Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய 12KG Front Load சலவை இயந்திரங்களுடன் விரிவுபடுத்தும் Samsung Sri Lanka

Share

Share

Share

Share

இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் மின்சாதன வர்த்தக நாமமான Samsung, தனது Bespoke சலவை வரிசையின் விரிவாக்கமாக புதிய 12முபு குசழவெ டுழயன சலவை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெற்றிகரமான 10.5KG மாதிரிகளின் வெற்றியைத் தொடர்ந்து, இப்புதிய சலவை இயந்திரங்கள் சிறிய அளவில் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்குகின்றன. நவீன இலங்கை வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இவை, உயர்தர தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளரின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப Samsung இன் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

இப்புதிய 12KG Front Load சலவை இயந்திரங்கள் பெரிய துணிகளை கையாளும் வகையில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆடைகள், படுக்கைத் துணிகள் மற்றும் துவாலைகள் போன்ற அன்றாட சலவைக்கு சிக்கனமான தீர்வுகளை வழங்குகின்றன. மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய இந்த இயந்திரங்களில், விரைவான சலவைக்கான Super Speed, 70% வரை மின்சாரம் சேமிக்கும் AI Energy Mode போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், சிறந்த துணி பராமரிப்புக்கான Ecobubble மற்றும் ஆழமான சுகாதார சுத்தத்திற்கான hygienic clean ஆகியவை உள்ளன. இந்த தொடர் நவீன தொழில்நுட்பம் மற்றும் வலுவான செயல்திறனுடன் அன்றாட சலவையை மிகவும் திறமையாகவும் சிரமம் இன்றியும் மாற்றுகிறது. WD12D மாதிரி பிரத்தியேகமாக துணி உலர்த்தியுடனும் வருகிறது.

இப் புதிய அறிமுகம் குறித்து Samsung Sri Lanka-வின் முகாமைத்துப் பணிப்பாளர் SangHwa Song கருத்து தெரிவிக்கையில், ‘எங்களது 12KG Bespoke AI சலவை இயந்திரங்கள் அழகிய மற்றும் சிறிய வடிவமைப்புடன், சிறந்த செயல்திறனை வழங்குவதோடு எந்தவொரு இடத்திலும் சிரமம் இன்றி பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. புத்தாக்கம் எவ்வாறு அன்றாட பணிகளை எளிமைப்படுத்தி திறனை அதிகரிக்கிறது என்பதற்கு இவை ஒரு உண்மையான சான்றாகும். இந்த சலவை இயந்திரங்கள் வாடிக்கையாளர் நேரத்தையும், ஆற்றலையும் சேமிக்க உதவும் Super Speed போன்ற செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் உள்ளுணர்வு அம்சங்களை வழங்குகின்றன. அழகு மற்றும் செயல்பாட்டின் சரியான கலவையுடன், இந்த இயந்திரங்கள் பெரிய துணிகளுக்கான கொள்ளளவை உகந்ததாக்கி, நடைமுறைத் தன்மையை கவர்ச்சிகரமான மற்றும் உயர்தர வடிவமைப்புடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன,’ என அவர் தெரிவித்தார்.

12KG Bespoke AI சலவை வரிசை சலவை இயந்திரங்கள் கவர்ச்சிகரமானவை, மற்றும் அவற்றின் மேம்பட்ட தோற்றம் எந்த சமகால இடத்தின் அழகையும் அதிகரிக்கிறது. கச்சிதமான ஆனால் விசாலமான உள்ளக Drum அளவுடன், இவை செயல்பாடு மற்றும் இட பயன்பாட்டின் சமநிலையை நாடும் வீடுகளுக்கு மிகவும் ஏற்றவை. அதேபோல, இந்த சலவை இயந்திரங்களை கருப்பு மற்றும் இனாக்ஸ் நிறங்களில் பெறலாம்.

Samsung இன் 12KG Front Load சலவை இயந்திரங்கள் 199,999 ரூபா முதல் Singhagiri, Singer, Damro மற்றும் Softlogic விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன.

Stakeholders validate apparel curriculum for...
Cinnamon Signature Selection, සංචාරක කර්මාන්තයේ...
Neo QLED, OLED, QLED மற்றும்...
Samsung ශ්‍රී ලංකා, Galaxy F06...
ශ්‍රී දළඳා වන්දනාවට සමගාමීව පාරිසරික...
MullenLowe Group Sri Lanka Appoints...
HNB සමූහය 2025 වසරේ පළමු...
Samsung Sri Lanka Ushers in...
MullenLowe Group Sri Lanka Appoints...
HNB සමූහය 2025 වසරේ පළමු...
Samsung Sri Lanka Ushers in...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් සිංහල හා හින්දු...