HNB FINANCE பணிப்பாளர் சபைக்கு சிவராஜா நந்தகுமார் மற்றும் திமுத்து சுபூன் டயஸ் இணைகின்றனர்

Share

Share

Share

Share

HNB FINANCE PLC நிறுவனத்தின் சுயாதீன மற்றும் நிறைவேற்று அதிகாரம் அல்லாத பணிப்பாளராக சிவராஜா நந்தகுமார் அவர்களும் பொன்னேஹென்னத்திகே துதிமுத்து சுபூன் டயஸ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி முகாமைத்துவ நிறுவனத்திலிருந்து வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற நந்தகுமார் அவர்கள், வங்கித்தொழில் மற்றும் நிதித் துறை சம்பந்தமாக இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினரும் ஆவார்.

இவர் தற்போது ஹட்டன் நேஷனல் வங்கியின் நிறைவேற்று உதவித் தலைவர் மற்றும் பிரதான வணிக செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி, மையப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மற்றும் துணைச் சேவைகள் உள்ளிட்ட வங்கியின் ஒட்டுமொத்த செயல்பாட்டு நடவடிக்கைகளுக்குத் தலைமைத்துவம், உத்திசார் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றை வழங்குகிறார்.

Lanka Financial Services Bureau Limited நிறுவனத்தின் சுயாதீன, நிறைவேற்று அதிகாரம் அல்லாத பணிப்பாளராகவும் பணியாற்றும் நந்தகுமார் அவர்கள், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் குழு தணிக்கைக் குழுவின் செயல்பாட்டு உறுப்பினரும் ஆவார்.

ஹட்டன் நேஷனல் வங்கியில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவம் கொண்ட இவர், கிளை வங்கித்தொழில், செயற்பாட்டு முகாமைத்துவம், பிராந்தியத் தலைமைத்துவம், தனிநபர் வங்கித்தொழில் மற்றும் வணிக மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் நிறுவனத் தலைமைப் பதவிகளை வகித்துள்ளார்.

வங்கியின் வளர்ச்சி, இயக்கத் திறன், வாடிக்கையாளர் அணுகுமுறையை விரிவுபடுத்துதல் மற்றும் வணிக விரிவாக்கம் ஆகியவற்றிற்காக அவர் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

திமுத்து சுபூன் டயஸ் அவர்கள், பிரித்தானியாவின் சார்ட்டர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மார்க்கெட்டிங்கில் இருந்து சந்தைப்படுத்தல் தொடர்பான பட்டதாரி டிப்ளோமாவைப் பெற்றுள்ளார், மேலும் அந்நிறுவனத்தின் பட்டைய சந்தைப்படுத்தல் அதிகாரியும் ஆவார். இவர், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பொது வாழ்நாள் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

டயஸ் அவர்கள் தற்போது ஹட்டன் நேஷனல் வங்கியின் நிறைவேற்று உதவித் தலைவர் மற்றும் வலையமைப்பு வணிகப் பிரதானியாகப் பணியாற்றி, வங்கியின் கிளை வலையமைப்பு மற்றும் விநியோக பிரிவுகளுக்கு உத்திசார் தலைமைத்துவத்தையும் ஒட்டுமொத்த வழிகாட்டுதலையும் வழங்குகிறார்.

ஹட்டன் நேஷனல் வங்கியில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவம் கொண்ட இவர், சந்தையிடல் மற்றும் வலையமைப்பு நிர்வகிப்பை மையமாகக் கொண்ட பல சிரேஷ்ட மற்றும் நிறுவன நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார்.

வங்கியின் சந்தை இருப்பை வலுப்படுத்துதல், வாடிக்கையாளர் அணுகுமுறையை விரிவுபடுத்துதல், கிளை வலையமைப்பை மேம்படுத்துதல் மற்றும் வணிக வளர்ச்சியை உயர்த்துதல் ஆகியவற்றிற்கு இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

சிவராஜா நந்தகுமார் மற்றும் திமுத்து சுபூன் டயஸ் அவர்களை பணிப்பாளர் சபைக்கு அன்புடன் வரவேற்கும் HNB FINANCE நிறுவனம், அவர்களது விரிவான வங்கித்தொழில் அனுபவம், உத்திசார் நோக்கு மற்றும் தொழில்முறை அறிவு ஆகியவை நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது.

Evolution Auto இலங்கையில் AVATR 07...
New Media Solutions Pvt Ltd...
HNB FINANCE, Toyota Lanka forge...
Sri Lanka’s terror law could...
Sri Lanka’s No.1 NEV Brand...
JAAF welcomes PUCSL’s call for...
Connect to Care brings global...
Sunshine Healthcare expands into digital...
JAAF welcomes PUCSL’s call for...
Connect to Care brings global...
Sunshine Healthcare expands into digital...
Guardrails, Not Walls: What Teen...