கொழும்பு, புதன்கிழமை 19 மார்ச் 2025: கொழும்பின் அழகிய நகரப் பின்னணியில், ஆடம்பர திருமணங்களை புதிய பரிணாமத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தெற்காசியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமான Cinnamon Life, தனது முதலாவது ‘Weddings in the Sky’ திருமண கண்காட்சியை 2025 மார்ச் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடத்தவுள்ளது.
இந்த பிரத்யேக திறந்த நாள் நிகழ்வானது ஜோடிகளுக்கும், திருமண ஏற்பாட்டாளர்களுக்கும் Cinnamon Life இன் உலகத்தரம் வாய்ந்த இடங்கள் மற்றும் தனிப்பட்ட தேவைக்கேற்ற திருமண சேவைகள் பற்றிய ஒரு ஆழ்ந்த பார்வையை வழங்குகிறது. இரண்டு நாட்கள் நீடிக்கும் இந்தக் கண்காட்சி முழுவதும், பங்கேற்பாளர்களுக்கு அழகிய திருமண அலங்காரங்களுடன் மறுவடிவமைக்கப்பட்ட தளங்களை பார்வையிட ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும். The Forum Exhibition Centre இல் நேர்த்தியான திருமண உறுதிமொழி நிகழ்வும், Podium இல் பாரம்பரிய ‘போருவ’ முறைதிருமண நிகழ்வும் சிறப்பாக காட்சிப்படுத்தப்படும்.
அத்துடன், Cinnamon Life இன் Lumina Ballroom, Forum, Studio, The Cantilevers போன்ற முன்னணி திருமண தளங்களை நேரில் ஆராய்கின்ற வாய்ப்பு கிடைப்பதுடன், திருமண நிபுணர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். அவர்கள், ஒவ்வொரு ஜோடிக்கும் தனிப்பட்ட கவனத்துடன், அவர்களின் கனவு திருமணத்தை திட்டமிட உதவுவார்கள்.
இலங்கையின் மிக பிரமாண்டமான நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்திய Cinnamon Life, தனது ஆடம்பர சேவைகளுக்காக புகழ்பெற்றுள்ளது. உலகத்தரம் வாய்ந்த திருமண ஏற்பாட்டாளர்கள், பூ அலங்காரங்கள் முதல் உணவுக்கண்காட்சிகள் வரை, ஒவ்வொரு சிறிய விபரத்தையும் கவனத்துடன் அமைத்து, நினைவுபடுத்தும் திருமண அனுபவத்தை வழங்குகிறார்கள்.
திருமண ஜோடிகளுக்கான பிரத்யேக திறந்த நாள் சலுகைகள்
மார்ச் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தங்கள் திருமணத்தை உறுதி செய்யும் ஜோடிகளுக்கு, Cinnamon Life வழங்கும் பிரத்யேக சலுகைகள்; காத்திருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, சிறப்பு திருமண தொகுப்பு விலைகள், திருமண நாளில் இலவச அறை வசதி, மற்றும் Cinnamon Life வளாகத்திற்குள் இலவச திருமண புகைப்படக் காட்சிகள் போன்ற பல்வேறு அனுகூலங்களைப் பெறலாம்.
மேலும், Cinnamon Life இன் உலகத் தரம் வாய்ந்த சமையல் நிபுணர்களுடன் தனிப்பட்ட உணவு ருசிபார்த்தல் அமர்வில் பங்கேற்கவும், மிகவும் அழகிய புகைப்பட இடங்களை பிரத்யேகமாக அணுகும் வாய்ப்பையும் பெறலாம். இவை, ஒவ்வொரு ஜோடியும் அவர்களின் திருமண நாள் அனுபவத்தை ஒரு சிறப்பு நினைவாக மாற்ற, மிகச் சிறந்த முறையில் வழங்கப்படும்.
இந்தக் கண்காட்சி தொடர்பில் Cinnamon Life இன் வணிகப் பிரிவு பணிப்பாளர் Declan Hurley கருத்து தெரிவிக்கையில், ‘கொழும்பு ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆடம்பர திருமண தளமாக உருவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த நகரத்தின் அழகிய பின்னணியுடன், Cinnamon Life மிகப்பெரிய அழகான திருமண அனுபவங்களை வழங்குகிறது. எங்கள் அரங்குகள், ஒவ்வொரு ஜோடியும் மறக்க முடியாத நிகழ்வை அனுபவிக்க உதவும்.’ என்று கூறினார்.
இதனிடையே, இந்த திறந்த நாள் நிகழ்வு எந்த முன்பதிவும் இல்லாமல் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும். ஜோடிகள் எப்போது வேண்டுமானாலும் வருகை தந்து, தங்கள் கனவு திருமணத்திற்கான அனைத்து தகவல்களையும் பெறலாம். மேலதிக விபரங்களுக்கு Cinnamon Life இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது [email protected] இல் நிகழ்வுகள் குழுவை தொடர்பு கொள்ளவும்.
Cinnamon Life பற்றி
Cinnamon Life தெற்காசியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமாகும். இது ஆடம்பர தங்குமிடம், உயர்தர அலுவலகங்கள், அதிநவீன சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நவீன நிகழ்வு இடங்களை கொண்டுள்ளது John Keells Holdings PLC நிறுவனத்தின் மிகப்பெரிய தனியார் முதலீடான இது, இலங்கையின் விருந்தோம்பலை மறுவரையறை செய்து உலகெங்கிலும் இருந்து வரும் விருந்தினர்களுக்கு விதிவிலக்கான அனுபவங்களை வழங்குகிறது.