‘For You Feed’-ஐ தனிப்பயனாக்கவும், பாதுகாக்கவும் புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும் TikTok

Share

Share

Share

Share

TikTok தனது For You Feed அம்சத்திற்கான புதிய தனிப்பயனாக்கல் கருவிகளை அறிமுகப்படுத்துகிறது. இப்புதிய அம்சங்கள் பாவனையாளர்களுக்கு அவர்களின் உள்ளடக்க அனுபவத்தில் மேலும் அதிக கட்டுப்பாடு அளிக்கின்றன. பாவனையாளர்கள் தங்கள் விருப்பங்களை ஆழமாக ஆராயவும், தேவையற்ற உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தவும், மற்றும் செயலியின் பரிந்துரை முறைகளை நன்றாகப் புரிந்துகொள்ளவும் இந்த மாற்றங்கள் உதவுகின்றன. இது TikTok-இன் பாவனையாளர் அதிகாரமளிப்பிற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும்.

For You Feed (FYF) என்பது TikTok அனுபவத்தின் அடிப்படை அம்சமாக விளங்குகிறது, மக்களை அவர்கள் விரும்பும் உள்ளடக்கம், சமூகங்கள் மற்றும் படைப்பாளர்களுடன் தொடர்புபடுத்துகிறது. இலங்கையில், இது மக்கள் புதிய ஆர்வங்களை கண்டறியும் இடமாகவும், படைப்பாளர்கள் புதிய சமூகங்களை உருவாக்கும் தளமாகவும் உள்ளது. Gangulee Walpola, Saasha Karunarathne போன்ற படைப்பாளர்கள் உடல் நேர்மறை, சமூக நீதி போன்ற முக்கிய விவாதங்களை முன்னெடுக்கின்றனர். இலங்கையில் பல அரசு சாரா நிறுவனங்களும் நல்ல நோக்கங்களுக்காக TikTok-ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன.

தலைப்புகளை நிர்வகித்து விரும்பியவற்றை ஆராய புதிய வழி
TikTok ‘தலைப்புகளை நிர்வகிக்க’ எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது பாவனையாளர்கள் படைப்பாற்றல் கலைகள், சுற்றுலாப் பயணம், இயற்கை மற்றும் விளையாட்டுகள் போன்ற 10-க்கும் மேற்பட்ட பிரபலமான பிரிவுகளுடன் தொடர்புடைய காணொளிகள் தங்களின் Feed இல் எத்தனை முறை தோன்ற வேண்டும் என்பதை சரிசெய்ய அனுமதிக்கிறது. உள்ளடக்கம் முற்றிலும் அகற்றப்படாவிட்டாலும், பாவனையாளர்கள் தற்போது தங்கள் மாறிவரும் விருப்பங்களின் அடிப்படையில் தோன்றும் அளவை நுணுக்கமாக சரிசெய்து, தாங்கள் விரும்பும் தலைப்புகளில் உள்ள படைப்பாளர்களை எளிதில் கண்டறியலாம். இது உள்ளூர் சுற்றுலாப் பயணம் அல்லது உள்ளூர் சமையலை விரும்பும் சமூகங்களுக்கு Shenelle Rodrigo, Ushani Devni போன்ற படைப்பாளர்களை எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.

Smart முக்கிய சொல் வடிகட்டிகள் (Smart keyword filters)
TikTok ‘Smart keyword filters’ எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதிய கருவியை அறிமுகப்படுத்துகிறது. இது தற்போதைய சொல் வடிகட்டிகளை மேம்படுத்தி, உலகளவில் 200 மில்லியனுக்கும் அதிகமான சொற்களை தடுக்க உதவுகிறது. இப்புதிய அம்சம் ஒத்த சொற்கள் மற்றும் தொடர்புடைய சொற்களை தானாகவே உள்ளடக்கி, பாவனையாளர்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. விரைவில் TikTok வடிகட்டி எல்லையை (filter limit) 100-லிருந்து 200 சொற்களாக உயர்த்தி, மொத்த திருத்த (bulk editing) வசதிகளையும் அறிமுகப்படுத்த உள்ளது.

FYF பற்றிய கல்வி வழிகாட்டி
வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், TikTok FYF-ஐ புரிந்துகொள்ளவும், மேலாண்மை செய்யவும் உதவும் கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகளை ஒருங்கிணைக்கும் கல்வி வழிகாட்டியை வெளியிடுகிறது. உங்களுக்கான how the for You feed works எவ்வாறு இயங்குகிறது என்பதை பாவனையாளர்கள் புரிந்துகொள்ள உதவும் TikTok-இன் தொடர்ச்சியான முயற்சியின் பகுதியாக இது அமைகிறது. இதில் உள்ளடக்கம் ஏன் பரிந்துரைக்கப்பட்டது (why content was recommended) என்பதைக் காட்டும் அம்சங்களும், உலகெங்கிலும் 180 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள கல்வி காணொளிகளும் அடங்கும்.

இது குறித்து TikTok பேச்சாளர் ஒருவர் கூறியதாவது, The For You Feed, TikTok-ஐ தனித்துவமான தளமாக மாற்றுகிறது. இங்கு புதிய விருப்பங்களை கண்டறியவும், செழிப்பான சமூகத்தை உருவாக்கவும் முடியும். பாவனையாளர்கள் பாதுகாப்பான, தனிப்பயனாக்கப்பட்ட சூழலில் தங்களுக்கு பிடித்த உள்ளடக்கம், படைப்பாளர்கள் மற்றும் பொழுதுபோக்குகளை கண்டறிய உதவும் கருவிகளை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.’ என தெரிவித்தார்.

பொறுப்புடன் உள்ளடக்கத்தைப் பரிந்துரைத்தல்
இந்த அனைத்து புதுப்பிப்புகளும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் கணக்குகள் இரண்டிற்கும் அறிமுகப்படுத்தப்படும். இவை TikTok-இல் சிறந்த FYF அனுபவத்தைப் பெற உதவும் ஏற்கனவே உள்ள கருவிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றில் அடங்குபவை:

பாவனையாளர்களுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கத்தை FYF-இல் பரிந்துரைப்பதைத் தடுக்க கடுமையான FYF தகுதி விதிமுறைகளைப் பயன்படுத்துதல், மற்றும் Content Levels மூலம் முதிர்ச்சியான அல்லது சிக்கலான கருப்பொருள்கள் இளம் வயதினரை அடைவதைத் தடுக்க முயற்சித்தல்.

பாவனையாளர்கள் தங்கள் FYF-ஐப் புதுப்பிக்க, ஒரு காணொளியில் ‘விருப்பமில்லை’ என்பதைக் குறிக்க அல்லது பரந்த பார்வையாளர்களுக்கு வசதியாக இல்லாத உள்ளடக்கத்தை மேலும் கட்டுப்படுத்த ‘கட்டுப்படுத்தப்பட்ட முறை’யை (Restricted Mode) இயக்க உதவும் கூடுதல் FYF கருவிகளை வழங்குதல்.

எப்போதாவது பார்க்கும்போது சிக்கலில்லாத, ஆனால் அதிகமாகப் பார்த்தால் பிரச்சினையாக மாறக்கூடிய உள்ளடக்க வகைகளின் தொடர்ச்சியான பரிந்துரைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்தல் – உதாரணமாக, தீவிர உடற்பயிற்சி தொடர்பான உள்ளடக்கம்.

இந்த புதுப்பிப்புகள் அனைத்தும் TikTok-இன் அர்த்தமுள்ள கண்டுபிடிப்பை இயலச்செய்யும் அதேவேளை, பாவனையாளர்களுக்கு அவர்களின் அனுபவத்தின் மீது அதிக கட்டுப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டை காட்டுகின்றன.

Mahindra Ideal Finance நிறுவனம் மற்றும்...
Huawei’s E-band Microwave RTN 3800...
Asia-Pacific Business Leaders to Accelerate...
Beyond the Classroom: Rethinking How...
සමර්සෙට් වතුයාය, කිසිදා නොබිඳුණු උරුමයක...
Janashakthi Life නැවතත් ICA ජාත්‍යන්තර...
ජාත්‍යන්තර තරුණ දිනයේදී තරුණ පරපුරේ...
Janashakthi Finance සමාගමේ ප්‍රධාන මූල්‍ය...
Janashakthi Life නැවතත් ICA ජාත්‍යන්තර...
ජාත්‍යන්තර තරුණ දිනයේදී තරුණ පරපුරේ...
Janashakthi Finance සමාගමේ ප්‍රධාන මූල්‍ය...
Built for the Game: Carnage...