கொழும்பு, இலங்கை — இந்த டிசம்பரில் கொழும்பில் தனது முதல் கிறிஸ்மஸை கொண்டாடுவதன் மூலம் City of Dreams Sri Lanka ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டுகிறது. தனது தொடக்க ஆண்டை அர்த்தமுள்ள மற்றும் சமூக நலன் சார்ந்த பண்டிகை நிகழ்ச்சித் திட்டத்துடன் நிறைவு செய்கிறது. இலங்கையர்கள் பலரும் உறவுகள், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் தருணங்களை எதிர்நோக்கும் இந்த சிறப்பான காலப்பகுதியில், City of Dreams Sri Lanka தனது இடங்கள் முழுவதும் அன்பு, சிந்தனை மற்றும் மகிழ்ச்சியை மையப்படுத்திய அனுபவங்களை சமநிலையான மற்றும் மரியாதைக்குரிய முறையில் வழங்கியுள்ளது.
City of Dreams Sri Lanka உணவு, ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார அனுபவங்களுக்கான வளர்ந்து வரும் முக்கிய இடமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந்த முதல் பண்டிகைக் காலம் இந்த அம்சங்களை ஒன்றிணைத்து விருந்தினர்களுக்கு ஒன்றுகூடி விடுமுறை காலத்தின் சிறந்த தருணங்களை அனுபவிக்க எளிமையான மற்றும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குகிறது.
City of Dreams Sri Lanka இன் அதி ஆடம்பர ஹோட்டலான NÜWA Sri Lanka இல், விருந்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பருவகால நிகழ்வுகள், சிறப்பாக திட்டமிடப்பட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் படைப்பாற்றலையும், விருந்தோம்பலையும் முன்னிலைப்படுத்தும் உயர்தர உணவு தருணங்களை அனுபவிக்கலாம். இந்த ஆண்டின் முக்கிய நோக்கம், அமைதியான மற்றும் அன்பான சூழலில் மக்களை ஒன்றிணைக்கும் நெருக்கமான, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அனுபவங்களை உருவாக்குவதாகும்.
City of Dreams Sri Lanka இல் உள்ள Cinnamon Life பண்டிகைக் காலத்தை உற்சாகமாக்கும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட அலங்காரம், சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் குடும்பம் சார்ந்த செயல்பாடுகள் பார்வையாளர்களுக்கு கூடுதல் ஆடம்பரம் இல்லாமல் விடுமுறை காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க வழிவகுக்கின்றன. விடுமுறை சந்தைகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் எளிமையான பண்டிகை கூட்டங்கள் உட்பட, Cinnamon Life மக்கள் ஓய்வு மற்றும் புத்துணர்வு பெறும் இடமாக தொடர்கிறது. இரு இடங்களுக்குமான முழுமையான நிகழ்ச்சித் திட்ட விவரங்கள் City of Dreams Sri Lanka இணையதளத்தில் உள்ளன.
இந்த நிலையில், எதிர்காலத்தில் The Shoppes at City of Dreams தற்போதுள்ள 7ஆவது மாடிக்கு அப்பால் விரிவாக்கம் செய்து, விரைவில் 8ஆவது மாடியை திறக்க உள்ளது. இந்த புதிய மாடி அடுத்த சில மாதங்களில் கூடுதல் சில்லறை விற்பனை, உணவு மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களை அறிமுகப்படுத்தும். இந்த விரிவாக்கம் கொழும்பின் நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், மக்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களை வழங்குவதிலும் City of Dreams இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இது தொடர்பாக City of Dreams Sri Lanka இன் சொத்து துறை துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் Michael Habashi கருத்து தெரிவிக்கையில், “கொழும்பில் எங்கள் முதல் கிறிஸ்மஸை கொண்டாடுவது எங்களுக்கு மிக முக்கியமான தருணம். இந்த ஆண்டு, எங்கள் நோக்கம் வரவேற்பும் ஆறுதலும் தரும் சூழலை உருவாக்குவதாக இருந்தது. பண்டிகை காலத்தின் மகிழ்ச்சியை கொண்டாடுவதோடு, பலர் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு செயல்படுவதாகும்.” என்றார்.
அத்துடன், “2026ஐ எதிர்நோக்கும்போது, சமூகத்திற்கு பயனுள்ளதாகவும், கொழும்பின் வளர்ச்சியடைந்து வரும் நகர்ப்புற அமைப்பிற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குவதாகவும் இருக்கும் இடங்களையும், அனுபவங்களையும் உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
City of Dreams Sri Lanka விருந்தினர்களை தனது முதல் பண்டிகைக் காலத்தை அனுபவிக்க அன்புடன் வரவேற்கிறது. இது அன்பு, சமூக நலன் மற்றும் அமைதியான மகிழ்ச்சியை மையப்படுத்திய கொண்டாட்டமாகும்.


