இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது 78வது கிளையை அண்மையில் பிலியந்தலையில் திறந்து வைத்துள்ளது.
HNB FINANCEஇன் புதிய கிளை இல. 97, ஹொரண வீதி, பிலியந்தலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனூடாக தங்கக் கடன் வசதிகள், லீசிங் வசதிகள், சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்கள், வணிகக் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் உட்பட பலதரப்பட்ட நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
பிலியந்தலை பிரதேசத்தில் அதிகரித்து வரும் தங்கக் கடனுக்கான தேவைக்கு இணங்க, இந்த புதிய கிளையில் HNB FINANCE தங்கக் கடன் அலகும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் தங்கக் கடன் சேவைகளான “Gold Loan” Gold Plan மற்றும் VIP Gold Loan ஆகியவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள அனைத்து தங்க கடன் சேவைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. HNB FINANCE தங்கக் கடன் சேவையானது குறைந்தபட்ச வட்டியில் ஒரு தங்கப் பவுணுக்கு அதிகபட்ச முன்பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, மேலும் இந்த புதிய தங்கக் கடன் சேவை அலகு சேவைக் கட்டணங்கள் அல்லது பிற மறைமுகக் கட்டணங்கள் இல்லாமல் நம்பகமான பரிவர்த்தனையைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
HNB FINANCE பிலியந்தலை கிளையின் திறப்பு விழாவில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் பிரதம அதிதியாகவும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த, உதவிப் பொது முகாமையாளர் பெத்தும் சம்பத் குரே மற்றும் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் சிரேஷ்ட அதிகாரிகள் நிர்வாகிகள், கிளை முகாமையாளர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“HNB FINANCE ஐப் பொருத்தவரையில் எங்கள் நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான நிதிச் சேவையை வழங்குவதாகும். பிலியந்தலையில் உள்ள இந்த புதிய கிளையின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த நிதி சேவை அனுபவத்தையும், மிக இலகுவாக அணுகக் கூடிய வசதிகள் தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளுடன் சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த புதிய கிளையை வாடிக்கையாளர்களுக்கு உகந்த சேவை மத்திய நிலையமாக மேம்படுத்துவதில் எங்களின் பணிவான மகிழ்ச்சி.” என HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.