அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு 20% வரி விகிதத்தை உறுதிசெய்த அரசுக்கு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான பரஸ்பர தீர்வை வரியை 20% ஆக குறைத்ததற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது. தென்னை சார்ந்த பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவில், வெறும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வரி விகிதத்தை அனுபவிக்கும் இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் நியாயமாக போட்டியிட இந்த வரிக்குறைப்பு இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு பெரிதும் உதவும் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது. திறைசேரியின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும […]
அனைத்து இலங்கையருக்கும் Galaxy ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வாங்கும் கனவை நனவாக்கும் Samsung Exclusive Easy Pay திட்டம் அறிமுகம்

Samsung Sri Lanka “சாம்சங் எக்லூசிவ் ஈஸி பே” (Samsung Exclusive Easy Pay) என்ற மாதாந்த தவணை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் இலங்கை மக்கள் புதிய Samsung Galaxy ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் tablets-களை எளிதாக வாங்க உதவுகிறது. John Keells Office Automation (JKOA), ஹெலியோஸ் (Helios), மற்றும் அலயன்ஸ் பைனான்ஸ் ((Alliance Finance-AFC)) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில், எளிதான […]
TikTok இன் 2025 முதல் காலாண்டிற்கான சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கை வெளியீடு

சமூக ஊடக தளமான TikTok நிறுவனம் 2025 முதல் காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், பயனாளர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை வழங்குவதற்காக நிறுவனம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன. சமூக விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தை முன்கூட்டியே அடையாளம் கண்டு அகற்றுவதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள தனது பயனர் சமூகத்திற்கு நேர்மறையான அனுபவத்தை உறுதி செய்வதில் TikTok தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை […]
இயந்திரமயமாக்கல் மூலம் உற்பத்தி செலவுகளைக் குறைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் ஆகாரபத்தன விவசாய நிறுவனம்

நவீனமயமாக்கல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களில் 10 பெயர்களைக் குறிப்பிடும்படி இலங்கை மக்களிடம் கேட்டால், பிராந்திய விவசாய நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று கூட அந்த பட்டியலில் இடம்பெறாது. எனினும், பலருக்கு தெரியாத ஒரு உண்மை – அகரபத்தன விவசாய நிறுவனம் நிச்சயமாக இந்த பட்டியலில் இடம் பெற வேண்டிய ஒன்று. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக, அகரபத்தன நிறுவனம் தனது நிறுவனத்தில் பல மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது. இதில் மிக முக்கியமான மாற்றம் என்பது தேயிலை கொழுந்து பறித்தலின் இயந்திரமயமாக்கல் ஆகும். […]
இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் SLINTEC-இன் அங்கீகரிக்கப்பட்ட உணவு பரிசோதனை சேவைகள்

இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLINTEC) உயர்தர பகுப்பாய்வு சேவைகள் ஆய்வகம் இலங்கை அங்கீகார சபையிடமிருந்து (SLAB) ISO/IEC 17025:2017 அங்கீகாரத்தை அண்மையில் பெற்றுக் கொண்டது. இந்த சர்வதேச அங்கீகாரம், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பு பரிசோதனைகளை செய்வதற்கான ஆய்வகத்தின் தொழில்நுட்பத் திறமையை உறுதிப்படுத்துகிறது. SLINTEC நிறுவனம் தற்போது அஃப்லாடாக்சின் (aflatoxin) பரிசோதனை, தாலேட் (phthalate) கண்டறிதல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு ஆகியவற்றை மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த முக்கிய பரிசோதனைகள் […]
Motorshow ’25 இல் Evolution Autoவின் EV புரட்சி: இலங்கையின் மிக விரிவான மின்சார வாகன வரிசை வெளியீடு!

2025 ஆகஸ்ட் 1: மின்சார வாகனப் போக்குவரத்துத் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமான Evolution Auto, இன்று BMICH இல் நடைபெற்ற Motorshow 2025 இல், இலங்கையின் மிக விரிவான மின்சார வாகன (EV) வரிசையை Evolution Auto அறிமுகப்படுத்தியதன் மூலம், நாட்டின் வாகனத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை நிறுவியுள்ளது. 5 உலக வர்த்தக நாமங்களின் 7 புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்திய இந்த வெளியீடு, இரு சக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள், வணிக வேன்கள், Lifestyle […]
புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் கலாச்சார மரபுகளைக் கொண்ட நியூஷட்டல் எஸ்டேட்

களுத்துறை மாவட்டத்தில் பசுமையால் நிறைந்த பாரம்பரியமிக்க தோட்டங்களில், நியூஷட்டல் தோட்டம் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. 1904 ஆம் ஆண்டில், பிரித்தானியாவைச் சேர்ந்த Colin Cowper Mee என்பவர், தாம் கற்ற சுவிட்சர்லாந்துப் பாடசாலையின் நினைவாக இந்தத் தோட்டத்திற்கு “நியூஷட்டல்” என்ற பெயரைச் சூட்டினார். இந்தத் தோட்டத்தின் நிறுவுனராக, அதன் முன்னேற்றத்திற்காக அவர் பெரும் பணியாற்றினார். திறமையான தோட்டக்காரராக மட்டுமல்லாமல், Cowper Mee ஒரு சிறந்த குதிரை ஓட்டக்காரராகவும் இருந்தார். இலங்கை குதிரைப்பந்தய சங்கத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்த […]
இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக Sirasa TV உடன் கைகோர்க்கும் TikTok

இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசையான சிரச தொலைக்காட்சியுடன் சமூக ஊடக தளமான TikTok அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், பெரும் எதிர்பார்ப்புடன் திரும்பவுள்ள ‘சிரச டான்சிங் ஸ்டார் 2025’ (Sirasa Dancing Stars) நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு பங்காளராக TikTok கைகோர்த்துள்ளது. இலங்கையில் உள்ள உள்ளூர் ஊடக வலையமைப்புடன் TikTok நிறுவனம் இணைந்து செயல்படுவது இதுவே முதல்முறையாகும். இலங்கையின் இரண்டு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் ஒரே மேடையில் இணைவதால், இது இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பொழுதுபோக்கு […]
ஓராண்டு நிறைவில் – MAS மெய்வல்லுனர் பயிற்சிக் கழகத்தின் (Athlete Training Academy) மூலம் சிறந்த அடைவுகளைப் பெற்றிருப்பதுடன், எதிர்கால ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கான ஒத்துழைப்புக்களையும் விரிவுபடுத்துகின்றது

கொழும்பு, ஆகஸ்ட் 17, 2025 – MAS மெய்வல்லுனர் பயிற்சிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்னர், இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது இரத்மலான, CEWAS, பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் MAS ஹோல்டிங்ஸ் இன் இணைத்தாபகர் மற்றும் தலைவர் மகேஷ் அமலீன், தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம், பயிற்சிக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர்கள், முகாமைத்துவக் குழு, மெய்வல்லுனர் விளையாட்டு வீரவீராங்கனைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் […]
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.6% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ், 2026 நிதியாண்டில் வலுவான செயல்திறன் மற்றும் வரிக்குப் பின் இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் பல்துறை நிறுவனங்களைக் கொண்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமம், 2026 நிதியாண்டின் (FY26) முதல் காலாண்டில் 15.9 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.6% வளர்ச்சியை காட்டுகிறது. மேலும், வரிக்குப் பின் இலாபம் (PAT) 20.6% அதிகரித்து 1.7 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. சிறந்த பொருளாதார நிலைமைகள் மற்றும் நுகர்வோர் செயல்பாடுகள் […]