பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி இலங்கை ஏற்றுமதியாளர்களின் தேசிய சபையின் தங்க விருது வென்று கோழி இறைச்சி ஏற்றுமதித் துறையில் தனது முதன்மை நிலையில் மேலும் முன்னோக்கி செல்கின்றது

Share

Share

Share

Share

தேசிய ஏற்றுமதியாளர்கள் மன்றம் (NCE) 33 ஆவது தடவையாக ஏற்பாடு செய்த வருடாந்த விருது வழங்கும் விழாவில் பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனம் கோழி இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தித்துறையில் (நடுத்தரப் பிரிவில்) தங்க விருதை வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த விருது இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு நிறுவனத்தின் சிறப்பான பங்களிப்பையும் மதிப்பீட்டு ஆண்டின் அதன் வலுவான செயற்திறன்களையும் பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டுகின்றது.

NCE விருதுகள் இலங்கை ஏற்றுமதியாளர்களின் ஸ்திரமான சிறப்பு நிலையையும் உயர் பெறுமானத்தையும் பறைசாற்றும் தேசிய அங்கீகாரமாக கருதப்படுகின்றது. ஏற்றுமதி வளர்ச்சி, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் மேம்பாடு, பெறுமான சேர்க்கை, தர உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவ முறைமைகள், நிறுவனத்தின் கீர்த்தி நாமம், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் நடைமுறை நிர்வாக ஒழுங்குகள் ஆகிய பல்வேறுபட்ட அளவுகோல்களின் அடிப்படையில் வெற்றியாளர்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றனர்.

பைரஹா நிறுவனத்திற்கான தங்க விருது, 2025 ஆம் ஆண்டில் அதன் வலுவான ஏற்றுமதி செயல்திறனை பிரதிபலிக்கின்றது. பெறுமானங்களுடன் கூடிய ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் உயர்தரத்திலான உற்பத்திகளின் விரிவாக்கமும் இதற்கு வழிவகுத்தன. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் அதன் ஏற்றுமதி அளவில் 25% உயர்வு பதிவாகியுள்ளது.

தரக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகள், உத்தரவாதமளிக்கப்பட்ட செயல்முறைகள், விதிமுறைகளுக்கு இயைவான செயற்பாடுகள், தரத்தையும், நம்பகத்தன்மையையும் உறுதி செய்தல் என்பன இவ்வடைவுக்கு துணை நின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான யாகூத் நளீம் அவர்கள், “பல தலைமுறைகளாக பைரஹா நிறுவனம் தரமான, நம்பகமான சத்துணவை மக்களுக்கு வழங்கி வருகின்றது. கடந்த வருடம் நாம் அடைந்த முன்னேற்றங்களின் அடையாளமாக இந்த தங்க விருது விளங்குகின்றது. ஏற்றுமதிகளை விரிவுபடுத்தல் மற்றும் எமது உயர்ந்த தர உற்பத்திகளுக்கு பெறுமானங்களைச் சேர்த்து அவற்றை மேம்படுத்துதல் மூலம் இந்த சாதனையை நாம் எட்டினோம். எமது அணியின் அர்ப்பணிப்பும், ஈடு இணையற்ற எமது உற்பத்திகளின் உயர்ந்த தரமுமே அதற்கு அடிப்படையாக அமைந்தன என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் மதிப்பேற்றத்தை மேலும் விரிவுபடுத்துதல், செயல்திறனை வலுப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் என்பவற்றில் கவனம் செலுத்துவது எமது நோக்கமாகும்.

பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனம் நாட்டுக்கான சத்துணவை வழங்கிவரும் இந்நிறுவனம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன் விழாவை கொண்டாடுகின்றது. ஐந்து தசாப்தங்களுக்கு மேற்பட்ட தொழில் அனுபவத்துடன் கோழி இறைச்சி மற்றும் கால்நடை வேலாண்மை துறையில் முன்னிலை வகிக்கின்றது. முறையான செயற்பாடுகள், தரத்தை தொடர்ந்தேச்சையாகப் பேணுதல், சர்வதேசப் பங்களாளர்களுடனான முழுமையான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நாட்டின் அபிவிருத்தியில் நம்பகமான பங்களார் என்ற வகையில் அது தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது.

1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பைரஹா ஃபார்ம்ஸ், இலங்கையின் தரமான கோழி இறைச்சி உற்பத்தியின் முன்னோடியாகத் திகழ்கின்றது. நாட்டுக்கான சத்துணவை வழங்கிவரும் இந்நிறுவனம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன் விழாவை கொண்டாடுகின்றது.

முழுமையாக ஒருங்கிணைந்த கோழி இறைச்சி நிறுவனம் என்ற வகையில், 17 இடங்களில் மூத்த இனப்பெருக்க கோழி (GP) வளர்ப்பு முதல் விநியோகம் வரை தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிறுவனம் FSSC 22000 உட்பட பல சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களையும் பெற்று வாகை சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka strengthens business confidence...
ජී.එස්.පී ප්ලස් යලි සලකා බැලීම...
99x Rebuilds Flood-Damaged IT Labs...
Sunshine Holdings records 16.6% YoY...
Janashakthi Life සමාගම Great Place...
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில்...
Samsung Sri Lanka Opens Pre-orders...
The Royal College Union, jointly...
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில்...
Samsung Sri Lanka Opens Pre-orders...
The Royal College Union, jointly...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් අනාගතය වෙනුවෙන් සිය...