Ceylon International Film Festiva (CEYIFF), Cine Star அறக்கட்டளையுடன் இணைந்து, 2022-சினிமா விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது

Share

Share

Share

Share

CEYIFF இன் அழைப்பை ஏற்று, CINE STAR அறக்கட்டளை அதன் பணிப்பாளர் குழு மற்றும் சிரேஷ்ட கலைஞர்களின் ஆதரவுடன் இந்த மதிப்புமிக்க நிகழ்வை கொழும்பில் நடத்த ஏகமனதாக முடிவு செய்தது. அதன்படி, இந்த திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி கொழும்பில் உள்ள நவலோக மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆரம்ப CEYIFF திரைப்பட விருது வழங்கும் நிகழ்வில் The Newspaper சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றது மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதை கரசர்பவுக்காக ஜெயந்த சந்திரசிறி பெற்றார்.


சிறந்த நடிகருக்கான விருதை The Newspaper காக சரத் கொத்தலாவல பெற்றதுடன் சுனாமி படத்திற்காக நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த துணை நடிகர் மற்றும் துணை நடிகைக்கான விருதுகளை குமார திரிமதுர மற்றும் ஹிமாலி சயுரங்கியும் முறையே The Newspaper மற்றும் சுனாமி ஆகிய படங்களுக்கான வென்றனர். இதற்கிடையில், நடுவர்களின் சிறப்பு மதிப்பீட்டு விருதை சுனாமி திரைப்படம் வென்றது, மேலும் சிரேஷ்ட கலைஞர்களான ஐராங்கனி சேரசிங்க மற்றும் லதா வல்பொல ஆகியோர் CEYIFF இனால் சிறந்த மதிப்பீட்டு விருதுகளை வென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டு சினிமாவில் பெண் விருதை திருமதி ரேணுகா பாலசூரிய வென்றார். இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு இலங்கை சினிமாவுக்கு அதிக வர்த்தக மதிப்பை பெற்று சர்வதேச சந்தையை வெல்வதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை. உலகளாவிய நோக்குநிலை மற்றும் உயர் மட்ட பொழுதுபோக்குடன் இலங்கையில் நடைபெறும் மிகப்பெரிய திரைப்பட விழா இதுவாகும்.
“விருது வென்றவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள வெளிநாட்டு நிபுணர்களால் மதிப்பிடப்பட்டதுடன் அந்தந்த துறைகளில் சர்வதேச மட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும், இந்த நடுவர்களுக்கு இலங்கை சினிமாவின் பங்குதாரர்களுடன் நேரடி தொடர்பு இல்லை, எனவே தேர்வுகள் முற்றிலும் பாரபட்சமற்றவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விருது பெற்றவர்கள் அதற்காக உண்மையிலேயே பெருமைப்பட வேண்டும், மேலும் இந்த விருது விதிவிலக்கான மற்றும் சிறந்த தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது” என்று CEYIFF இன் தலைவர் திருமதி அருணி போதேஜு கூறினார்.

“இலங்கை சினிமாவை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லும் கனவை நனவாக்க இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். CEYIFF உடன் இணைந்து இந்த நிகழ்வை கொழும்பில் நடத்த வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உலகளாவிய அங்கீகாரம் மூலம் இலங்கையைப் பெருமைப்படுத்தும் அந்த சவாலான பயணத்தின் முதல் படி இதுவாகும். என பல துறைகளினூடாக இலங்கைக்கு பெருமை சேர்த்த CINE STAR அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச தெரிவித்தார்.

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...