City of Dreams பெருமையுடன் வழங்கும் செஃப் சுரேஷ் பிள்ளையின் விசேட சமையல் கலை நிகழ்ச்சி

Share

Share

Share

Share

இலங்கையின் City of Dreams இல் உள்ள Cinnamon Life, இந்த மே மாதத்தில் பிராந்தியத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு சமையல் கலை நிகழ்வை நடத்தவுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய சமையல் கலை நிபுணர் சுரேஷ் பிள்ளை, 2026 மே 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் ‘Indiya’ உணவகத்தின் சமையலறையை பொறுப்பேற்று, இரண்டு நாட்கள் நடைபெறும் பிரத்தியேக சமையல் கலை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்.

மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு கிடைக்கும் இந்த உயர்தர அனுபவம், உலகத்தரம் வாய்ந்த சமையல் சந்திப்புகளுக்கான முதன்மை இடமாக City of Dreams இல் உள்ள Cinnamon Life ஐ நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செஃப் பிள்ளையின் கொண்டாடப்படும் சமையல் தத்துவத்தையும், இலங்கையின் செழுமையான கடலோர சுவைகளையும் ஒன்றிணைக்கும் இந்த கூட்டு முயற்சி, கேரளாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நறுமணப் பொருட்கள் வர்த்தகப் பாதையினால் ஈர்க்கப்பட்ட ஒரு நேர்த்தியான சுவைப் பயணத்தை விருந்தினர்களுக்கு வழங்குகிறது.

பிராந்தியத்தின் தனித்துவமான சுவைகளை ஆழமாக வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவு அனுபவம், கேரள உணவுகளை வரையறுக்கும் தைரியமான சுவைகள், தேங்காய் நிறைந்த பாரம்பரியங்கள் மற்றும் அடுக்கு நறுமணப் பொருட்களின் தன்மைகளைக் கொண்டாடுவதுடன், இலங்கையின் மூலப்பொருட்களையும் சமையல் நேர்த்தியையும் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.

இந்த ஏழு வகை உணவுப் பட்டியல் (seven-course menu), காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தேன் மற்றும் புதிய புதினா கலந்த குளிர்ந்த இளநீர் பானமான ‘தேனே இளநீர்’ (Thene Elaneer) எனும் புத்துணர்ச்சியூட்டும் வரவேற்பு பானத்துடன் தொடங்குகிறது, அதனைத் தொடர்ந்து கேரளாவின் ‘டொடி ஷாப்’ ((toddy shop) சுவைகளின் சுத்திகரிக்கப்பட்ட விளக்கத்தை வழங்கும் மரவள்ளிக்கிழங்கு மற்றும் காந்தாரி மிளகாய் ஸ்கீவர் (Cassava and Kanthari Skewer) வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விருந்தினர்கள் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பலதரப்பட்ட உணவு வகைகளைச் சுவைக்கும் வாய்ப்பினைப் பெறுவர். இதில் குளிர்ந்த தேங்காய்ப்பால் மொய்லி (Moilee), சிறிய நெய் கல் தோசை மற்றும் தக்காளி சட்னியுடன் கூடிய கொங்குநாடு தாமரைத் தண்டு மசாலா ((Kongunadu lotus stem masala), தேங்காய் பிரதானமாக சேர்க்கப்பட்ட கடல் உணவு மற்றும் சைவ உணவு வகைகள் மற்றும் பிராந்திய மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் செறிந்த சுவையான கட்லெட்டுகள் (Cutlets) ஆகியவை அடங்கும்.

இந்த உணவு அனுபவத்தின் மிக முக்கியமான அங்கமாக, செஃப் பிள்ளையின் அடையாளமான ‘பிஷ் நிர்வாணா’ (Fish Nirvana) எனும் அவரது புகழ்பெற்ற சிக்னேச்சர் டிஷ் அமைகிறது. கேரளாவின் கடலோர சுவைகளின் தலைசிறந்த வெளிப்பாடாக விளங்கும் இது, முட்டை ஆப்பம் மற்றும் பொல் சம்போலுடன் (Pol Sambol) பரிமாறப்படும். இது கேரளாவின் காயல் பாரம்பரியத்திற்கும் இலங்கையின் கடலோர சமையல் மரபுக்கும் இடையில் ஒரு அற்புதமான சுவைப் பரிமாற்றத்தை உருவாக்கும்.

செஃப் பிள்ளையின் இந்தத் தனித்துவமான படைப்பானது பாரம்பரிய மலபார் நூல் பரோட்டா, உள்ளி தீயல் மற்றும் கொடுகொல சம்பல் (Gotukola sambol) உள்ளிட்ட பாரம்பரிய துணைக் கறிகளும் பரிமாறப்படும். இச்சுவைப்பயணம் இறுதியாக கேரளாவின் இனிப்பு மரபுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு இனிப்பு வகையுடன் (Dessert) இனிதே நிறைவடையும்.

கேரளாவின் இனிப்பு மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ‘உண்ணியப்பம் தேன் முட்டை பலூடா’ (Unniyappam Thene Muttai Falooda) மற்றும் கித்துள் வெல்லம் சேர்த்த ‘கருப்பு ஏலக்காய் சாக்லேட் பிரவுனி’ (Black Cardamom Chocolate Brownie with Kithul Jaggery) ஆகியவை இந்தச் சுவைப்பயணத்தின் இனிப்பான நிறைவாக அமையும். அதனைத் தொடர்ந்து, மசாலா கலந்த மலபார் பிளக் டீ (Malabar black tea) மற்றும் கையால் செய்யப்பட்ட பெட்டிட் ஃபோர்ஸ் (Petit fours) இனிப்புகள் பரிமாறப்பட்டு, இந்த மறக்க முடியாத உணவுத் திருவிழா நிறைவடையும்.

அதேபோல, தாவர அடிப்படையிலான உணவுகளை விரும்புவோருக்காக, இதேபோன்ற சுவைகளுடன் கூடிய முழுமையான சைவ உணவுப் பட்டியலும் வழங்கப்படவுள்ளது.

சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேலான சமையற்கலை அனுபவம் கொண்ட செஃப் பிள்ளை, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பாரம்பரிய உணவு முறைகளை உலகிற்கு கொண்டு செல்வதில் பரவலாக அறியப்படுபவர். லண்டனில் உள்ள மிச்செலின் நட்சத்திர (Michelin-starred) உணவகங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்ட இவர், தற்போது தனது சர்வதேச விருந்தோம்பல் நிறுவனங்களின் ஸ்தாபகராகவும், தலைமைப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.

“இந்த உணவுப் பட்டியல் வரலாறு, நறுமணப் பொருட்கள் மற்றும் பகிரப்பட்ட சமையல் மரபுகளால் இணைக்கப்பட்ட இரண்டு கடலோர கலாச்சாரங்களின் கொண்டாட்டமாகும். இது கேரளாவின் காஸ்ட்ரோனமிக் பாரம்பரியத்தை கௌரவிக்கும் அதேவேளையில் இலங்கையின் துடிப்பான சுவைகள் மற்றும் நேர்த்தியைத் தழுவும் வகையில் சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.” என்று செஃப் சுரேஷ் பிள்ளை தெரிவித்தார்.

“வரலாறு, வாசனைத் திரவியங்கள் மற்றும் பொதுவான சமையல் மரபுகளால் பிணைக்கப்பட்ட இரு கடலோர கலாசாரங்களின் சங்கமமாகவே இந்த உணவுப் பட்டியல் அமைந்துள்ளது. கேரளாவின் சமையல் பாரம்பரியத்தைப் போற்றும் அதேவேளை, இலங்கையின் தனித்துவமான சுவைகளையும் நேர்த்தியையும் ஒருங்கே பிரதிபலிக்கும் வகையில் இது மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என செஃப் சுரேஷ் பிள்ளை தெரிவித்தார்.

இதுதொடர்பில், சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸின் கொழும்பு ஹோட்டல்களுக்கான சிரேஷ்ட துணைத் தலைவரும், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸில் உள்ள சினமன் லைஃப்-இன் பொது முகாமையாளருமான கமல் முனசிங்க கருத்து தெரிவிக்கையில், “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஊடாக, கொழும்பின் சமையல் கலைப் பரப்பை உலகளாவிய ரீதியிலான உயர்தர அனுபவங்கள் மூலம் தொடர்ந்து மறுவரையறை செய்வதே எமது நோக்கோக்காகும். தனித்துவம், புத்தாக்கம் மற்றும் விருந்தினர்களைக் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான அனுபவப் பகிர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய மிகச்சிறந்த உணவு கலாசாரத்தை வடிவமைப்பதில் எமக்குள்ள அர்ப்பணிப்பையே இந்தக் கூட்டுமுயற்சி பிரதிபலிக்கிறது,” என்று தெரிவித்தார்.

உலகத்தரம் வாய்ந்த உணவு கலாசாரத்தை இலங்கையர்களுக்கு வழங்கும் நோக்கில், பவர்ஹவுஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Powerhouse Ventures Pvt Ltd) நிறுவனத்துடன் இணைந்து இந்த விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் இடம்பெறும் இச் சிறப்பு நிகழ்வுக்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு +94 77 962 8132 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தலாம் அல்லது WhatsApp ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.

Minoli Wickramasinghe appointed President of...
City of Dreams பெருமையுடன் வழங்கும்...
ஜனசக்தி பைனான்ஸ், பெண்களின் புத்திசாதுரியமான நிதி...
Janashakthi Foundation and President’s Fund...
ජනශක්ති පදනම සහ ජනාධිපති අරමුදල...
Samsung இன் புதிய Galaxy A57...
Stopping Financial Fraud Before It...
Janashakthi Life strengthens commitment to...
Samsung இன் புதிய Galaxy A57...
Stopping Financial Fraud Before It...
Janashakthi Life strengthens commitment to...
HNB FINANCE PLC, BMPC 2026...