BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு: இலங்கையில் பாதிப்பு இல்லை

Share

Share

Share

Share

BYD நிறுவனம் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, சுமார் 1.15 இலட்சம் BYD Tang மற்றும் Yuan Pro வாகனங்களை மீள அழைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வாகன தயாரிப்பில் உயர்தர நிலையை பேணும் முகமாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை BYD நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த மீள் அழைப்பு நடவடிக்கை 2015 மார்ச் முதல் 2017 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட BYD Tang வாகனங்கள் மற்றும் 2021 பெப்ரவரி முதல் 2022 ஆகஸ்ட் வரை தயாரிக்கப்பட்ட சில Yuan Pro மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும், இது இலங்கைக்கு பொருந்தாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதேபோல், இந்த இரண்டு வாகன மாதிரிகளும் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ இல்லை. எனவே தற்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ள எந்தவொரு BYD வாகனமும் இந்த மீள் அழைப்பு நடவடிக்கையால் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

இலங்கையில் உள்ள அனைத்து BYD வாகனங்களும் BYD-யின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் (John Keells CG Auto (Pvt) Ltd) மூலமாக மட்டுமே விநியோகிக்கப்பட்டு சேவை வழங்கப்படுகிறது. இந்த வாகனங்கள் விரிவான தயாரிப்பாளரின் உத்தரவாத்தால் பாதுகாக்கப்படுகின்றன மற்றும் உயர்தர சேவை மற்றும் பராமரிப்பை உறுதிசெய்வதற்காக மாற்று சக்தி வாகன தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கூடிய அர்ப்பணிப்புள்ள விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களும் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

BYD நிறுவனம் வெளிப்படையான தகவல் பரிமாற்றம், பொறுப்பான நடவடிக்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் உறுதியாக உள்ளது. இது நவீன, நம்பகமான, மற்றும் நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் தனது நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.

மேலதிக விபரங்களுக்கு, 0112 125 125 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளவும் அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...
BYD Automobile සමාගමේ ප්‍රකාශය –...
Atlas Pays Tribute to Teachers...
NÜWA Sri Lanka වෙත පැමිණි...
HNB ක්‍රීඩා තානාපති ලෙස ඔලිම්පික්...
Atlas Pays Tribute to Teachers...
NÜWA Sri Lanka වෙත පැමිණි...
HNB ක්‍රීඩා තානාපති ලෙස ඔලිම්පික්...
Sampath Bank and NCE Empower...