புதிய வாகன மாடல்களுக்கான விரிவான லீசிங் தீர்வுகளை வழங்கும் வகையில், Micro Cars நிறுவனத்துடன் கைகோர்க்கும் HNB

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, சமீபத்தில் Micro Cars (தனியார்) நிறுவனத்துடன் புதிய கூட்டாண்மை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது. இந்தக் கூட்டாண்மை மூலம், Tioggo4 PRO Mid Size SUV, Proton SAGA Sedan REXTON Sports மாதிரிகள் உள்ளிட்ட புதிய MG வாகன வரிசை மற்றும் ஆடம்பர பஸ்களுக்கு வசதியான மற்றும் மலிவு விலை லீசிங் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த HNB நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த HNB இன் சிரேஷ்ட துணைத் தலைவரும் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவின் தலைவருமான காஞ்சன கருணாகம, “நம்பகமான நிதி நிறுவனமொன்றாக, எங்கள் வாடிக்கையாளர்களை மேன்மைப்படுத்த நாங்கள் எப்போதும் உறுதிபூண்டுள்ளோம். இந்தக் கூட்டாண்மை மூலம், எங்கள் வாடிக்கையாளர் சமூகத்தின் தனிப்பட்ட மற்றும் வணிக வாகனத் தேவைகளுக்காக முதலீடு செய்வதற்கான நிதி சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் வழங்க நாங்கள் செயல்படுகிறோம். ஒரு வாகனத்தைச் சொந்தமாக்கும் கனவுகளை நனவாக்க, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையிலும் நீண்டகாலப் பலனை வழங்கக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என தெரிவித்தார்.

வலுவான நிதி நிபுணத்துவம், விரிவான கிளைகளின் வலையமைப்பு மற்றும் சிறப்பான டிஜிட்டல் திறன்களுடன், HNB அதன் வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் விரைவான லீசிங் சேவையை உறுதி செய்கிறது. மக்களிடையே நிதி நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் HNB இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு வலியுறுத்துகிறது. இதன் கீழ், வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான லீசிங் வட்டி விகிதங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள HNB கிளைகள் மூலம் வழங்கப்படும் ஆலோசனை உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

“இலங்கையர்களின் வாகனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எங்களுடன் கைகோர்த்துள்ள HNBக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நீண்ட காலமாக இலங்கை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிதி நிறுவனமான HNB மூலம், சிறிய அளவிலான வாகனங்கள் முதல் ஆடம்பர வாகனங்கள் வரையிலான பரந்த வரம்பிற்கான லீசிங் தீர்வுகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது” என்று Micro Cars (தனியார்) லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் CRM பிரிவுகளின் தலைவர் ஜேக்கப் நிஷாந்தன் தெரிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...