GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில், டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் HNB

Share

Share

Share

Share

விசேட லீசிங் தீர்வுகளுடன், இலங்கையில் GWM வாகன உரிமையை விரிவுபடுத்தும் நோக்கில், HNB PLC நிறுவனம் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் உத்திசார் கூட்டுறவில் இணைகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த HNB நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவரும் நுகர்வோர் வங்கித்துறைத் தலைவருமான காஞ்சன கருணாகம, நம்பகமான நிதி நிறுவனம் எனும் முறையில், எங்கள் வாடிக்கையாளர்களை மேன்மைப்படுத்த நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடனான எங்கள் கூட்டுறவு மூலம், போட்டித்திறன் மிக்க குத்தகைத் தீர்வுகள் மற்றும் வலுவான நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக, GWM வாகனங்களை நம்பிக்கையுடன் சொந்தமாக்கிக் கொள்வதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு உருவாக்குகிறோம்.” என தெரிவித்தார்.

டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (தனியார்) நிறுவனம் மூலம் GWM வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், கவர்ச்சிகரமான லீசிங் வட்டி விகிதங்கள், விரைவான அனுமதிச் செயல்முறைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள HNB கிளைகள் மூலம் வழங்கப்படும் ஆலோசனை உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இதன் கீழ் HNB General Insurance மூலம் வழங்கப்படும் தள்ளுபடி வாகனக் காப்புறுதி கட்டுப்பணங்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் மலிவு விலை மற்றும் மன நிம்மதி மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. அத்துடன், HNB நிறுவனத்திடமிருந்து GWM வாகனங்களை வாங்கி லீசிங் வசதிகளைப் பெறும் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு, HNB இன்சூரன்ஸ் நிறுவனம் இலவச ஆயுள் காப்புறுதி பாதுகாப்பினை வழங்கும்.

டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (தனியார்) நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் யசந்த அபேகோன், இந்தக் கூட்டுறவு குறித்து கருத்து தெரிவிக்கையில், “புதிய பொறியியல் தொழில்நுட்பம், நவீன வடிவமைப்புகள் மற்றும் உயர்தரத் தரநிலைகளுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களை அறிமுகப்படுத்தி, இந்தக் கூட்டுறவு மூலம் இலங்கைக்கு GWM வாகனங்களைக் கொண்டுவர முடிந்தமையில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். HNB ஊடாக நெகிழ்வான லீசிங் தீர்வுகளை வழங்குவதன் மூலம், பன்னாட்டுத் தரத்திலான வாகனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க முடிகிறது.” என தெரிவித்தார்.

டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (தனியார்) நிறுவனம், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட நன்மைகளுடன் நிதிச் சலுகையை நிறைவு செய்யும். HNBஇலிருந்து விநியோக ஒப்பந்தத்தைச் சமர்ப்பித்து, வாடிக்கையாளரின் முன்பணத்தை நிறைவு செய்தவுடன், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இலவச வாகனப் பதிவு இதில் அடங்கும். மேலும், வாடிக்கையாளர்கள் இரண்டு கட்டணமில்லா வாகன சேவைகளைப் பெறுவார்கள்.

இந்தக் கூட்டுறவின் மூலம், HNB மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (தனியார்) நிறுவனம், எளிதான லீசிங் தீர்வுகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள மதிப்பை உருவாக்குவதுடன், இலங்கையின் மோட்டார் வாகன மற்றும் நிதிச் சேவைத் துறைகளில் தரங்களை உயர்த்துவதற்கும் செயல்படுகிறது.

Hope Is Just a Scroll...
Hope Is Just a Scroll...
Samsung Sri Lanka 2026 අලෙවි...
වාහන සඳහා මූල්‍ය පහසුකම් සැලසීමට...
ඔබ අප කෙරෙහි තැබූ විශ්වාසය...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய...