TikTok தளத்தின் ’Cook & Create’ ஊடாக புத்தாண்டு உணவுகளை உலகிற்கு கொண்டு செல்லும் மதுஷிகா டில்ஷானி

Share

Share

Share

Share

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஏப்ரல் மாதம் பிறக்கும்போதே நம் அனைவரது மனதிலும் ஒரு சொல்லொணா மகிழ்ச்சி குடிகொள்கிறது. வீடுகளில் மெல்லத் தொடங்கும் முன்னேற்பாடுகள், விடுமுறையை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுவர்களின் உற்சாகம் மற்றும் பழைய நினைவுகளில் மூழ்கும் பெரியவர்களின் மனநிலை என ஒவ்வொன்றும் சிங்கள – தமிழ் புத்தாண்டு காலத்தின் வருகையை உணர்த்துகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களின் இதயமாகத் திகழ்வது உணவாகும். அது வெறும் பசியைத் தீர்க்கும் ஒன்றல்ல் மாறாக அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் மனித உறவுகளை ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாகக் காணப்படுகிறது. இந்த ஆழமான உணர்வை ஒரு தனிப்பட்ட சமையலறையிலிருந்து சமூக ஊடகங்களுக்கு எடுத்துச் செல்வதில் வுமைவுழம தளமும் மதுஷிகா டில்ஷானி பெரேரா போன்ற படைப்பாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

மதுஷிகா டில்ஷானி பெரேரா தனது ’Cook & Create’ எனும் TikTok மூலம் பாரம்பரிய மற்றும் நவீன உணவு வகைகளைப் பகிர்ந்து வரும் ஒரு திறமையான இல்லத்தரசி ஆவார். இவருக்குச் சமையல் என்பது ஆரம்பத்திலிருந்தே ஒரு தனிப்பட்ட விருப்பமாகவும், மனதிற்கு அமைதி தரும் ஒரு கலையாகவுமே இருந்து வந்துள்ளது. ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தனது பயணத்தைத் தொடங்கவில்லை. மாறாக, தான் நேசித்த ஒரு செயலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே அவரை வழிநடத்தியது. ஆனால், காலப்போக்கில் இவரது சமையல் குறிப்புகளைப் பார்த்துவிட்டு மக்கள் தெரிவித்த பாராட்டுக்களும், அவர்கள் காட்டிய ஈடுபாடும் மதுஷிகாவின் தனிப்பட்ட முயற்சியை ஒரு பொதுவான மகிழ்ச்சியாக மாற்றியது.

புத்தாண்டு காலத்தில் சமையலறை என்பது வெறும் உணவு தயாரிக்கும் இடமாக அல்லாமல், குடும்ப உறுப்பினர்கள் கதைகளைப் பகிர்ந்து, ஒன்றிணைந்து செயலாற்றும் ஒரு களமாக மாறுகிறது. மதுஷிகாவின் வீட்டில் புத்தாண்டு என்பது மிக அழகிய தருணங்களில் ஒன்றாகும். பாரம்பரிய உணவுகளைத் தயாரிப்பதன் மூலம் கடந்த கால நினைவுகள் மீண்டும் துளிர்விடுகின்றன. கொக்கிஸ் போன்ற உணவுகளின் மொறுமொறுப்பான சத்தம் மற்றும் இனிப்புப் பண்டங்களின் மணம் என்பவை தலைமுறைகளைக் கடந்து மக்களை இவைணக்கும் ஒரு பாலமாகத் திகழ்கின்றன. இந்த உணர்வுகளையும், பாரம்பரியத்தின் அழகையும் சிதையாமல் வழங்குவதையே மதுஷிகா தனது நோக்கமாகக் கொண்டுள்ளார்.

இன்று TikTok போன்ற தளங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை நவீனத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு ஊடகமாக மாறியுள்ளன. மதுஷிகா தனது வீடியோக்களில் நவீன இசைக்கோர்ப்புகள், விரைவான காட்சிக் கோணங்கள் மற்றும் நேர்த்தியான படத்தொகுப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், பாரம்பரிய சமையலை இளைய சமூகத்தினர் விரும்பும் வகையில் வழங்குகிறார். TikTok Creative Center போன்ற கருவிகள் தற்காலப் போக்குகளை அறிந்து வீடியோக்களை மெருகேற்ற அவருக்கு உதவுகின்றன. இதன் மூலம் கொக்கிஸ் தயாரிப்பின் போது எழும் சத்தத்தையும், அதன் அழகிய வடிவங்களையும் மிக நெருக்கமாகப் படம்பிடித்துப் பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை அவர் வழங்குகிறார்.

தனிப்பட்ட ஒரு வீட்டின் சமையலறையில் மதுஷிகா மேற்கொண்ட இந்தச் சிறிய முயற்சி, இன்று ஆயிரக்கணக்கான மக்களைச் சென்றடைந்து ஒரு டிஜிட்டல் கலாச்சாரமாக மாறியுள்ளது. பார்வையாளர்கள் இவரது வீடியோக்களைப் பார்ப்பதுடன் நின்றுவிடாமல், அந்த உணவுகளைத் தாங்களும் தயாரித்துப் பார்த்துத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது ஒரு வகையான கூட்டுச் சமுதாய உணர்வை உருவாக்குகிறது. தனது வீடியோக்களைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கதகதப்பும், மகிழ்ச்சியும், குடும்ப நினைவுகளும் கிடைக்க வேண்டும் என்பதே மதுஷிகாவின் எதிர்பார்ப்பாகும். இதன் மூலம் TikTok வெறும் பொழுதுபோக்குத் தளம் என்பதையும் தாண்டி, கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் ஒரு தளமாக மிளிர்கிறது.

தொழில்நுட்பம் மற்றும் பகிர்வு முறைகள் மாறினாலும், புத்தாண்டு பண்டிகையின் அடிப்படை நோக்கம் இன்னும் மாறாமல் தொடர்கிறது. முன்பெல்லாம் ஒரு வீட்டுச் சமையலறைக்குள் முடங்கிக் கிடந்த அந்த அன்பு நிறைந்த தருணங்கள், இன்று டிஜிட்டல் தளங்களின் ஊடாக உலகெங்கிலும் உள்ள மக்களைச் சென்றடைகின்றன. மதுஷிகாவின் சமையலறையில் இப்போதும் அதே பாரம்பரிய முறைகள் பின்பற்றப்படுகின்றன் ஆனால் அவை இன்று ஆயிரக்கணக்கானோருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன. இறுதியில், புத்தாண்டு என்பது மேசையில் இருக்கும் உணவுகளைப் பற்றியது மட்டுமல்ல, அந்த உணவுகளைச் சுற்றி மக்களை ஒன்றிணைக்கும் அன்பைப் பற்றியதாகும்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...