2025 Glotel விருதுகளில் Huawei மற்றும் அதன் கூட்டாளர் நிறுவனங்களுக்கு அதிக கௌரவம்

Share

Share

Share

Share

சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கிய AI அடிப்படையிலான தீர்வுகளுக்காக, 2025 குளோபல் டெலிகொம்ஸ் (Glotel) விருதுகளில் Huawei மூன்று முக்கிய விருதுகளை கைப்பற்றியுள்ளது.

கென்யாவின் Safaricom நிறுவனத்துடன் இணைந்து, வணிக ஆதரவு மற்றும் செயல்பாட்டு அமைப்புகளை நவீனப்படுத்தியதற்காக சிறந்து விளங்கிய (BSS/OSS Modernization Excellence Award) விருதை Huawei வென்றுள்ளது. இந்தோனேஷியாவின் Telkomsel நிறுவனத்துடன் இணைந்து, வாடிக்கையாளர் திருப்தியில் சிறந்து விளங்கியதற்கான Delighting the Customer Award விருதைப் பெற்றுள்ளது. மேலும், China Mobile நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்திய பாதுகாப்பு தீர்வுக்கு, ஆண்டின் சிறந்த பாதுகாப்பு தீர்வு என்ற பிரிவில் சிறப்பு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

Informa நிறுவனத்தின் தொலைத்தொடர்பு துறை ஊடகப் பிரிவான Telecoms.com நடத்தும் புடழவநட விருதுகள், தொடர்பாடல் துறையின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் சிறப்பான பங்களிப்புகளை வழங்கும் நிறுவனங்களை கௌரவிக்கின்றன. இந்த விருதுகள் Huawei மற்றும் அதன் கூட்டாளர் நிறுவனங்கள் அறிவார்ந்த தொழில்நுட்ப செயல்பாடுகளில் அடைந்துள்ள புத்தாக்கங்களுக்கும் வணிக சாதனைகளுக்கும் சான்றாக அமைகின்றன.

Safaricom மற்றும் Huawei நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கிய புதிய தளம், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு யோசனையை உடனடியாக வருவாயாக மாற்றும் திறன் கொண்டது. இந்தத் தொழில்நுட்பம் சாதாரண மொழி கட்டளைகளின் மூலமே, வாடிக்கையாளர் தரவுகளை ஆய்வு செய்து அவர்களுக்கேற்ற சேவைகளை வடிவமைத்தல், உடனடியாக செயல்படுத்துதல், மற்றும் தனிப்பட்ட முறையில் சந்தைப்படுத்துதல் ஆகிய செயல்களை தானாகவே நிறைவேற்றுகிறது. இதன் விளைவாக, புதிய சேவைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் காலம் பல மாதங்களிலிருந்து சில நாட்களாகக் குறைந்துள்ளது. கைமுறை முறைகளை விட 90% கூடுதல் துல்லியம் கிடைக்கிறது. பாரம்பரிய விளம்பர முறைகளுடன் ஒப்பிடும்போது இருமடங்கு மாற்று விகிதம் கிடைத்துள்ளது மேலும் இந்தத் தளத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சேவைகளில் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேவை குறைவாக கிடைக்கும் பயனர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு தரவு காலநீட்டிப்பு மற்றும் இலவச தொகுப்புகள் வழங்குவதன் மூலம் டிஜிட்டல் சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதிலும் இந்த அமைப்பு பங்காற்றுகிறது.

இந்தோனேஷியாவில் 35.6 கோடி மொபைல் இணைப்புகளும் 125% ஊடுருவல் விகிதமும் கொண்ட மாபெரும் சந்தையில், Telkomsel நிறுவனம் ர்ரயறநi உடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த டிஜிட்டல் இரட்டையர் (Digital Twins) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், நெட்வொர்க் செயல்திறன், சேவை தரம், மற்றும் தயாரிப்பு அனுபவம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களிலும் வாடிக்கையாளர் திருப்தியை ஒரே நேரத்தில் தானாகவே கண்காணித்து மேம்படுத்தும் தொழில்துறையின் முதல் ஒருங்கிணைந்த அமைப்பாக விளங்குகிறது. இதன் பலனாக, வாடிக்கையாளர் திருப்தி 15% உயர்ந்துள்ளது. சேவையின் தரம் மேம்பட்டதால் தரவு பயன்பாடு 22% அதிகரித்துள்ளது. மேலும் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 1.5% வளர்ச்சி அடைந்துள்ளது.

Huawei மற்றும் China Mobile நிறுவனங்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த அறிவார்ந்த செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்பே தடுத்தல், நடைபெறும்போது கட்டுப்படுத்துதல், மற்றும் நிகழ்ந்த பிறகு ஆய்வு செய்தல் ஆகிய மூன்று நிலைகளில் செயல்படுகிறது. மேலும், “செயற்கை நுண்ணறிவு 10 தரவு பாதுகாப்பு” தீர்வின் மூலம் நெட்வொர்க் முழுவதிலும் உள்ள தரவுகளை முழுமையாக கண்காணித்து பாதுகாக்கும் வகையில், அவற்றை உணரவும், கட்டுப்படுத்தவும், பார்க்கவும், மற்றும் கண்டறியவும் முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் China Mobile நிறுவனம் முக்கியமான தரவுகளை அடையாளம் காண்பதில் 99மூ துல்லியம் (முன்கூட்டியே), சாதாரண செயல்பாடுகளுக்கு 30 செக்கன்களிலும், அதிக ஆபத்து நிலைகளுக்கு 12 செக்கன்களிலும் இடர் பகுப்பாய்வு (நடைபெறும்போது), மற்றும் ஆய்வு செயல்திறனில் 95% முன்னேற்றம் (நிகழ்ந்த பிறகு) ஆகிய சாதனைகளை பதிவு செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் மதிப்புச் சங்கிலியில் அறிவார்ந்த செயல்பாட்டு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. Huawei Services & Software பிரிவு, உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது. வணிக செயல்பாடுகளில் தானியங்குமுறையை அதிகரித்தல், பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குதல், மற்றும் முழுமையான அறிவார்ந்த செயல்பாடுகளை நோக்கி நகர்ந்து புதிய வளர்ச்சியை அடைதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

පාම් තෙල් විරෝධය, විශ්වාස සහ...
2026 ආධුනික වයස් කාණ්ඩ පිහිනුම්...
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும்...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் Rebuilding...
කොකා-කෝලා පදනම සහ සේවාලංකා පදනම...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி...