Texo மற்றும் Noyon வசதிகளை இணைத்துக்கொண்டு Plan for Change திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த MAS

இலங்கையின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளரான MAS Holdings, தனது ‘Plan for Change’ திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக, அண்மையில் இரண்டு அதிகாரப்பூர்வ bluesign® கூட்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டது. அதன்படி, MAS Holdingsஇன் கீழ் இயங்கும் Texo (Pvt) Ltd (பருத்தி துணி பதப்படுத்தும் தொழிற்சாலை) மற்றும் Noyon Lanka (லேஸ் உற்பத்தி நிறுவனம்) ஆகியவை இத்திட்டத்தில் கூட்டாளிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பொறுப்பான உற்பத்தி செயல்முறைக்காக நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை தெளிவாக […]

TAGS Awards 2025 நிகழ்வில் HNB FINANCE வெள்ளி விருது வென்று சாதனை

இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS Awards 2025இன் வைர விழா நிகழ்வில், நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் பிரிவில் (மொத்த குழும சொத்துக்கள் 25–75 பில்லியன் ரூபா) HNB Finance PLC வெள்ளி விருது வென்றதாக அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 12ஆம் திகதி கொழும்பு Shangri-La ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வானது, இவ்விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாகப் பெற்ற வெற்றியாக அமைந்தது. கடந்த ஆண்டு […]

தித்வா புயலுக்குப் பின்னர் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவ ஜனசக்தி லைஃப் முன்வந்துள்ளது

காப்புறுதித் துறையில் முன்னணி நாமமும், JXG (ஜனசக்தி குழுமம்)இன் துணை நிறுவனமுமான ஜனசக்தி லைஃப் அண்மையில் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியொன்றை நிறைவேற்றியிருந்தது. நிறுவனத்தின் Life Operations குழு தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தின் ஊடாக தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பாடசாலையான மஹோ/ பக்மீவேவ ஆரம்பப் பாடசாலையின் மாணவர்களுக்கு உதவி வழங்கப்பட்டது. இந் நடவடிக்கை, குறிப்பாக வசதி குறைந்த சமூகங்களில், உள்வாங்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கான சம அணுகலுக்கான ஜனசக்தி லைஃப்பின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். […]

ஜனசக்தி லைஃப், “இந்துக்களின் பெருஞ்சமர்” உடன் இணைந்ததன் மூலம் பாடசாலைக் கிரிக்கெட் பாரம்பரியத்தை வலுப்படுத்தியது

காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை வர்த்தக நாமமாகவும் விளங்கும் ஜனசக்தி லைஃப், “இந்துக்களின் பெருஞ்சமர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 15ஆவது வருட கிரிக்கெட் போட்டியின் Title Partner ஆக இணைந்தது. இப் போட்டி ஊடாக இரு கல்லூரி அணிகளும் தங்களின் நீண்டகால, பெருமைமிக்க பாடசாலைக் கிரிக்கெட் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பித்ததுடன் இந் நிகழ்வு, மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஒன்றிணைத்தது. கொழும்பு […]

நாட்டின் பெருந்தோட்டத் துறையின் நிலையான இருப்புக்காக நியாயமான மின்சாரக் கட்டணத்தை வழங்குமாறு வலியுறுத்துகிறது இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

நாட்டின் தோட்டத் துறையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்காக, நிலையான மின்சாரக் கட்டண ஒழுங்குமுறைக் கட்டமைப்பு மற்றும் மின் உற்பத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் காரணமாக, பெருந்தோட்டத் துறை உள்ளிட்ட ஏற்றுமதித் துறைகள் மீது ஏற்படும் கடுமையான பொருளாதார அழுத்தம், இந்தத் தொழில்களின் நீண்டகால நிலையான இருப்புக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சம்மேளனம் சுட்டிக்காட்டுகின்றது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் […]

கண்கவர் இரவுடன் உண்மையான சுவையை சேர்த்த ‘Signature Latin Affair’

உண்மையான லத்தீன் பாரம்பரியத்தைப் பின்பற்றிய தனித்துவமான ‘Signature Latin Affair’ நிகழ்வு அண்மையில் City of Dreams Sri Lanka வில் விருந்தினர்களுக்கு ஈடு இணையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபெற்றது. அதன் நேர்த்தி மற்றும் பல்வேறு விழா அம்சங்கள் ஊடாக விருந்தினர்களுக்கு ஒரு புதிய ரசனையை வழங்கிய இந்த ‘Signature Latin Affair’ அனுபவத்தை முழுமையாக ரசிப்பதற்காக, அந்த பாரம்பரியத்தை மதிக்கும் ஏராளமான விருந்தினர்கள் ஒன்றுகூடியிருந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் இனிமையான மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளைப் பரிசளித்த […]

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி உலகில் புதிய புரட்சி: Agentic AI வசதியுடன் Galaxy S26 தொடரை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

மேம்பட்ட Galaxy AI மூலம் இயங்கும் புத்திசாலித்தனமான மொபைல் அனுபவங்களின் புதிய யுகத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், Samsung Sri Lanka நிறுவனம் தனது Samsung Galaxy S26 உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ‘Samsung Galaxy Unpacked 2026’ நிகழ்வில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Galaxy S26 வரிசையானது, ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) எனும் கருப்பொருளை அறிமுகப்படுத்துகிறது. இது பயனர்களின் அன்றாட வாழ்வில் தடையின்றி உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் புத்திசாலித்தனமான […]

TikTok-ஐ ரமழான் உணவு மேசையாக மாற்றிய ஜஸ்லா இஸ்மத்: பாரம்பரியமும், சுவையும் இணைந்த ஒரு பயணம்

உணவு என்பது வெறும் பசியைத் தீர்க்கும் ஒரு பொருள் மட்டுமல்ல, அது மனித உடலை குணப்படுத்தி, ஆன்மாவிற்கு ஆறுதலளித்து, சமூகங்களை அமைதி வழியில் ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக இருக்குமானால், ஜஸ்லா இஸ்மத் நிச்சயம் அந்த “உணவுக்கான ஐக்கிய நாடுகளின்” தலைவராக இருப்பார். இந்த அழகிய ஆனால் முழுமையற்ற உலகில், ஜஸ்லா மிகுந்த அன்புடனும் ஆர்வத்துடனும் பகிர்ந்து கொள்ளும் சமையல் குறிப்புகள், நமது அன்றாட வாழ்வில் ஒரு சிறிய மகிழ்ச்சியைத் தருகின்றன. TikTok தளத்தில் அவரது ‘ஜஸீ’ஸ் ரெசிபிஸ்’ […]

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

பலவீனமடைந்து வரும் உலகளாவிய தேவை, கொள்கை ரீதியிலான நிச்சயமற்ற தன்மை, தொடர்ச்சியான நோய் பரவல், தொழிலாளர் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவு போன்ற கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இலங்கையின் இறப்பர் கைத்தொழில் 2025 ஆம் ஆண்டிற்குள் கால்பதித்தது. 2026 ஆம் ஆண்டளவில், மேலதிகமாக ஏற்படுத்தப்பட்ட 15% சம்பள உயர்வு, ஏற்கனவே காணப்பட்ட செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தியதுடன், இறப்பர் பெருந்தோட்டங்களின் நீண்டகால இருப்பு மற்றும் அதன் நிலைத்தன்மை குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி வருவாய் […]

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் அதற்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த ஒருமித்த கருத்து வலுவடைந்து வரும் நிலையில், இலங்கையின் பெருந்தோட்டத் துறை தனது 172 கால வரலாற்றில் மிக முக்கியமானதொரு மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. இத்துறையின் வளர்ந்து வரும் ஒரு பகுதியினர், நிகர பூச்சிய (Net Zero) கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல் நோக்கிய ஒரு பயணப் பாதையை தற்போது திட்டமிட்டு வருகின்றனர். உலகளாவிய கொள்வனவாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஒழுங்குபடுத்துநர்கள் குறைந்த கார்பன் விநியோகச் சங்கிலிகளை (low-carbon supply […]