இலங்கையிலுள்ள நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றுவதற்காக 100 OCEAN STRAINER™ இயந்திரங்களுடன் தேசிய அளவிலான முயற்சியை முன்னெடுக்கிறது MAS Foundation for Change

Share

Share

Share

Share

நீர்நிலைகளின் மேற்பகுதியில் கழிவுகளை தேங்குவதைத் தடுக்கும் தனது முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, MAS Foundation for Change அமைப்பு 100ஆவது OCEAN STRAINER™ (சமுத்திர வடிகட்டி) இயந்திரத்தை நிறுவி இத்திட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த நூறாவது இயந்திரம் கொழும்பு, வெள்ளவத்தை கால்வாயில் நிறுவப்பட்டுள்ளது.

OCEAN STRAINER™ முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு தெஹிவளை கால்வாயில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது நீரில் மிதக்கும் ஒரு கழிவுப் பொறி (floating trash trap) ஆகும். இது நீரோட்டத்தைத் தடையின்றி அனுமதிக்கும் அதேவேளையில், பிளாஸ்டிக் மற்றும் ஏனைய மிதக்கும் கழிவுகளை மட்டும் தடுத்துச் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எளிய தொழில்நுட்பம் மற்றும் பாகங்களாகப் பிரித்து மீண்டும் இணைக்கக்கூடிய (modular) வடிவமைப்பு காரணமாக, இதனை பல்வேறு வகையான நீர்நிலைகளிலும் எளிதாகப் பொருத்தவும் பராமரிக்கவும் முடியும். இது செயல்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டிலேயே, 67,000 கிலோகிராமிற்கும் அதிகமான மிதக்கும் கழிவுகள் சமுத்திரத்தில் கலப்பதைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, புத்தளம், மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 100 OCEAN STRAINER™ இயந்திரங்கள் நிறுவப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன.

இந்த அனைத்து அலகுகளும் ஒன்றிணைந்து, ஆண்டுதோறும் சுமார் 2.7 மில்லியன் கிலோகிராம் மிதக்கும் கழிவுகள் கடலில் கலப்பதைத் தடுக்கின்றன. இது கொள்கை ரீதியான நோக்கங்களையும் பேண்தகைமை உறுதிமொழிகளையும், நடைமுறையிலான மற்றும் அளவிடக்கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்பாக மாற்றியுள்ளது.

MAS Foundation for Change அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் செல்வி ஷாரிகா சேனாநாயக்க இது குறித்துக் கூறுகையில்: “இந்த நீர்நிலைகளை நம்மால் தூய்மைப்படுத்த முடியும், ஆனால் அதற்கான முதல் படி இப்பிரச்சினை குறித்து அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாகும். பங்காளி அமைப்புகளுடன் இணைந்து கழிவுகளின் அளவை மதிப்பீடு செய்வதன் மூலம், முறையான கழிவகற்றல் நடைமுறைகளை ஊக்குவிக்க சமூகங்களுடன் எம்மால் ஒத்துழைக்க முடியும். இந்தத் தரவுகள் புதிய வடிவமைப்புகள், புத்தாக்கங்கள் மற்றும் சுழற்சிமுறை அணுகுமுறைகளை (circular approaches) உருவாக்குவதற்கான அடிப்படையை வழங்குகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய கொள்கைகள் மற்றும் சட்டவாக்கங்களுக்குத் தேவையான பலமான சான்றாதாரங்களையும் இவை வழங்குகின்றன.”

MAS Foundation for Change அமைப்பானது, பாரிய அளவிலான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் நோக்குடன் MAS Holdings நிறுவனத்தின் ஓர் சுயாதீனமான, இலாப நோக்கற்ற அமைப்பாக 2022 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பலமான கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, நிலைபேண்தகு தீர்வுகளை உருவாக்குவதே இவ்வமைப்பின் மூலோபாயத்தின் மையப்பகுதியாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது, அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று, இந்த அறக்கட்டளையானது சமுத்திர மாசுபாடு, பல்லுயிர் இழப்பு மற்றும் தூய நீர் கிடைக்காமை போன்ற இலங்கையின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 38க்கும் மேற்பட்ட பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுகிறது. இதில் பல்வேறு அபிவிருத்தி முகவர் நிலையங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன.

100 OCEAN STRAINER™ அலகுகளின் நிறுவலானது, கழிவுகள் சமுத்திரத்தைச் சென்றடைவதற்கு முன்னரே அவற்றைத் தடுப்பதற்கான ஒரு தேசிய அளவிலான மேற்பகுதித் தடுப்பு (upstream intervention) முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது குறித்து இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் (SLLDC) தலைவர், பொறியியலாளர் திரு. சமன் ஸ்ரீ சேனவீர விளக்குகையில்:
“சிக்கலான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் அரச-தனியார் கூட்டாண்மையின் (public-private partnerships) வினைத்திறனை OCEAN STRAINER™ போன்ற முயற்சிகள் நிருபிக்கின்றன. இத்தகைய கூட்டு அணுகுமுறையானது, ஒரு பயனுள்ள தீர்வை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும், அதன் மூலம் எமது நீர் வளங்களையும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்கவும் எமக்கு வழிவகுத்துள்ளது.” என தெரிவித்தார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 100ஆவது நிறுவல் நிகழ்வானது, பெப்ரவரி 18ஆம் திகதி Havelock City அருகிலுள்ள வெள்ளவத்தை கால்வாயில் நடைபெற்றது. இந்நிகழ்வானது, இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், கள அமுலாக்கத்தின் போது பெறப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மாறிவரும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப இத்திட்டம் எவ்வாறு தொடர்ந்து பரிணமிக்கிறது என்பதை விளக்கவும் பங்காளிகளையும் பங்குதாரர்களையும் ஒன்றிணைத்தது.

100 OCEAN STRAINER™ அலகுகளின் நிறுவலுடன், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான ஒரு தெளிவான அணுகுமுறையை MAS Foundation for Change மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது: கழிவுகள் கடலைச் சென்றடைவதற்கு முன்னரே அவற்றை இடைமறித்தல். பல்வேறு தரப்பினருடன் இணைந்து பணியாற்றுதல். அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Redmi Note 15 Serieஐ அறிமுகம்...
இலங்கையிலுள்ள நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றுவதற்காக...
Cinnamon Life at City of...
MAS Foundation for Change Leads...
விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மேம்படுத்த BYD...
EFC National Best Employer Awards...
கண்டி நகரில் நவீன விருந்தோம்பல் சேவையின்...
Sunshine Holdings records LKR 48.9...
EFC National Best Employer Awards...
கண்டி நகரில் நவீன விருந்தோம்பல் சேவையின்...
Sunshine Holdings records LKR 48.9...
Huawei Hosts the 1st Global...