Coca-Cola Beverages Sri Lanka மற்றும் Uber Eats Sri Lanka இணைந்து “Ride for Recycling” திட்டத்தை ஆரம்பித்துள்ளன

Share

Share

Share

Share

Coca-Cola Beverages Sri Lanka Limited (CCBSL) மற்றும் Uber Eats ஆகியன பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றுவதற்காக ‘Ride for Recycling’ என்ற தனித்துவமான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பொதி விநியோகச் சேவை (Courier Partners) பங்காளிகள் கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் உணவகங்களில் இருந்து நேரடியாக PET பிளாஸ்டிக்கை சேகரிக்க முடியும். உலக சுற்றுச்சூழல் தினம் 2023 மற்றும் அதன் தொனிப்பொருளான “பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்” என்ற அடிப்படையில் இந்த கூட்டாண்மை மூலம் நாட்டில் பொறுப்பான கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இரண்டு முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்ததன் வெற்றிக்குக் காரணம்.

மேல் மாகாணத்தில் உள்ள Uber Eats சேவை வலையமைப்பைப் பயன்படுத்தி கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் உணவகங்களில் இருந்து நேரடியாக PET போத்தல் சேகரிப்புத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதற்காக பொதி விநியோகச் சேவை பங்குதாரர்களின் ஒரு பெரிய வலைப்பின்னல் (Courier Partners) அதற்காகத் திறம்பட ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை வீட்டுக் கழிவுப் பிரிவினையை நிவர்த்தி செய்ய உதவுகிறது, இது இலங்கையில் பயனுள்ள கழிவு நிர்வகிப்புக்கு முக்கியமானது. கழிவு நிர்வகிப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் மீள்சுழற்சி செய்வதற்காக தங்கள் PET பிளாஸ்டிக் கழிவுகளை பிரிப்பதில் தீவிரமாக பங்கேற்க வீட்டிலுள்ளவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒரு Courier Partners, PET பிளாஸ்டிக்கை மீள்சுழற்சி செய்வதற்காக நேரடியாக வீடுகளில் இருந்து சேகரிப்பது இதுவே முதல் முறை, இந்த கூட்டாண்மையின் புத்தாக்கத் தன்மையை நிரூபித்துக் காட்டுகிறது.

இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, CCBSL மற்றும் Uber Eats ஆகியவை பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு எதிராக போராடுவதற்கும் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மாற்றத்தை உருவாக்குவதற்கும் பொதுமக்கள் மற்றும் உணவக பங்குதாரர்களை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மீதுள்ள பொறுப்பை ஊக்குவிக்கும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் PET பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அதாவது குளிர்பான போத்தல்கள், தண்ணீர் போத்தல்கள், ஜூஸ் டின்கள், கை மற்றும் பாத்திரங்களைக் கழுவும் திரவ போத்தல்கள் மற்றும் பிளாஸ்டிக் அடையாளக் குறியீடு “1” என பெயரிடப்பட்ட மற்ற பிளாஸ்டிக் போத்தல்கள். Uber Eats Courier Partners ஆர்டரை விநியோகிக்க அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்ததும் இந்த பொருட்களை வழங்கலாம். ஆர்டர்களை எடுக்கும்போது PET போத்தல்களை சேகரித்து Uber Eats Courier Partners களுக்கு வழங்கவும் உணவக பங்குதாரர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக, Courier Partnersகளுக்கு PET போத்தல்களை சேகரிப்பதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட ஒரு தனி பை வழங்கப்பட்டுள்ளது. இது உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக வழங்கப்படும் பையுடன் எவ்வித தொடர்பும் இல்லை. Courier Partners கள் பின்னர் சேகரிக்கப்பட்ட போத்தல்களை நியமிக்கப்பட்ட சேகரிப்பு இடத்திற்கு வழங்குவர். அந்த இடங்களில் CCBSL ‘Give Back Life’ PET பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டி வைக்கப்பட்டுள்ளது மற்றும் PET பிளாஸ்டிக்கை அந்த தொட்டியில் போடலாம். ஒவ்வொரு Courier ஓட்டுநரும் சேகரிக்கப்பட்ட போத்தல்களைக் கண்காணித்து, அவர்கள் சேகரிக்கும் போத்தல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணம் செலுத்துகிறார்கள், அதே நேரத்தில் அவர்களின் முயற்சியில் தீவிரமாகப் பங்கேற்பது மிகவும் பாராட்டப்படுகிறது.

“இலங்கையில் PET பிளாஸ்டிக்கைப் பொறுப்பான சேகரிப்பு, அகற்றல் மற்றும் மீள்சுழற்சி செய்வதற்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளைக் கொண்டு வருவதற்கு Uber உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Uber Eats இன் பரந்த எல்லைகள் மற்றும் எங்கள் கூட்டாளர்களின் அர்ப்பணிப்பு மேலும் பாராட்டப்பட வேண்டும், மேலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க இந்த திட்டத்தில் நாங்கள் பொதுமக்களையும் உணவக உரிமையாளர்களையும் ஈடுபடுத்தலாம்.” என Coca-Cola Beverages Sri Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதீப் பாண்டே தெரிவித்தார்.

Uber Sri Lanka இன் பொது முகாமையாளர் வருண் விஜேவர்தன, “இந்த நிலையான முயற்சியில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு பொது மக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களை நாங்கள் அழைக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் மற்றும் நீர்நிலைகளில் வீசப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. இது தூய்மையான சூழலையும், வட்டப் பொருளாதாரத்தையும் நிறுவ உதவுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், சீரற்ற கழிவுகளை அகற்றுவதற்குப் பதிலாக பொறுப்பான கழிவுகளை அகற்றும் நடைமுறையை சமூகமயமாக்கி, பசுமையான எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தூண்டலாம்.” என தெரிவித்தார்.

Chevron Lanka ஆனது Uber SL...
ஆடைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்:...
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC...
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20...
GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...