இலங்கை புகையிலை நிறுவனம் பிஎல்சி (CTC) 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் Fariyha Subhaniஐ நியமிப்பட்டுள்ளதாக அறிவித்தது.
டிசம்பர் 2021 இல் பதவிக்கு நியமிக்கப்பட்ட மொனிஷா எபிரகாமிடமிருந்து திருமதி. Fariyha முகாமைத்துவப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். CTC இல் இணைவதற்கு முன்பு, Fariyha Upfield (Private) Limited, South & Central Asia, ஒரு முன்னணி தனியார் சமபங்கு உணவு நிறுவனத்திற்கான முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றினார். அவர் யுனிலீவர் பிஎல்சியுடன் 28 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார், அங்கு அவர் புவியியல் மற்றும் பல்வேறு FMCG வகைகளில் பல்வேறு சிரேஷ்ட தலைமைப் பதவிகளை வகித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டில், யூனிலீவருடன் சர்வதேச பணிக்காக தாய்லாந்து சென்றார், அங்கு ஹோம்கேர் அனைத்திற்கும் உலகளாவிய மற்றும் பிராந்திய வர்த்தக நாமங்களுக்கு அவர் பொறுப்பேற்றார். அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவகத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார், பின்னர் 2006 இல் பாகிஸ்தானுக்குத் திரும்பி Unilever Pakistan Foods Ltd (UPFL) வணிகத்தை முன்னெடுத்துச் சென்றார், மீண்டும் 2009 இல் UPFL சபையில் CEO ஆனார். அதேபோல் ஐஸ்கிரீம், டீ உள்ளிட்ட உணவுப் பிரிவின் பணிப்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிறுவனத்திற்குள் ஒரு சிறந்த கலாச்சாரத்தை நிறுவவும், வணிகத்திற்கு லாபகரமான வளர்ச்சியை ஏற்படுத்தவும் அவர் உதவினார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முகாமைத்துவப் பணிப்பாளராக, அவர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை முழுவதும் Upfield (Private) Limited உடன் புதிய வணிகத்தைத் தொடங்கினார். உலகத் தரம் வாய்ந்த குழு, நிலையான வணிக நடைமுறைகள், சில்லறை வியாபாரம் மற்றும் உணவு சேவை வணிகத்தின் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும் அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். திருமதி Subhani Upfieldன் ESG நிகழ்ச்சி நிரலை பிராந்தியம் முழுவதும் வலுவாக செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமபாத்தில் உள்ள Quaid-e-Azam பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டமும், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள முகாமைத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.