BYD நிறுவனம் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் முதல் Plug-In Hybrid Pickup வாகனமான SHARK 06-ஐ அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. அதாவது இலங்கை வாகன சந்தையில் மின்சாரத்திலும், எரிபொருளிலும் இயங்கக்கூடிய முதல் Pickup வாகனம் இதுவாகும். இது அதிநவீன தொழில்நுட்பம், ஆடம்பர வசதிகளைக் கொண்டுள்ளதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகசுவும் காணப்படும் ஒரு புதிய வகை வாகனமாகும்.
இப்புதிய வாகனம் கரடுமுரடான பாதைகளில் எளிதாக செல்லும் திறன், அடுத்த தலைமுறை hybrid தொழில்நுட்பம் மற்றும் உயர்தர SUV வாகனங்களில் காணப்படும் உயர்தர வசதிகள் ஆகிய 3 முக்கிய அம்சங்களை ஒருங்கிணைக்கிறது.
SHARK 06 அறிமுகத்தை குறிக்கும் வகையில், கொழும்புத் துறைமுக நகரத்தில் ஒரு சிறப்பு பயண அனுபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களும் (influencers) கலந்துகொண்டு, வாகனத்தை நேரடியாக ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களின் வழிகாட்டுதலுடன், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாதையில SHARK 06 வாகனத்தை தாங்களே ஓட்டிப் பார்த்தனர். செங்குத்தான மலைப்பாதைகள், சமமற்ற நிலப்பரப்புகள், மற்றும் பல்வேறு off-road சவால்களைக் கொண்ட இந்தப் பாதை, SHARK 06 வாகனத்தின் சிறந்த கட்டுப்பாட்டு திறன் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளில் செயல்படும் திறனை வெளிப்படுத்தியது. மேலும், இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வாகனத்தின் நவீன வடிவமைப்பு, உயர்தரமான கட்டுமானம் மற்றும் கரடுமுரடான பாதைகளில் இதன் தோற்றம் ஆகியவற்றை நெருக்கமாக உணர முடிந்தது.
இந்த அறிமுக விழாவில் BYD Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் Liu Xueliang உரையாற்றுகையில், ‘இதுவரை இலங்கையில் BYD அடைந்துள்ள உறுதியான வளர்ச்சியைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். BYD SHARK 06 அறிமுகத்துடன், இந்தப் பயணத்தை தொடர்வதில் நாங்கள் உற்சாகமாக உள்ளோம். இந்த வாகன மாதிரி புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மையை சந்தையில் உண்மையிலேயே தனித்து நிற்கும் வகையில் ஒருங்கிணைக்கிறது. BYD SHARK 06 பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற மற்றும் திறன்மிக்க வாகனத்தை தேடும் இலங்கை வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்காலத்தில் இலங்கைக்கு மேலும் பல நவீன வாகன மாதிரிகளைக் கொண்டுவந்து, எமது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தி, நாடு முழுவதும் மாற்று சக்தி வாகன பாவனையை முன்னேற்ற BYD நிறுவனம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
BYD SHARK 06 என்பது மிகவும் நவீன Hybrid தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த வாகனமாகும். இதில் DMO (Dual Mode Off-road) Super Hybrid அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் இரண்டு மோட்டார்கள் உள்ளன, இதனால் அனைத்து சக்கரங்களும் சமமாக இயங்கி, எந்த வகையான கரடுமுரடான பாதைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது. இந்த வாகனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மணல், சேறு, பனி அல்லது பாறைகள் போன்ற வெவ்வேறு வகையான நிலப்பரப்புகளை தானாகவே உணர்ந்து, அதற்கேற்ப தன்னை சரிசெய்துகொள்ளும் புத்திசாலித்தனமான அனைத்து-சக்கர இயக்க (all-wheel-drive system) அமைப்பைக் கொண்டுள்ளது. வாகனத்தின் அடிப்பகுதி மிகவும் வலுவான steel தகடுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது, இது பாறைகள் மற்றும் மரத்துண்டுகளிலிருந்து வாகனத்தை பாதுகாக்கிறது.
ஓட்டுநர்கள் தங்களுக்கு தேவையான நான்கு வெவ்வேறு வகையான பயன்முறைகளை தேர்ந்தெடுக்கலாம், இது வெவ்வேறு வகையான சாலைகளில் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. மேலும், இந்த வாகனத்தில் ‘வெளிப்புற பயன்முறை’ (outdoor mode) என்ற சிறப்பு அம்சம் உள்ளது, இதன் மூலம் முகாமிடும் (camping) போது அல்லது வெளியில் இருக்கும் போது தேவையான மின் சாதனங்களை, அதாவது விளக்குகள், குளிர்சாதனப் பெட்டி, சமையல் உபகரணங்கள் போன்றவற்றை இயக்க முடியும். இது முகாமிடுபவர்களுக்கும், வெளிப்புற பயணங்களை விரும்புபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
BYD SHARK 06-இன் தனித்துவம் அதன் super hybrid அமைப்பில் உள்ளது. இது மூன்று முக்கிய ஓட்ட முறைகளை வழங்குகிறது: முதலாவதாக, முழு மின்சார முறையில்; (Pure Electric Mode) இந்த வாகனம் ஒரே முறை சார்ஜ் செய்து 100 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும். இந்த முறையில் எந்தவிதமான புகை அல்லது மாசுக்களும் வெளியேறாது. அதாவது சுழியம் உமிழ்வு (zero emission) என்பது இதன் சிறப்பம்சம். இது தினசரி நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்றது இரண்டாவதாக, hybrid mode முறையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தி நீண்ட தூரப் பயணங்களுக்கு சிக்கனமான அனுபவத்தை வழங்குகிறது. மூன்றாவதாக, செயல்திறன் முறையில் (Performance mode) அதிகபட்ச சக்திக்காக மின்சார மோட்டார் மற்றும் எரிபொருள் எஞ்சின் ஆகிய இரண்டு அமைப்புகளையும் ஒன்றிணைத்து மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான சாலைகளில் சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு பாவனையாளர்களின் தேவைக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் தன்மையுடன், எரிபொருள் சிக்கனம், குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றை ஒரே வாகனத்தில் வழங்குகிறது.
இப்புதிய வாகனம் தொடர்பில் John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரட்ன கருத்து தெரிவிக்கையில், BYD SHARK 06 வாகனம் இலங்கையில் மாற்று சக்தி போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றத்தை குறிக்கிறது. இந்த வாகனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துடன், சாகசமான சவாரி அனுபவத்தையும் இணைத்து வழங்குகிறது. கரடுமுரடான பாதைகளில் வலுவான செயல்திறனையும், நகர்ப்புற சாலைகளில் எரிபொருள் சிக்கனத்தையும் ஒரே வாகனத்தில் அனுபவிக்க முடியும். புத்திசாலித்தனமான அனைத்து-சக்கர இயக்க அமைப்பு மற்றும் பல ஓட்டுதல் முறைகள் இருப்பதால், எந்த சூழ்நிலையிலும் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும். இலங்கை சந்தையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த புத்தாக்க வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.’ என தெரிவித்தார்.
அறிவிக்கப்பட்ட விலை குறைப்புடன், 25.3 மில்லியன் என்ற விலையில், முதல் ஐந்து BYD SHARK 06 வாகனங்கள் அறிமுக விழாவில் வாடிக்கையாளர்களிடம் கையளிக்;கப்பட்டன, மேலும் இந்த ஐந்து வாகனங்களைத் தொடர்ந்து மேலும் பல வாகனங்கள் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும். BYD நிறுவனமும் John Keells CG Auto (JKCG Auto) நிறுவனமும் இணைந்து இலங்கையின் மாற்று சக்தி வாகனத் துறையில் புதிய மாற்றத்தை கொண்டுவர உறுதிபூண்டுள்ளன. வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கேற்ப புதுமையான மற்றும் பலதரப்பட்ட வாகனங்களை தொடர்ந்து வழங்குவதன் மூலம், இலங்கையின் போக்குவரத்துத் துறையில் தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.