Coca-Cola Sri Lanka நிறுவனம், பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தல் மையத்தை (MCPC) ஒக்டோபர் 16ஆம் திகதி அலவ்வையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது.
Coca-Cola அறக்கட்டளையின் (TCCF) நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற நிறுவனமான ஜனதாக்ஷன் GTE நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தொலைநோக்கு வேலைத்திட்டத்துடன் இணைந்து, மறுசுழற்சியை ஊக்குவித்தல், முறையான கழிவு சேகரிப்பு மேம்படுத்தல், மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் கழிவு மேலாண்மை அமைப்பை இத்திட்டம் மேம்படுத்துகிறது. Coca-Cola அறக்கட்டளையின் ஆதரவுடன் நிறுவப்பட்டுள்ள ஐந்து மையங்களில் ஒன்றான அலவ்வ மையம், பிளாஸ்டிக் (PET) கழிவுகளை சேகரித்து பதப்படுத்துவதில் கவனம் செலுத்தி, புதிய வாழ்வாதாரங்களை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.




