SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026: “இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பானமாக” Coca-Cola Sri Lanka தொடர்ச்சியாக 5-வது முறையாகத் தெரிவு

Share

Share

Share

Share

SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026 இல் (SLIM-Kantar People’s Awards 2026), கோகா-கோலா ஸ்ரீலங்கா நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக “இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பானம்” (Youth Choice Beverage Brand of the Year) என்ற கௌரவத்தைப் பெற்றுள்ளது.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) மற்றும் கான்டார் (Kantar) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் SLIM-Kantar மக்கள் விருதுகள், இலங்கையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் வாக்களிப்பு விருதுத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த வர்த்தக நாமங்களுக்கு (Brands) இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் நாடு முழுவதிலுமுள்ள நுகர்வோரின் மனநிலை மற்றும் அவர்கள் விரும்பும் வர்த்தக நாமங்களின் உண்மையான பிரதிபலிப்பாகக் கருதப்படுகின்றன.

மாறிவரும் பழக்கவழக்கங்கள், புதிய தளங்களின் எழுச்சி மற்றும் மாறிவரும் கலாச்சாரத் தாக்கங்கள் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு நுகர்வோர் பிரிவிடம் இருந்து Coca-Cola Sri Lanka நிறுவனத்திற்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இளம் நுகர்வோரின் முதன்மைத் தெரிவுகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் அதேவேளை, மக்களின் அன்றாட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒரு அங்கமாகவும் Coca-Cola தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்த அங்கீகாரம் குறித்து Coca-Cola Sri Lanka-வின் இலங்கைக்கான பணிப்பாளர் மரியோ பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “ஆரம்பத்திலிருந்தே, இலங்கை இளைஞர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் விதம் மற்றும் அவர்கள் நேரத்தைச் செலவிடும் விதம் ஆகியவற்றுடன் நெருக்கமாக இருப்பதிலேயே எமது கவனம் இருந்து வருகின்றது. அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருவதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இந்த அங்கீகாரமானது எமது அந்தத் தொடர்ச்சியான முயற்சிக்குக் கிடைத்துள்ள சான்றாகும். அத்துடன் மக்கள் மற்றும் சமூகங்களுடன் அர்த்தமுள்ள வழிகளில் எவ்வாறு தொடர்ந்து இணைந்திருப்பது என்பதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறோம்.” எனத் தெரிவித்தார்.

ஒரு பான வர்த்தக நாமம் என்ற அடையாளத்திற்கு அப்பால், Coca-Cola Sri Lanka நிறுவனம் கல்வி, சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முன்முயற்சிகளை ஆதரவளித்து வருகின்றது. இந்த முயற்சிகள், இளைய தலைமுறையினர் உள்ளிட்ட தான் சேவையாற்றும் சமூகங்களுடன் நிறுவனத்திற்கு உள்ள விரிவான ஈடுபாட்டின் ஒரு அங்கமாக அமைகின்றன.

இவற்றில் Coca-Cola Sri Lanka-வின் ‘Give Back Life’ திட்டமும் ஒன்றாகும். இது நீர் மீள்நிரப்பல், நீர் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்களைச் சமூகங்கள் பெற்றுக்கொள்வதற்கான ஆதரவு உள்ளிட்ட நீர் மேலாண்மை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் ஊடாக, உள்ளூர் சமூகங்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாடு முழுவதுமுள்ள நுகர்வோர் தமக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக Coca-Cola Sri Lanka நிறுவனம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டதுடன், இது அந்த வர்த்தக நாமத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Prime Group Drives Knowledge‑Building Program...
IMRA Awards 2026 opens applications...
Thayalan Bartlett Named Among APAC’s...
Gartner® Peer Insights™ ‘வாடிக்கையாளர் தெரிவு’...
Janashakthi Life transforms workplace compassion...
Smart Quest marks 20 years...
சர்வதேச நட்சத்திரங்களை ஈர்க்க தயாராகும் 2026...
City of Dreams Sri Lanka...
Smart Quest marks 20 years...
சர்வதேச நட்சத்திரங்களை ஈர்க்க தயாராகும் 2026...
City of Dreams Sri Lanka...
Huawei අඛණ්ඩව දෙවන වරටත් Gartner®...