BMPC Awards 2026 நிகழ்வில் இரண்டு முக்கிய விருதுகளை வென்ற HNB FINANCE PLC

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதிச் சேவை வழங்குநர்களில் ஒன்றான HNB FINANCE PLC, 2026 மார்ச் 27 அன்று நடைபெற்ற அதன் முதலாவது சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன (BMPC) விருதுகளை வென்றது. BMPC Awards 2026, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள Monarch Imperialஇல் நடைபெற்றது. இதற்கமைய, HNB FINANCE PLC, நிதி மற்றும் லீசிங் (தனியார் துறை) பிரிவில் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் 2026 இல் நாற்பது சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இலங்கை பட்டய தொழில்முறை முகாமையாளர்கள் நிறுவனத்தினால் (CPM Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் 2026, சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள், மூலோபாய தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை மேன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிப்பதையும் கௌரவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விருதுகள் குறித்து கருத்து தெரிவித்த HNB Finance PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேவற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத், “இவ்விருதுகளால் நிறுவனம் பெருமகிழ்ச்சியும் கௌரவமும் அடைகிறது நிறுவனத்தின் பணிகளை எளிமையாக்கிய சிறந்த முகாமைத்துவ நடைமுறைகளும், நிறுவனம் மேற்கொண்ட வெற்றிகரமான மாற்றங்களுமே இந்த விருதுகளுக்குக் காரணம் கடந்த நிதியாண்டில், அனைத்து முக்கிய பிரிவுகளிலும் நிறுவனம் மிகச்சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளது. எங்களது வணிக மாதிரியை (business model) மாற்றி, சிறந்த பலன்களைத் தந்ததற்கான இந்த அங்கீகாரம் பெருமையளிக்கிறது. இந்நிறுவனத்தோடு தொடர்புடைய அனைவரையும் உயர்த்துவதற்கும், தொடர்ந்து முன்னேறுவதற்கும் இவ்விருதுகள் தங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.” என அவர் தெரிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...