Asiamoney Awards 2023 இல் HNB சிறந்த SME வங்கியாக அங்கீகரிக்கப்பு

Share

Share

Share

Share

கீழ்மட்ட நிதி உள்ளடக்கம் மற்றும் தொழில்முயற்சியை ஊக்குவிப்பதில் அதன் முக்கிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், 2023 Asiamoney விருது வழங்கும் நிகழ்வில் HNB PLC மீண்டும் இலங்கையின் சிறந்த SME வங்கியாக அறிவிக்கப்பட்டது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள முன்னணி வங்கிகள் மத்தியில் சிறந்து விளங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் செயல்முறையானது, வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டியாளர்களின் கருத்துக்களைக் அடிப்படையாகக் கொண்டு நிதி செயல்திறன் மற்றும் மூலோபாய வணிக மாதிரிகள் ஆகியவற்றின் துல்லியமான மதிப்பீடுகள் பின்பற்றப்பட்டுள்ளன.

“SMEக்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதவை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% ஐ உருவாக்குகின்றன, மேலும் இலங்கையின் மொத்த பணியாளர்களில் 45% க்கும் அதிகமானவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குகின்றன. அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும், HNB கீழ்மட்டத்திலுள்ள நிறுவனங்களுக்கு வலுவூட்டும் வகையில் செயலாற்றி வருகிறது.”

“தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையிலும், எங்களது SME துறையின் வளர்ச்சி மற்றும் வலுவூட்டல் பணி இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. Asiamoney எங்களது முயற்சிகளை அங்கீகரித்ததற்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். முக்கியமாக, எமது ஊழியர்கள் தொடர்ந்து SME களை ஆதரிப்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்டு, இந்த சவாலான காலகட்டத்தை சமாளித்து பொருளாதார மீட்சிக்கான விதைகளை விதைப்பதற்கும் நாங்கள் நன்றி கூறுகின்றோம்.” என HNBஇன் பிரதி பொது முகாமையாளர் வாடிக்கையாளர் வங்கிக் குழு சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்தார்.

HNBஇன் கிராமப்புற நிறுவனங்களுடன் கூட்டுசேர்வதற்கு அதன் அர்ப்பணிப்பு அதன் தொடக்கத்திற்கு பின்னோக்கி செல்கிறது, இது 1888 ஆம் ஆண்டில் இலங்கையின் மலைநாட்டில் நிறுவப்பட்ட நிறுவனமாகும்இ HNBஇன் துணை பொது முகாமையாளர் – SME மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ், ராஜீவ் திஸ்ஸநாயக்க, இந்த கிராமப்புற நிறுவனங்களின் முன்னேற்றத்தில் ஒரு பங்காளராக சேவை செய்ய வங்கியின் பணி இப்போது உருமாறி வருகிறது என்று கூறுகிறார்.

“எங்களது SME துறையின் வளர்ச்சியில் முற்றிலும் புதிய அளவை உருவாக்குவதற்கு, எங்களது தனித்துவமான நிபுணத்துவம் மற்றும் SME களுடன் பல தலைமுறைகளாக நாங்கள் வளர்த்துள்ள ஆழமான தனிப்பட்ட உறவுகள் ஆகியவற்றுடன், நாங்கள் மேற்கொண்டுள்ள டிஜிட்டல் வங்கி வளர்ச்சி முன்னேற்றங்கள் சாத்தியம் உள்ளது. COVID தொற்றுநோய் முழுவதும், எங்கள் முதல் முன்னுரிமை ஒவ்வொரு நாளும் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு வழங்குவதாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்

இலங்கையிலுள்ள கிராமப்புற டிஜிட்டல் மயமாக்கத்தை மேலும் முன்னேற்றுவதற்காக, வங்கி பாவனையாளர் நேர்மையான டிஜிட்டல் வங்கி சேவைகள் மற்றும் ERP தீர்வுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த அளவிலான ஒட்டுமொத்த தீர்வுகளை வழங்குகிறது. HNB ஆனது AppiGo தளம் மூலம் மலிவு விலையில் ஆன்லைன் பணம் செலுத்தும் நுழைவாயில்கள் மூலம் e-commerce ஒருங்கிணைப்பிற்கும் உதவுகிறது.

எல்லை கடந்த வர்த்தக வாய்ப்புகளைத் தொடர உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களுக்கு ஒரு சிறந்த இடத்தை வழங்கும் வகையில், இலங்கையின் ஏற்றுமதி செயல்திறனை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, HNB Cord 360.com உடன் இணைந்துள்ளது – இது ஏற்றுமதியாளர்களுக்கு நிதி, சரக்கு போக்குவரத்து, பேக்கேஜிங் மற்றும் சந்தை வாய்ப்புக்கள் போன்ற முக்கிய பகுதிகளில் ஆதரவை வழங்கும் ஒரு ஆன்லைன் சந்தைப்படுத்தல் தளம். குறிப்பாக, இந்த தளம் வெளிநாட்டு வணிக பங்குதாரர்களுடன் இணைப்பதற்கும், வர்த்தகத்தை பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் உள்ள செயல்முறைகள் மற்றும் செலவுகளை துரிதப்படுத்துகிறது, இது இத்தகைய நடவடிக்கைகளில் கூடுதல் சவால்களை எதிர்கொள்ளும் SME களுக்கு குறிப்பாக பயனளிக்கிறது.

 

குழந்தைகளுக்காக நிதி திரட்டும் ‘Country Roads’...
பின்தங்கிய பாடசாலைகளிலுள்ள மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப...
உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...