‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN Awards 2025 நிகழ்வில், ‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளின் கீழ், அதன் ஊழியர்களின் சிறப்பான சாதனைகளை கௌரவித்தது. Healthcare, Consumer Goods மற்றும் விவசாய வணிகம் ஆகிய அதன் முக்கிய வணிகத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு வணிகத் துறையும் தனித்தனியாக விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது. 2024/25 நிதியாண்டில் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தலைமைத்துவமும் […]

அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின் தென்னை தொழில்துறைக்கு பாரிய பின்னடைவு – இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம்

இலங்கையின் தென்னை சார்ந்த பொருட்கள் மீது அமெரிக்கா 30% இறக்குமதி வரி விதிக்கவுள்ளமை அந்தத் துறையில் பாரிய பின்னடைவைக் கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இப்புதிய தீர்வை வரி, ஆண்டுதோறும் 857 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் துறையை […]

“City of Dreams Sri Lanka”வை வண்ணமயமாக்க ஆகஸ்ட் 2இல் இலங்கை வருகிறார் ஹிருத்திக் ரோஷன்

கொழும்பு, வியாழக்கிழமை 24 ஜூலை 2025: இலங்கையின் முதன்மையான பொழுதுபோக்கு மையமாகத் திகழவிருக்கும் ‘City of Dreams Sri Lanka’இன் அங்குரார்ப்பண நிகழ்வு பிரபல நட்சத்திர நடிகரான ஹிருத்திக் ரோஷனின் சமூகமளிப்போடு பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் நடைபெறவுள்ளது. ‘Krrish’, ‘War’, மற்றும் ‘Super 30’ போன்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக அறியப்பட்ட பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷனின் வருகை, தெற்காசியாவின் படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத் திறமைகளை பிராந்திய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் இத்திட்டத்தின் லட்சியத்தை சுட்டிக்காட்டுகிறது. […]

இலகு நிதி முகாமைத்துவத்துக்காக ஒரு புதிய டிஜிட்டல் வங்கித் தளத்தை ஆரம்பித்துள்ள HNB FINANCE

HNB Finance PLC தனது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளரின் நிதி பரிமாற்றங்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், உலகில் எங்கிருந்தும் எளிதாக நிர்வகிக்கக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்ட HNBF Online Banking வசதியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவாக மாறிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர் தேவைகளை நன்கு அறிந்து, ஜூன் மாதம் முதல் இந்த சேவையைத் தொடங்க HNB Finance தயாராகி வருகிறது. HNBF Online Banking வசதியைப் பெற, Google Play Store மற்றும் Apple App Store ஆகியவற்றிலிருந்து இந்த […]

குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக புலமைப் பரிசில்களை வழங்கும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள்

பல தசாப்தங்களாக, இலங்கையில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இப்போது முன்னேற்றமடைந்து வரும் புலமைப்பரிசில்கள் மற்றும் கல்வி மானியங்களின் வலைப்பின்னல் இந்த சமூகங்களை சீராக மாற்றியமைத்து வருகிறது. பல்வேறு தோட்டங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்கள், புதிய தலைமுறைப் பல்கலைக்கழக பட்டதாரிகளை உருவாக்கி உள்ளன. இவர்களில் பலர் தங்கள் குடும்பத்தில் முதன்முதலில் உயர்கல்வி பெற்றவர்கள் என்பது […]

இலங்கை முழுவதும் 25 மெகாவாட் பயன்பாட்டிற்கு உதவும் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்காக Solaris Energy உடன் கைகோர்க்கும் Trinasolar

உயர்தர PV மற்றும் ஆற்றல் சேமிப்பு தீர்வுகளை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமான Trinasolar, இலங்கையின் முன்னணி சோலார் விநியோகஸ்தரான Solaris Energy (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டது. நாடு முழுவதும் அதிகபட்சமாக 25 மெகாவாட் சூரிய தொகுதிகளை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் ஒத்துழைப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். உலகின் மிகப்பெரிய சோலார் தொழில்துறை கண்காட்சியான SNEC 2025 ஷாங்காயில் நடைபெற்றபோது இந்த ஒப்பந்தத்திற்கு உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Trinasolar Asia Pacific […]

நிம்னா & இசுரு: TikTok மூலம் இலங்கையர்களை மகிழ்விக்கும் தம்பதியர்

‘வாழ், காதலி, சிரி’ என்ற கோட்பாட்டை உண்மையாக கடைபிடிப்பவர்கள் மிகக் குறைவு. அப்படி இருப்பவர்களும் அதை தனிப்பட்ட வாழ்வில் மட்டுமே வைத்திருப்பர். ஆனால் நிம்னா மற்றும் இசுரு (@nimnastiktok)) என்ற TikTok ஜோடி, தங்களது அன்றாட வாழ்வின் தனித்துவங்களையும், அவர்களிடையே உள்ள இயல்பான புரிதலையும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர். சிலர் அவர்களை வேடிக்கையான, வேகமான காணொளிகளுக்காக அறிவர். மற்றவர்கள் தம்பதி உள்ளடக்கத்தில் விளம்பரங்களை எளிதாக இணைக்கும் திறனுக்காக அறிவர். ஆனால் அவர்களை அறிந்த எவரும் […]

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம் – கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி பிரமாண்டமாக நடைபெறும்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, பொலிவுட் கிங் கான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொள்வது கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக, அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், திரு. ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் City of Dreams Sri Lanka-வின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “திரு. […]

இலங்கையில் ஸ்மார்ட் வாழ்க்கையை வலுப்படுத்தும் Samsung

இலங்கையில் டிஜிட்டல் யுகம் வளர்ந்து வரும் நிலையில், ஸ்மார்ட் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், தொலைதூர வேலை முறைகள் மற்றும் வீட்டு தானியங்கி மயமாக்கல் (home automation) போன்றவற்றின் வளர்ச்சியால், இலங்கை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் தொழில்நுட்பங்களை நாடுகின்றனர். இந்நிலையில், நவீன இலங்கை குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப Samsung தனது அதிநவீன ஸ்மார்ட் வாழ்க்கை தீர்வுகளை வழங்கி முன்னணியில் திகழ்கிறது. ஸ்மார்ட் வீட்டு தொழில்நுட்பத்தில் நம்பகமான புத்தாக்க நிறுவனமாக Samsung திகழ்கிறது. […]

BYD இன் புகழ்பெற்ற SEAGULL மின்சார வாகனம் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி சாதனை

BYD நிறுவனத்தின் ஷியான் தொழிற்சாலையில் 2025 ஜூன் 30ஆம் திகதி தயாரிக்கப்பட்ட SEAGULL மின்சார வாகனம் ஒன்றுடன், இந்நிறுவனம் இவ்வாகன மாதிரியின் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி புதிய வரலாறு படைத்துள்ளது. சந்தையில் அறிமுகமானதிலிருந்து இந்த சாதனையை எட்ட இவ்வாகனத்திற்கு வெறும் 27 மாதங்களே தேவைப்பட்டது. இது உலகிலேயே வேகமாக ஒரு மில்லியன் விற்பனையை எட்டிய முழு மின்சார வாகனம் மற்றும் A00-வகுப்பு மாதிரியாக திகழ்கிறது. அதிநவீன தொழில்நுட்பம், சிறந்த வடிவமைப்பு மற்றும் உயர்தர பாதுகாப்பு […]