ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாராகுங்கள்’ என்ற பிரச்சாரத்தை சுவ திவிய அறிமுகப்படுத்துகிறது. இது நிறுவனங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், நிலைபேறான பணியிட நலத்திட்டங்களை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட முயற்சியாகும். இந்த முயற்சி சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கான நலத்திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, தங்கள் பணியாளர்களிடையே ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நிலைபேறாண்மை கலாச்சாரத்தை வளர்க்க விரும்பும் அனைத்து நிறுவனங்களுக்கும் விரிவடைகிறது. அந்தவகையில் பணியிடங்களை ஆரோக்கியமான இடங்களாக மாற்ற நிறுவனத் தலைவர்கள், மனிதவள நிபுணர்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு அதிகாரிகளை ஒன்றிணைந்து பணியாற்ற சுவ திவிய அழைக்கிறது.
ஆரோக்கியத்தை முன்னுரிமைப்படுத்தும் பணியிடம்
ஆரோக்கியம் நிலைபேறாண்மையின் இன்றியமையாத அம்சமாகும். ஆரோக்கியமான பணியாளர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், குறைந்த மருத்துவச் செலவுகள், மேலும் வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட வணிகத்திற்கு பங்களிக்கின்றனர். நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் நிலைபேறாண்மை, மற்றும் ஊழியர் ஈடுபாட்டில் முதலீடு செய்வதைப் போல, நீண்டகால ஆரோக்கிய திட்டங்களிலும் ஈடுபட வேண்டும். சுவ திவியவின் நிறுவனர் மருத்துவர் காயத்ரி பெரியசாமி, பணியிடங்களை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் மாற்ற நிறுவனங்களை முன்வர அழைக்கிறார்.
‘ஆரோக்கியம் என்பது தனிநபர் தேர்வுகள் மட்டுமல்ல, ஆரோக்கியமான தேர்வுகளை எளிதாக்கும் சூழலை உருவாக்குவதாகும். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது போல, நிறுவனங்கள் பணியிட நலனிலும் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஆகவே, சிறிய நடவடிக்கைகளும் ஊழியர்களை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், உற்பத்தித்திறன் மிக்கவர்களாகவும் வைத்திருக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று மருத்துவர் காயத்ரி பெரியசாமி தெரிவித்தார்.
நிறுவனத்திற்குள் நடைமுறை முடிவுகளை எளிதாக அடையும் வழிமுறைகள்
சுவ திவிய, நிறுவனங்களை பின்வரும் செயல்படுத்தக்கூடிய, எளிதில் அடையக்கூடிய மாற்றங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது:
• தேநீர் மற்றும் பிற பானங்களில் சர்க்கரையின் அளவை குறைத்து சர்க்கரை நுகர்வைக் குறைக்கவும்.
• பொதுவான இடங்களில் ஆரோக்கிய குறிப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம் தினசரி நல நினைவூட்டல்களை ஊக்குவிக்கவும்.
• மருத்துவ நிபுணர்களின் உரைகள் மூலம் நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் மன அழுத்த முகாமைத்துவம் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
• ஊழியர்களை ஆரோக்கிய சவால்களில் பங்கேற்க ஊக்குவித்தல்.
• ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு நிகழ்வுகள், பணியிட நடவடிக்கைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை ஏற்பாடு செய்யுங்கள்.
• செயல்பாட்டு உணவு முன்னோட்டங்கள் (Healthy Meal Demonstrations) நடத்தி பணியாளர்களுக்கு சமநிலை உணவுகள் மற்றும் அளவான உணவுப் பழக்கங்கள் பற்றிய கல்வியை வழங்குங்கள்.
• உடற்பயிற்சி அமர்வுகளை ஒழுங்குபடுத்தி, நிபுணர்களை அழைத்து ஒழுங்கான பயிற்சி திட்டங்களை செயல்படுத்துங்கள்.
• கேக், இனிப்பு உணவுகளுக்குப் பதிலாக ஆரோக்கியமான சிற்றுண்டிகளை வழங்குங்கள்.
• பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை உணவுகளின் கிடைக்கும் தன்மையைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவு அணுகலை கட்டுப்படுத்துங்கள்.
நிறுவனங்களுக்கு ‘சுவ திவிய’ உதவும் விதம்
சுவ திவிய நிறுவனங்களில் ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இது விரிவான பணியிட நலத்திட்டங்களின் மூலம் நிறுவனங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது. இந்த திட்டம் ஆரோக்கியத்தை தொடங்கும் நாளுடன் (Health Kickoff Day) ஆரம்பமாகும், இதில் இலவச மருத்துவப் பரிசோதனைகள், நிபுணர்கள் நடத்தும் கலந்துரையாடல்கள், ஆரோக்கியமான உணவு அனுபவங்களை வழங்குகிறது. மேலும், நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்த மேலாண்மை, பணியிட நல்வாழ்வு உள்ளிட்ட முக்கிய ஆரோக்கிய தலைப்புகளில் சிறப்பு அமர்வுகளையும் வழங்குகிறது. இது ஊழியர்களுக்கு தகவலறிந்த வாழ்க்கை முறை தேர்வுகளை செய்ய தேவையான அறிவை வழங்குகிறது. இது தவிர, நிறுவனத்தின் பணியிட பண்பாடு மற்றும் நிலைபேறாண்மை நோக்கங்களுடன் பொருந்தும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இது ஆரோக்கியத் திட்டங்களை பயனுள்ள முறையில் ஒருங்கிணைக்க உதவுகிறது. நீண்டகால தாக்கத்தை உறுதி செய்ய, சுவ திவிய நிறுவனம் தனிப்பயனாக்கப்பட்ட வளங்கள், பயிற்சி, மற்றும் உத்திசார் கூட்டாண்மைகள் போன்றவற்றின் மூலம் நிறுவனங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது. இதன் மூலம் ஆரோக்கியம் நிறுவனக் கொள்கைகளில் இணைக்கப்பட்டு, பணியிடங்களில் ஆரோக்கியம் மற்றும் நலனை முன்னிறுத்தும் கலாச்சாரத்தை உருவாக்க உதவகிறது.
ஆரோக்கியமான பணியாளர்களை உருவாக்குவோம்
சுவ திவிய வணிகத் தலைவர்கள், மனிதவள நிபுணர்கள், மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை ஆரோக்கியமான பணியாளர்களை வளர்ப்பதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க அழைப்பு விடுக்கிறது. பணியாளர்களின் நல்வாழ்வுக்கான வலுவான உறுதிப்பாடு உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீண்டகால வணிக நிலைபேறாண்மைக்கும் பங்களிக்கிறது. பணியிட நல்வாழ்வு ஒரு நிறுவனத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பதால், பயனுள்ள ஆரோக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதில் நிறுவனங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க சுவ திவிய தயாராக உள்ளது. இப்போதுதான் உங்கள் ஊழியர்களின் நல்வாழ்வில் முதலீடு செய்ய வேண்டிய சரியான நேரம். ஏனெனில், ஆரோக்கியமான பணியாளர்கள் என்பது வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட வணிகச் சூழலைக் குறிக்கிறது.
இந்த திட்டத்தை உங்கள் நிறுவனத்தில் செயல்படுத்த கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்: சயந்தினி – +94773533791
சுவ திவிய தொடர்பில்
சுவ திவிய (Suwa Diviya) என்பது நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் முழுமையான நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற முயற்சியாகும். ஆலோசகர் மருத்துவர் காயத்ரி பெரியசாமி தலைமையில் செயல்படும் இந்த அமைப்பு, இலங்கை முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க விழிப்புணர்வு கல்வி, மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பணியிட நலத்திட்டங்களை வழங்குகிறது.