புதிய வாகன மாடல்களுக்கான விரிவான லீசிங் தீர்வுகளை வழங்கும் வகையில், Micro Cars நிறுவனத்துடன் கைகோர்க்கும் HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, சமீபத்தில் Micro Cars (தனியார்) நிறுவனத்துடன் புதிய கூட்டாண்மை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது. இந்தக் கூட்டாண்மை மூலம், Tioggo4 PRO Mid Size SUV, Proton SAGA Sedan REXTON Sports மாதிரிகள் உள்ளிட்ட புதிய MG வாகன வரிசை மற்றும் ஆடம்பர பஸ்களுக்கு வசதியான மற்றும் மலிவு விலை லீசிங் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த HNB நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த HNB இன் […]
பாரம்பரியம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் City of Dreams Sri Lanka

கொழும்பு, 2026 மார்ச் 26: இம்முறை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையின் கலை மெற்றும் கலாசார விழுமியங்களை மையமாகக் கொண்ட ‘சிக்னேச்சர் அவுருது’ (Signature Avurudu) எனும் நான்கு நாள் விசேட கொண்டாட்டத்திற்கு ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த விழா, காலத்தால் அழியாத பாரம்பரியப் பழக்கவழக்கங்களை […]
புத்தாக்கம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் உயர் தர இலங்கை தேயிலையை உருவாக்கும் கெனில்வர்த் தோட்டம்

1942ஆம் ஆண்டு இருந்த பழைய கட்டடத்திற்குப் பதிலாக, 1947இல் தற்போதைய தொழிற்சாலை உருவானது முதல், கெனில்வர்த் பெருந் தோட்டம் உலகப்புகழ் பெற்ற தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது. நீண்ட, மெல்லிய கம்பி போன்ற சுருட்டப்பட்ட இலைகளுக்காகவும்; கறுப்பான, தூய்மையான தோற்றத்திற்காகவும் இவை அறியப்படுகின்றன. 2.5 மணிநேரம் நீடிக்கும் விரிவான ‘பாரம்பரிய’ (Orthodox) முறையில் நேர்த்தியாக உருட்டப்படும் இந்தத் தேயிலை, செப்பு நிறத்திலான பிரகாசமான தேநீரை, நாவிற்கு இதமான அடர்த்தியான சுவையையும், மரங்களின் நறுமணத்தையும், லேசான எலுமிச்சைச் சுவையையும் […]
பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி இலங்கை ஏற்றுமதியாளர்களின் தேசிய சபையின் தங்க விருது வென்று கோழி இறைச்சி ஏற்றுமதித் துறையில் தனது முதன்மை நிலையில் மேலும் முன்னோக்கி செல்கின்றது

தேசிய ஏற்றுமதியாளர்கள் மன்றம் (NCE) 33 ஆவது தடவையாக ஏற்பாடு செய்த வருடாந்த விருது வழங்கும் விழாவில் பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனம் கோழி இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தித்துறையில் (நடுத்தரப் பிரிவில்) தங்க விருதை வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த விருது இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு நிறுவனத்தின் சிறப்பான பங்களிப்பையும் மதிப்பீட்டு ஆண்டின் அதன் வலுவான செயற்திறன்களையும் பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டுகின்றது. NCE விருதுகள் இலங்கை ஏற்றுமதியாளர்களின் ஸ்திரமான சிறப்பு நிலையையும் உயர் பெறுமானத்தையும் பறைசாற்றும் […]
நீர்கொழும்பு நகரில் தனது புதிய கிளையைத் திறந்த HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HNB, தனது வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய கிளை ஒன்றை நீர்கொழும்பில் திறந்துள்ளது. இது நீர்கொழும்பு, புனித ஜோசப் வீதி, இலக்கம் 125 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது. HNB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பள்ளேவத்த, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவஆராச்சி, HNB இன் நிறைவேற்று அதிகாரமுடைய துணைத் தலைவரும் வலையமைப்பு வணிகப் பிரிவுத் தலைவருமான சுபுன் டயஸ் உள்ளிட்ட வங்கியின் சிரேஷ்ட […]
பிரிட்டனின் DCTS திட்டத்தின் கீழ் இலங்கையின் ஆடைத்துறை போட்டித்திறன் மிக்க நன்மையைப் பெற்றுள்ளது

2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) திருத்தப்பட்ட வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (DCTS), இலங்கையின் ஆடைத் துறைக்கு ஒரு தெளிவான வாய்ப்பை வழங்குகிறது. இது குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதோடு, ஒரு முக்கியமான சந்தையில் அவர்கள் வலுவான இடத்தைப் பெறுவதற்கும் வழிவகுக்கிறது. இந்தத் திருத்தப்பட்ட திட்டத்தின் உண்மையான பலம் அதன் நடைமுறைத்தன்மையில் உள்ளது. உற்பத்தி மூல விதிகளை எளிமையாக்குவதன் மூலமும், மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் அதிக […]
2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய HNB FINANCE

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதிச் சேவை வழங்கநரான HNB FINANCE, தனது பணியாளர் படையில் பெண்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அவர்களை மேம்படுத்தும் விதமாகவும் 2026 சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெண் ஊழியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலந்துரையாடல் அமர்வுகள் மூலம் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு நாவலையிலுள்ள HNB Finance PLC தலைமை அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இதில் நாடு முழுவதிலுமுள்ள கிளை வலையமைப்பைச் […]
தனது 32 ஆண்டுகால வரலாற்றில், 2025 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த வருவாயைப் பதிவு செய்த Chevron Lanka நிறுவனம்

கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட நிறுவனமான Chevron Lubricants Lanka PLC (“Chevron Lanka”) (LLUB), இலங்கையில் தனது 32 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக உயர்ந்த வருவாயை 2025 ஆம் ஆண்டில் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தைக்கு வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு இடைக்கால நிதி அறிக்கைகளின்படி, அதன் மொத்த வருமானம் 24.39 பில்லியன் ரூபாவாக அமைந்ததுடன், அதன் நிகர இலாபம் முதல் முறையாக 4 பில்லியன் ரூபா என்ற […]
இலங்கையின் காப்புறுதித் துறைக்கு மிகச் சிறப்பாகச் சேவை செய்வதற்காக, தனது வலைத்தளத்தைப் புதிய முகப்புடன் வெளியிடும் IASL

இலங்கை காப்புறுதிச் சங்கம் (IASL) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான www.iasl.lk ஐப் புதிய முகப்புடன் வெளியிடுவதாக அண்மையில் அறிவித்தது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் இடத்தில் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதற்கும், தகவல்களைப் பெறுவதை எளிதாக்குவதற்கும், துறையில் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான அச்சங்கத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் தரங்களை உயர்த்துவதைத் தனது முக்கிய பொறுப்பாக IASL இந்தப் புதிய வலைத்தளத்தின் மூலம் சிறப்பாக நிரூபிக்கிறது. இலங்கையின் காப்புறுதித் துறை வேகமாக டிஜிட்டல் மயமாக்கலுக்கு […]
ஜனசக்தி பைனான்ஸ் ‘இலங்கையின் முச்சக்கர வண்டி சமூகத்தை மேம்படுத்தல்’ பிரச்சார நடவடிக்கைக்காக வெண்கல Effie விருதை வென்றது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தனது “Uplifting the Sri Lankan Three-Wheel Community” எனும் தாக்கம் மிக்க பிரச்சார நடவடிக்கைக்காக Effie Awards Sri Lanka 2025 விருதுகளில் நிதிப் பிரிவில் வெண்கல Effie விருதை வென்றுள்ளது. இந்த அங்கீகாரம், படைப்பாற்றலைக் கொண்டு அளவிடக்கூடிய வணிக விளைவுகளை பெற்றுக் கொள்வதற்கான நிறுவனத்தின் திறனை வெளிப்படுத்தும் அதேவேளை பின்தங்கிய சமூகங்களின் நிதிசார் உள்ளீர்ப்பு மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது. […]