BYD இன் புகழ்பெற்ற SEAGULL மின்சார வாகனம் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி சாதனை

Share

Share

Share

Share

BYD நிறுவனத்தின் ஷியான் தொழிற்சாலையில் 2025 ஜூன் 30ஆம் திகதி தயாரிக்கப்பட்ட SEAGULL மின்சார வாகனம் ஒன்றுடன், இந்நிறுவனம் இவ்வாகன மாதிரியின் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி புதிய வரலாறு படைத்துள்ளது. சந்தையில் அறிமுகமானதிலிருந்து இந்த சாதனையை எட்ட இவ்வாகனத்திற்கு வெறும் 27 மாதங்களே தேவைப்பட்டது. இது உலகிலேயே வேகமாக ஒரு மில்லியன் விற்பனையை எட்டிய முழு மின்சார வாகனம் மற்றும் A00-வகுப்பு மாதிரியாக திகழ்கிறது. அதிநவீன தொழில்நுட்பம், சிறந்த வடிவமைப்பு மற்றும் உயர்தர பாதுகாப்பு அம்சங்களுடன் சிறிய மின்சார வாகனங்களின் தரத்தை புதிதாக வரையறுத்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கியுள்ளது.

உலகளாவிய வெற்றி: ஒரு மில்லியன் விற்பனையை கடந்த வேகமான முழு மின்சார வாகனம் மற்றும் A00-வகுப்பு கார், தரமான வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.

போட்டி நிறைந்த A00-வகுப்பு பிரிவில் SEAGULL சிறப்பான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 2023 ஏப்ரலில் அறிமுகமானதிலிருந்து, A00-வகுப்பு மாதிரிகளுக்கான மாதாந்த விற்பனையில் 21 தடவைகள் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், மின்சார sedan பிரிவில் 19 தடவைகள் முன்னணியில் இருந்துள்ளது. 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் A00 பிரிவில் அதிக விற்பனையாகும் வாகனமாகத் திகழ்ந்ததுடன், 2024இல் sedan வகையில் முதலிடத்தையும் பிடித்தது. வெறும் 27 மாதங்களில் ஒரு மில்லியன் அலகுகள் விற்பனையை எட்டி, Seagull தொழில்துறையில் அபூர்வமான ‘சீகல் வேகத்தை’ (Seagull Speed) நிரூபித்துள்ளது. அத்துடன், உலகளாவிய A00-வகுப்பு மின்சார வாகன சந்தையின் வளர்ச்சிக்கு புதிய தரநிலையை அமைத்துள்ளது.

SEAGULL வாகனமானது உலகெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2024 பெப்ரவரியில் பிரேசிலில் அறிமுகமானபோது, முதல் நாளிலேயே 7,635 அலகுகள் விற்பனையாகி சாதனை படைத்தது. 2024ம் ஆண்டின் இறுதிக்குள் பிரேசிலில் 21,968 வாகனங்கள் பதிவாகி, அங்கு அதிகம் விற்பனையாகும் முழு மின்சார வாகனமாக மாறியது. 2025ம் ஆண்டின் முதல் காலாண்டில், 6,554 வாகனங்கள் பதிவாகி பிரேசிலின் மொத்த மின்சார வாகன விற்பனையில் 50% க்கும் அதிகமாக அடுத்த ஒன்பது பிரபலமான மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கையை விஞ்சியது. மே மாதத்தில் Seagull (Dolphin Surf) ஐரோப்பாவில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 15 நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் சிறந்த செயல்திறன் காரணமாக ஐரோப்பிய சந்தையில் விரைவாக பிரபலமடைந்தது.

e-Platform 3.0 தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாகனம், முழுமையான செயலில் மற்றும் செயலற்ற பாதுகாப்பு அம்சங்களுடன் கூடியதாக உள்ளது. இது அனைத்து பயணிகள் கார்களுக்கும் ஒரு புதிய தரநிலையை அமைத்துள்ளது.

BYD SEAGULL வாகனம், e-Platform 3.0 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பை மையமாகக் கொண்ட உயர்தர மேம்பாட்டு உத்தியைப் பின்பற்றுகிறது. A00-வகுப்பு வாகனங்களில் காணப்படும் பாரம்பரிய பாதுகாப்புக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உலகெங்கிலும் உள்ள SEAGULL பாவனையாளர்களுக்கு அதிக பாதுகாப்புடன் கூடிய ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது.

மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில், SEAGULL ஒரு மில்லியன் அலகுகள் விற்பனை மைல்கல்லைக் கடந்து, உலகளாவிய A00-பிரிவு சந்தையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. உலகெங்கிலும் ஒரு மில்லியன் பாவனையாளர்களின் பாராட்டுகள், SEAGULL இன் தனித்துவமான தயாரிப்பு வலிமை மற்றும் நம்பகமான தரத்தை உறுதிப்படுத்துகிறன. எதிர்காலத்தில், SEAGULL ஆனது பாவனையாளர் தேவைகளுக்கேற்ப தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, உலகளாவிய SEAGULL உரிமையாளர்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும்.

2025 Fintech සමුළුවේදී HNB සහ...
ITC Hotels Appoints Keenan McKenzie...
99x Powers SLIIT DevQuest 2025...
நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான சிறப்பு...
Atlas Awarded at SLIM Digis...
Sampath Bank Strengthens Community Engagement...
Fortude builds momentum for women...
New Media Solutions shines bright...
Sampath Bank Strengthens Community Engagement...
Fortude builds momentum for women...
New Media Solutions shines bright...
AI பயன்பட்டால் ஆசிய பசிபிக் மற்றும்...