Samsung Electronics உலகளாவிய Gaming Monitor சந்தையில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்து சாதனை

Share

Share

Share

Share

சர்வதேச தரவு நிறுவனத்தின் (International Data Corporation) சமீபத்திய தரவுகளின்படி, Samsung Electronics தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் உலகளாவிய gaming monitor சந்தையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது gaming துறையில் Samsung இன் தொடர்ச்சியான முன்னணி நிலையை உறுதிப்படுத்துகிறது.
மொத்த வருவாயின் அடிப்படையில், Samsung 2024 இல் உலகளாவிய Gaming Monitor சந்தையில் 21% சதவீத பங்குடன் முன்னணியில் உள்ளது, இது வேகமாக மாறிவரும் இத்துறையில் அதன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

அத்தோடு, தனது முதல் OLED மாதிரியை அறிமுகப்படுத்திய இரண்டே ஆண்டுகளில் 34.6% சதவீத சந்தைப் பங்கைப் பெற்று, உலகளாவிய OLED Monitor பிரிவிலும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Samsung முதலிடத்தில் உள்ளது.
Samsung Electronics இன் Visual Display Business பிரிவின் நிர்வாக உதவித் தலைவர் Hoon Chung கருத்து தெரிவிக்கையில், ‘Gaming Monitor தொழில்நுட்ப சந்தையில் Samsung இன் வளர்ச்சி வேகமானது, புத்தாக்கங்களைத் தொடர்ந்து உருவாக்குவதற்கான எங்களது அயராத முயற்சியையும், இன்றைய விளையாட்டு ஆர்வலர்களின் (gamers) தேவைகளை ஆழமாக புரிந்துகொண்டதையும் காட்டுகிறது. உள்ளார்ந்த முப்பரிமாண அனுபவங்கள் முதல் OLED செயல்திறன் வரை, நாங்கள் Gaming துறையின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்.’ ஏன தெரிவித்தார்.

Samsung இன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அதன் சக்திவாய்ந்த Odyssey gaming monitor தொகுப்பு முக்கிய காரணமாக உள்ளது. இத்தொகுப்பு பல்வேறு மாதிரிகள் மூலம் உள்ளார்ந்த மற்றும் உயர்-செயல்திறன் கொண்ட gaming அனுபவத்திற்கான தரநிலையை அமைக்கிறது. குறிப்பாக Odyssey G6 மாதிரி போட்டித்தன்மை கொண்ட gaming பிரிவில் Samsung இன் தலைமைத்துவத்தை மேலும் விரிவுபடுத்தி, உயர்மட்ட வேகம் மற்றும் பதிலளிப்பு திறனை வழங்குகிறது.

Samsung இன் அடுத்த தலைமுறை monitor தொகுப்பின் முக்கிய அம்சமாக அதன் தனித்துவமான Quantum Dot OLED தொழில்நுட்பம் விளங்குகிறது. இது அனைத்து பார்வை கோணங்களிலும் நிற துல்லியம், மாறுபாடு மற்றும் பிரகாசத்தை மேம்படுத்துகிறது. இதனால் கண்கவர் படத்தரம் மற்றும் உயர்நிலை செயல்திறன் இரண்டையும் விரும்பும் விளையாட்டு ஆர்வலர்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது. மேலும், இந்த monitor-கள் NVIDIA G-SYNC மற்றும் AMD FreeSync™ Premium Pro,3 ஆதரவுடன் வருவதால், தடுமாற்றம், துண்டிப்பு மற்றும் தாமதங்களைக் குறைத்து, மிகச் சிறந்த OLED gaming அனுபவத்தை வழங்குகின்றன.

Odyssey 3D மற்றும் Odyssey OLED G8 மாதிரிகள் தற்போது உலகம் முழுவதும் கிடைக்கின்றன. அதேசமயம், Odyssey OLED G6 மாதிரிகள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இருந்து உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும்.

පාම් තෙල් විරෝධය, විශ්වාස සහ...
2026 ආධුනික වයස් කාණ්ඩ පිහිනුම්...
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும்...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் Rebuilding...
කොකා-කෝලා පදනම සහ සේවාලංකා පදනම...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி...