கொழும்பு, இலங்கை – தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த ஆடம்பர உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka, 2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி தனது பிரமாண்டமான திறப்பு விழாவுடன் பிராந்தியத்தில் ஒரு தைரியமான அடையாளத்தை பதிக்கவுள்ளது. உயர்ரக சுற்றுலா தலமாக நாட்டின் வளர்ந்து வரும் கவர்ச்சியை முன்னிலைப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, உல்லாச விடுதி 100 க்கும் மேற்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள், Influencers மற்றும் Social content creatorsகளை கொழும்புக்கு வரவேற்கவுள்ளது. இவர்கள் ஆடம்பரம், கலாச்சாரம் மற்றும் இலங்கை விருந்தோம்பல் ஆகியவற்றின் அனுபவத்தில் மூழ்கவுள்ளனர். குறிப்பாக ஊடகவியலாளர்களில், இந்தியா, ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் உள்ள முக்கிய தளங்களில் இருந்து புகழ்பெற்ற பிரதிநிதிகள் அடங்குகின்றனர்.
இந்த குறிப்பிடத்தக்க முன்முயற்சியானது இலங்கை சுற்றுலாக் கழகத்தின் “Seeing is Believing” என்ற தேசிய பிரச்சாரத்துடன் ஒத்துப்போகிறது. இந்தப் மேம்பாட்டு நடவடிக்கையின் நோக்கம், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதாகும். உலகளாவிய Global Storytellers மற்றும் பிரபலங்களை நேரடியாக தங்கள் நாட்டிற்கு வரவழைப்பதன் மூலம், இலங்கை தனது அனுபவங்களை மில்லியன் கணக்கான டிஜிட்டல் பதிவுகளாக மாற்றி—உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களுக்கு தனது செய்தியைப் பெரிதுபடுத்தும் என நம்புகிறது. இந்த நாட்டின் பன்முகத்தன்மை, நெகிழ்ச்சித் தன்மை மற்றும் நிகரற்ற இயற்கை அழகு ஆகியவற்றை வெளிப்படுத்துவதில் ஒரு புதுப்பிக்கப்பட்ட கவனத்தை இந்தப் மேம்பாட்டு நடவடிக்கை பிரதிபலிக்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலா ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தொற்றுநோய்க்கு முன்னர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.3% பங்களித்ததுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் 400,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியது. 2019 ஆம் ஆண்டில், இலங்கை 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று, 3.6 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு வரை வலுவான வளர்ச்சிப் போக்கு தொடர்கிறது. சுற்றுலா, வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டுவதற்கும், நாட்டின் பொருளாதார நிலையை மீட்டெடுப்பதற்கும் மிக விரைவான வழிகளில் ஒன்றாக உள்ளது.
John Keells Holdings PLC மற்றும் Melco Resorts & Entertainment ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள City of Dreams Sri Lanka, இலங்கையின் எதிர்காலத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைப் பிரதிபலிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த உல்லாச விடுதி, 800 க்கும் மேற்பட்ட ஆடம்பர அறைகள், உலகத் தரம் வாய்ந்த கேமிங் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், உயர்தர சில்லறை விற்பனை நிலையங்கள், மிச்செலின் தரத்திலான உணவு விடுதிகள், மற்றும் விரிவான சந்திப்பு மற்றும் நிகழ்வு உட்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கொழும்புக்கு ஒரு உருமாறும் மேம்பாடாக, இது 20,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், உயர் மதிப்புள்ள பயணிகளை ஈர்க்கும் என்றும், உலகளாவிய ஆடம்பரப் பயணம் மற்றும் MICE (கூட்டங்கள், சலுகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) துறைகளில் இலங்கையை ஒரு போட்டித்தன்மை வாய்ந்த நாடாக நிலைநிறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு அப்பால், City of Dreams திட்டத்தின் தாக்கம் தெற்காசியப் பிராந்தியம் முழுவதும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் இத்தகைய திட்டங்களில் இதுவே முதலாவதாக இருப்பதால், சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான புதிய தரநிலையை இது நிர்ணயிக்கிறது. இத்திட்டம் ஏற்கனவே உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பிராந்திய ஒத்துழைப்பு, இலக்கு பிராண்டிங் மற்றும் நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரமாண்டமான திறப்பு விழா ஒரு மைல்கல் நிகழ்வாக அமையும். இதில் உல்லாச விடுதியின் வசதிகளை காட்சிப்படுத்தும் ஒரு பிரத்தியேக ஊடகக் காட்சி, நேரடி பொழுதுபோக்கு, கலாச்சார அனுபவங்கள், மற்றும் வலைப்பின்னல் வாய்ப்புகள் இடம்பெறும். விருந்தினர்கள் திட்டத்தின் படைப்பாளிகளுடன் நேரடியாக ஈடுபடவும், சொத்தின் முழு அளவிலான வசதிகளை ஆராயவும், உலகளாவிய பார்வையாளர்களுடன் தங்கள் நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பைப் பெறுவார்கள் – இது City of Dreams Sri Lankaவை பிராந்திய சிறப்பிற்கும் அபிலாஷைக்கும் ஒரு புதிய அடையாளமாக உறுதிப்படுத்தும்.
John Keells தொடர்பில்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) என்பது கொழும்பு பங்குச் சந்தையில் சந்தை மூலதனமயமாக்கலின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வெவ்வேறு தொழில் துறைகளில் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. 155 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 16,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. மேலும், LMD பத்திரிகையால் 19 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பெருநிறுவன அறிக்கையிடல் வெளிப்படைத்தன்மை மதிப்பீட்டில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவால் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருக்கும் JKH, “நாளைக்காக தேசத்தை மேம்படுத்துதல்” என்ற தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) தொலைநோக்குப் பார்வையை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலம் முன்னெடுத்துச் செல்கிறது.
Melco Resorts & Entertainment Limited தொடர்பாக
Nasdaq Global Select Market (Nasdaq: MLCO) அமெரிக்க டெபாசிடரி பங்குகளை பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், ஆசிய மற்றும் ஐரோப்பாவில் ஒருங்கிணைந்த Resort வசதிகளை உருவாக்கி, உரிமையாளராகவும், இயக்குநராகவும் செயல்படுகிறது. இந்த நிறுவனம் தற்போது Macauவின் Cotai மற்றும் Taipa பகுதிகளில் முறையே அமைந்துள்ள ‘City of Dreams’ (www.cityofdreamsmacau.com) மற்றும் ‘Altira Macau’ (www.altiramacau.com) போன்ற ஒருங்கிணைந்த Resortsகளை இயக்குகிறது. மேலும், இந்நிறுவனம் Macauவின் Taipaவில் அமைந்துள்ள ‘Grand Dragon Casino’ மற்றும் Macauவின் மிகப்பெரிய Non-Casino அடிப்படையிலான எலக்ட்ரானிக் கேமிங் இயந்திரங்களை இயக்கும் ‘Mocha Clubs’ (www.mochaclubs.com) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. மேலும், Macauவின் Cotai பகுதியில் சினிமா தலைப்பைக் கொண்ட ‘Studio City’ (www.studiocity-macau.com) என்ற ஒருங்கிணைந்த Resortஐயும் இந்நிறுவனம் இயக்குகிறது.
பிலிப்பைன்ஸில், மணிலாவின் Entertainment City Complexஇல் அமைந்துள்ள ‘City of Dreams Manila’ (www.cityofdreamsmanila.com) என்ற ஒருங்கிணைந்த Resortஐ இந்நிறுவனம் இயக்கி நிர்வகிக்கிறது. ஐரோப்பாவில், சைப்ரஸ் குடியரசின் லிமாசோலில் அமைந்துள்ள ‘ City of Dreams Mediterranean’ (www.cityofdreamsmed.com.cy) மற்றும் சைப்ரஸின் பிற நகரங்களில் உள்ள உரிமம் பெற்ற satellite casinos (“சைப்ரஸ் கேசினோக்கள்”) ஆகியவற்றையும் இந்நிறுவனம் இயக்குகிறது. நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.melco-resorts.com ஐப் பார்வையிடவும். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள்
Hong Kong Exchangeஇன் மெயின் போர்டில் பட்டியலிடப்பட்டுள்ள Melco International Development Limited நிறுவனத்திற்கு சொந்தமானது. இதன் பெரும்பான்மை பங்குகளும் நிர்வாகமும் நிறுவனத்தின் தலைவர், நிறைவேற்று அதிகாரமுடைய பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. லோரன்ஸ் ஹோவிற்கு சொந்தமானது.