பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சிறந்த நிதி வருவாயை கொண்டுள்ள Softlogic Capita

SoftLogic Life, SoftLogic Finance, SoftLogic Stockbrokers மற்றும் SoftLogic Asset Management (SoftLogic Invest) ஆகிய நிறுவனங்களின் நிதிச் சேவைப் பிரிவான Softlogic Capital, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்தது. மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில், Softlogic Capital ஆனது முந்தைய நிதியாண்டை விட 13% வளர்ச்சியைப் அடைந்து, 36.7 பில்லியன் ரூபாய்களின் ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்ய முடிந்தது. பரிசீலனைக்கு உட்பட்ட […]

புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக சஞ்சய் விஜேமான்னவை நியமித்தது HNB

இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, சஞ்சய் விஜேமான்னவை வங்கியின் புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக (COO) 26 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும் வகையில், உரிய ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டு நியமித்தது. 14 வருடங்களுக்கும் மேலான பெருநிறுவன முகாமைத்துவ வெளிப்பாடு உட்பட 29 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள வங்கித் துறையில் அனுபவம் வாய்ந்த விஜேமன்ன இதற்கு முன்னர் HNB இன் பிரதிப் பொது முகாமையாளர் – வாடிக்கையாளர் வங்கிக் குழுமமாக […]

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வணிக மீட்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் HNB

HNB PLC 2024 முதல் காலாண்டில் வரிக்கு முந்தைய இலாபமாக (PBT) 9.8 பில்லியன் ரூபாவைப் பதிவு செய்தது, அதே சமயம் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) 6.2 பில்லியன் ரூபாவாகும். குழு மட்டத்தில், வரிக்கு முந்தைய இலாபம் (PBT) மற்றும் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) முறையே 11.2 பில்லியன் ரூபா மற்றும் 7.4 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் கணிசமான பணவியல் கொள்கை தளர்த்தலின் விளைவாக, மார்ச் […]

10,000 க்கும் மேற்பட்ட மீள்பயன்பாட்டு சுகாதார துவாய்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் மாதவிடாய் துவாய் வறுமையை எதிர்த்துப் போராடும் MAS இன் Femography

10,000 க்கும் மேற்பட்ட மீள்பயன்பாட்டு சுகாதாரத் துவாய்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கான அதன் அர்ப்பணிப்பை MAS இன் Femography மேலும் அதிகரித்துள்ளது. இந்த நன்கொடைகள் மாதவிடாய் சுகாதாரத் துவாய் வறுமையை ஒழிப்பதற்காகப் போராடி இந்நாட்டுப் பெண்களின் வாழ்வை வலுவடையச் செய்யும் நோக்கில் செய்யப்பட்டன. பெண்களின் விசேட தேவைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமானது, பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் 2000க்கும் மேற்பட்ட […]

ஊடகவியலாளர் சந்திப்பு 2024 மே 29 கொழும்பு Institute of Chartered Financial Analyst ஏற்பாடு செய்த Capital Excellence Awards நிகழ்வு 18 ஜூன் 2024 அன்று நடைபெறும்

இலங்கை மூலதனச் சந்தையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள Institute of Chartered Financial Analyst நிறுவனம் (CFA) ஏற்பாடு செய்துள்ள Capital Excellence Awards நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உள்ளூர் மூலதனச் சந்தையின் சிறப்பை மதிப்பிடுவதற்காக 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தனித்துவமான விருது வழங்கும் நிகழ்வின் 11ஆம் கட்டம் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. ‘அரச-தனியார் உறவின் பலம்’ என்ற தொனிப்பொருளில், […]

எதிர்கால பசுமைத் தலைவர்களை உருவாக்க கூட்டிணையும் CIC மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி

இலங்கையின் எதிர்கால பசுமைத் தலைவர்களை உருவாக்குவதற்கு, விவசாயம் சார்ந்த பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான CIC Holdings PLC (CSE: CIC) அண்மையில் கொழும்பு ஆனந்தா கல்லூரியுடன் கூட்டிணைந்துள்ளது. இதற்காக ‘Swastha by Link Natural’ அனுபவ மத்திய நிலையத்தில் CIC நடத்திய நிகழ்வில், கொழும்பு ஆனந்த கல்லூரி அதிபர் டி.எம்.எல்.பி. திஸாநாயக்க, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் வீட்டு அறுவடைகளை CIC குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரோஷன் சேரசிங்க மற்றும் CIC Agri Clusterஇன் முகாமைத்துவப் […]

உலக புவி தினம் 2024இல் நிலைத்தன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு கௌரவம்

மகத்தான சவால்களுக்கு மத்தியில் கழிவு நிர்வகிப்பு வெற்றிகரமாக முன்னேறி வரும் நேரத்தில் ஏப்ரல் 22ஆம் திகதி உலக புவி தினம் கொண்டாடப்பட்டது. Coca-Cola அறக்கட்டளையின் நிதி பலத்துடன் World Vision Lanka தலைமையிலான ASPIRE திட்டம் அந்த வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது என்பது இரகசியமல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதைத் தாண்டி, முறையான கழிவு நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான நடவடிக்கை என்றும் இந்தத் திட்டத்தை குறிப்பிடலாம். ASPIRE திட்டம் பிளாஸ்டிக் சேகரிப்பை அதிகரிப்பது, மீள்சுழற்சி செய்யும் […]

தோட்டத் தொழிலாளர்களின் தன்னிச்சையான சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளனம் கடும் எதிர்ப்பு

தேயிலை மற்றும் ரப்பர் துறையில் உள்ளயில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70% உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில் ஏற்பட்டுள்ள பாதகமான பாதிப்புகளுக்கு எதிராக அனைத்து பங்குதாரர்களாலும் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்தத் தீர்மானமானது பெருந்தோட்டத் துறையை நலிவடையச் செய்து இறுதியில் நாட்டில் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் என முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. “தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் […]

இலங்கை வர்த்தகங்களில் இணையத்தள பாதுகாப்பிற்கு ‘Kaspersky Next’ ஐ அறிமுகப்படுத்தும் Kaspersky

2024, மே 09 Kaspersky இலங்கையில் வணிகங்களின் பாதுகாப்பிற்காக ‘Kaspersky Next’ என்ற தனது புதிய தயாரிப்பு வரிசையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. XDR (Extended Detection and Response) இன் தெளிவு மற்றும் சக்திவாய்ந்த கருவிகள் மற்றும் EDR இன் வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மை (Endpoint Detection and Response) மூலம், வணிகத் தரவுகளுக்கு வலுவான பாதுகாப்பை வழங்க முடியும். அதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் திறனைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம். […]

நவலோக்க மருத்துவ நிலையத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவு நீடிப்பு

நவலோக்க மருத்துவ நிலையத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக HNB முன்வைத்த ஆட்சேபனைகளை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, நவலோக்க மருத்துவ நிலையத்தின் சொத்தை பராட்டே சட்டத்தின் கீழ் சுவீகரிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு முன்னர் வழங்கிய தடையுத்தரவை நீடிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் துணை நிறுவனமான நவலோக்க மருத்துவ நிலையத்தினால் கடனாகவும் வட்டியாகவும் HNB இற்கு செலுத்த வேண்டிய […]