්ස් සමාගම, කාමර 687කින්...
687 அறைகள் கொண்ட Cinnamon Life...
Kaspersky 2024 இன் முதல் பாதியில்...
Mahindra Ideal Finance හි නව...
Mahindra Ideal Finance appoints Mufaddal...
Kaspersky 2024 இன் முதல் பாதியில்...
Mahindra Ideal Finance හි නව...
Mahindra Ideal Finance appoints Mufaddal...
மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப்...