ESG உலக உச்சி மாநாடு மற்றும் GRIT விருது வழங்கும் நிகழ்வில் SDG Impact விருதை வென்றது Hayleys Fabric

Share

Share

Share

Share

ஹெய்லீஸ் குழுமத்தின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரும் உறுப்பினருமான Hayleys Fabric, அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற ESG உலக உச்சி மாநாடு மற்றும் வளர்ச்சி, பின்னடைவு, கண்டுபிடிப்பு மற்றும் திறமை (GRIT) விருது வழங்கும் நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான சிறந்த SDG Impact விருதை வென்றதன் மூலம் அதன் பேண்தகைமை பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பிராந்தியத்தின் முன்னணி பேண்தகைமை ஆலோசனை வழங்கும் நிறுவனமான Corpstage, மற்றும் ESG ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகத்தின் மூலம் நிலையான தன்மையை நோக்கி நகரும் சிறந்த நிறுவனங்களை அங்கீகரித்து, அதன் மூலம் பசுமை முயற்சிகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“சிறந்த SDG Impact விருதைப் பெறுவது, உலகளாவிய பேண்தகைமை நடைமுறைகளில் எங்கள் குழு எவ்வளவு அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த விருது ESGயின் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய 17 ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (UNSDGs) 14க்கான எங்கள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.

“காலநிலை மாற்றம் குறித்து அக்கறை எடுத்து முன்னேறுவது நமது பொறுப்பு. Hayleys Fabric இல் நாங்கள் எப்போதும் ESG கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கின்றோம். அண்மையில், அனைத்து செயல்பாடுகளிலும் 75% புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்துகிறோம், இது பல ஜவுளி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை மிஞ்சுகிறது. அதன் மூலம் பசுமை வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்க முடிந்தது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் நமது நாட்டிற்கு நிலையான எதிர்காலத்தை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என Hayleys Fabric நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஹான் குணதிலக்க தெரிவித்தார்.

இதற்கு விண்ணப்பிக்க, அவர்கள் ESG நடவடிக்கைகளுக்கான தங்கள் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்பதுடன் இந்தத் திட்டங்கள் ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சி நிரலுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதையும், அவர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான அவர்களின் முயற்சிகளையும் அவர்கள் முன்வைக்க வேண்டும்.

Hayleys Fabric அதன் ESG திட்டம் மற்றும் அது செயல்படுத்தும் திட்டங்களின் விரிவான விளக்கக்காட்சியின் காரணமாக சிறந்த SDG Impact விருதை வென்றது. ISO 50001 சான்றிதழ், அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் முன்முயற்சியில் (Science-Based Targets Initiative – SBTi) வலுவான அர்ப்பணிப்பு மற்றும் அதன் செயல்பாடுகளுக்கு 75% புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்துவது போன்ற ஈர்க்கக்கூடிய பேண்தகைமை உத்திகள் இந்த சாதனையின் பின்னணியாகும்.

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தத்தின் (UNGC) CEO Water Mandate மூலம் தண்ணீரைச் சேமிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை நிறுவனம் வலியுறுத்தியது. இது ஆறு முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. Hayleys Fabric, Zero Discharge of Hazardous Chemicals (ZDHC) திட்டத்தில் சேர்வதன் மூலம் நீர் மற்றும் இரசாயனங்களைக் கையாள்வதில் அதன் வலுவான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

தியத்துரு பூங்கா, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படும் செயற்திட்டங்கள் போன்ற முன்னெடுப்புகளில் அதன் செயலூக்கமான ஈடுபாட்டினால் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. Lagenandra பாதுகாப்பு மற்றும் சூழலியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்தல் உள்ளிட்ட இந்த முயற்சிகள், நிலைத்தன்மைக்கு Hayleys Fabric இன் பங்களிப்பை வலியுறுத்துகின்றன.

சமூகரீதியில், Hayleys Fabric வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது, சரியான நேரத்தில் விநியோகம் செய்தல் மற்றும் Tier 1 சர்வதேச ஜவுளி பிராண்டுகளின் தரங்களைப் பேணுதல். நிறுவனம் விநியோக விழிப்புணர்வு மற்றும் ZDHC போன்ற இணக்கத்தை மையமாகக் கொண்டு பல்வேறு கல்வித் திட்டங்கள் மூலம் வலுவான விநியோக உறவுகளை உருவாக்கியுள்ளது. மேலும், Hayleys Fabric புத்தக நன்கொடை திட்டங்கள், இரத்த தானம் திட்டங்கள் மற்றும் தூய்மைப்படுத்தும் முயற்சிகள் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

LifeCode கட்டமைப்பை உள்ளடக்கிய வலுவான நிர்வாகக் கட்டமைப்புடன், Hayleys Fabric தனது வணிக நடைமுறைகளை பொறுப்புடன் நடத்துகிறது. நிறுவனம் GRI வருடாந்திர அறிக்கை தரநிலைகளை ஏற்றுக்கொண்டது மற்றும் SASB அறிக்கையிடலை இந்த ஆண்டு ஆரம்பித்தது. அவர்களின் விரிவான சுற்றுச்சூழல் முகாமைத்துவ அமைப்புகளான ISO 14001 மற்றும் HIGG FEM EMS போன்றவை அவற்றின் நிர்வாகத்தையும் செயல்பாடுகளையும் பலப்படுத்தியுள்ளன. இது அவதான சூழ்நிலைகளை சிறப்பாக நிர்வகிக்கவும் பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெறவும் அவர்களுக்கு உதவியுள்ளது.

 

Brewing a better planet: Bogawantalawa...
Samsung Sri Lanka Unveils Galaxy...
Dipped Products unveils the worlds-first...
Samsung Sri Lanka Unveils Grand...
සන්ෂයින් හෝල්ඩිංග්ස් ‘SUN සම්මාන’ උළෙලේදී...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV...